Published:Updated:

ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகளைப் பெற்ற பெண்! 

ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகளைப் பெற்ற பெண்! 
ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகளைப் பெற்ற பெண்! 

ரே பிரசவத்தில்,  இராக்கைச் சேர்ந்த பெண்ணுக்கு 6 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளன. இராக்கின் கிழக்கு மாகாணத்தில் உள்ள தியாலி என்ற பகுதியைச் சேர்ந்தவர், யுசூப் பத்லே. இவரது மனைவிக்கு வயது 25. இத்தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில், யுசூப் பத்லேவின் மனைவி மீண்டும் கர்ப்பமானார். கடந்த சில தினங்களுக்கு முன், அங்குள்ள மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு அடுத்தடுத்து 6 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்தன. சுகப்பிரசவத்தில் பிறந்த 7 குழந்தைகளுக்கும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்கள் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

"இதையும் சேர்த்து எங்களுக்கு 10 குழந்தைகள் உள்ளனர். ஏற்கெனவே  3 குழந்தைகளும் சிறு வயதினர் என்பதால், அனைவரையும் ஒரே நேரத்தில் கவனித்துக்கொள்ள வேண்டும். இந்தக்  குழந்தைகளே எங்களுக்குப் போதும்’’ என்கிறார் யுசூப் பத்லே. இதேபோல, கடந்த 1997-ம் ஆண்டில் அமெரிக்காவின்  லோவா பகுதியைச் சேர்ந்த கென்னி மற்றும் பாப்பி மெக்கே தம்பதிக்கு 7 குழந்தைகள் பிறந்தன. அதில் 3 பெண், 4 ஆண் குழந்தைகள். இக்குழந்தைகள் நலமுடன் உள்ளனர்.

கடந்த நவம்பரில்தான் 7 குழந்தைகளும் பிறந்தநாளைக் கொண்டாடினர். கடந்த ஆண்டு, லெபனான் நாட்டில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பல்கலைக்கழக மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு 6 குழந்தைகள் பிறந்தன. இதில் 3 பெண் குழந்தைகள், 3 ஆண் குழந்தைகள் ஆவர்.