Published:Updated:

தாய்மை உணர்வு வருகிற வயது இது! - ஆனந்தம் விளையாடும் வீடு - 23

தாய்மை உணர்வு வருகிற வயது இது! - ஆனந்தம் விளையாடும் வீடு - 23
பிரீமியம் ஸ்டோரி
தாய்மை உணர்வு வருகிற வயது இது! - ஆனந்தம் விளையாடும் வீடு - 23

தனசேகர் கேசவலு, குழந்தைகள்நல மருத்துவர்

தாய்மை உணர்வு வருகிற வயது இது! - ஆனந்தம் விளையாடும் வீடு - 23

தனசேகர் கேசவலு, குழந்தைகள்நல மருத்துவர்

Published:Updated:
தாய்மை உணர்வு வருகிற வயது இது! - ஆனந்தம் விளையாடும் வீடு - 23
பிரீமியம் ஸ்டோரி
தாய்மை உணர்வு வருகிற வயது இது! - ஆனந்தம் விளையாடும் வீடு - 23

குழந்தைகளின் உணர்வுகளை இங்கே யாரும் புரிந்துகொள்வதே இல்லை. குழந்தைகளுக்கென்று தனிப்பட்ட உணர்வுகள் இருக்கின்றன என்பதே சிலருக்குத் தெரிவதில்லை. அந்த உணர்வுகளைப் பற்றித்தான் இந்த இதழில் பேசப்போகிறேன்.  

தாய்மை உணர்வு வருகிற வயது இது! - ஆனந்தம் விளையாடும் வீடு - 23

ஐந்து முதல் ஆறு வயதுவரைக்கும் ‘நீ சரியான சேட்டை’; ‘நீயொரு வாலு’ போன்ற விமர்சனங்களைப் புரிந்துகொள்ள ஆரம்பிக்கிற குழந்தைகள், அடுத்த ஒரு வருடத்தில் அதை ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள். அதனால், 6-7 வரையான வயதை ‘தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டால், அவற்றை ஏற்றுக்கொள்ளத் தடையிருக்கிற வயது’ என்று சொல்வோம். குழந்தைகள் ஏன் திடீரென்று இப்படி நடந்துகொள்ள வேண்டும் என்கிறீர்களா? வயது ஏற ஏற, குழந்தைகளின் மனதில் இன்னும் தெளிவு அதிகமாக ஆரம்பிக்கும். விளைவு, ‘இவங்க யாரு என்னைத் தப்பு சொல்றதுக்கு?’ என்ற கேள்வியும் எழ ஆரம்பிக்கும். இந்த வயதின் முக்கியமான பிரச்னை இதுதான். அதனால், குழந்தைகளைப் பற்றிய விமர்சனங்களைப் பக்குவமாகச் சொல்ல ஆரம்பியுங்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தாய்மை உணர்வு வருகிற வயது இது! - ஆனந்தம் விளையாடும் வீடு - 23



இதுவரை மற்றவர்களிடமிருந்து பாசத்தை அனுபவித்துவந்த குழந்தைக்கு, தன்னாலும் மற்றவர்களுக்குப் பாசத்தைக் கொடுக்க முடியும் என்பது தெரிய ஆரம்பிக்கிற வயது இது. தன்னைவிடச் சின்னக் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும் என்கிற உணர்வு மேலோங்கும். அதனால்தான் இந்த வயதுக் குழந்தைகள் தன் தங்கச்சிப் பாப்பா, தம்பிப் பாப்பாவை தூக்கிச் சுமப்பதையும், பத்திரமாகப் பார்த்துக்கொள்வதையும் விரும்பிச் செய்கிறார்கள். சுருக்கமாகச் சொன்னால், ஒரு குழந்தையின் மனதுக்குள் தாய்மை உணர்வு வர ஆரம்பிக்கிற வயது இது. தன் தம்பியையோ, தங்கச்சியையோ யாராவது அடித்துவிட்டால், திட்டிவிட்டால் சண்டைக்கும் செல்வார்கள்.

நட்பு வட்டத்தை விரும்ப ஆரம்பிப்பார்கள். தன் நண்பர்கள் தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள். அதனால், விட்டுக்கொடுத்துச் செல்லும் தன்மையும் இந்த வயதில் வர ஆரம்பிக்கும். தன்னுடைய பெஸ்ட் ஃபிரெண்டு என்று ஒருவரைக் குறிப்பிடுவார்கள். அவனு/ளுக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்று நினைப்பார்கள். பட்டும்படாமல் இருப்பது என்றோர் இயல்பு இருக்கிறதல்லவா... அந்த இயல்பையும் சில இடங்களில் வெளிப்படுத்துவார்கள். பணிவுகாட்டக் கற்றுக்கொள்வார்கள். தன் வேலையில், அதாவது படிப்பில் கவனமாக இருக்க ஆரம்பிப்பார்கள். அதனால்தான், ஆறு முதல் ஏழுக்குட்பட்ட வயதில் நம் ஊர்க் குழந்தைகள் எழுத, படிக்க என இரண்டு விஷயங்களையும் தெளிவாகச் செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள்.

தாய்மை உணர்வு வருகிற வயது இது! - ஆனந்தம் விளையாடும் வீடு - 23

இந்த விஷயத்தை நான் சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள். இந்த வயதில் பணத்தின் மதிப்பு குழந்தைகளுக்குத் தெரிய ஆரம்பித்துவிடும். 50 ரூபாயைவிட 100 ரூபாய் வேல்யூ அதிகமானது என்று குறிப்பாகத் தெரியாது. ஆனால், ‘அஞ்சு சின்ன நம்பர், அதனால அது சின்னக் காசு; பத்து அதைவிடப் பெரிய நம்பர், அதனால அது பெரிய காசு’ என்று அவர்களுடைய மொழியில் அதைச் சொல்வார்கள்.

நகைச்சுவை உணர்வு அதிகமாக இருக்கும். ஆனால், தன்னைப் பற்றிய கேலி, நையாண்டி என்றால், அதை அவர்களுடைய உணர்வு ஏற்றுக்கொள்ளாது. அவர்களுடைய சுயமரியாதையை உடைக்கும்படியான உணர்ச்சி துஷ்பிரயோகத்தைச் (Emotional Abuse) செய்யாதீர்கள். உங்கள் குழந்தையை இந்த வயதில் எள்ளி நகையாடுதல் வேண்டவே வேண்டாம். தெளிவாகச் சொல்கிறேன்... இந்த வயதுக்கு தோதுபடாத ஒரு முக்கியமான விஷயம் இதுதான்.  

தாய்மை உணர்வு வருகிற வயது இது! - ஆனந்தம் விளையாடும் வீடு - 23

ஆறு முதல் ஏழு வயதுவரையிலான குழந்தைகளைப் பற்றி இரண்டு ஆச்சர்யமான தகவல்களை உங்களுக்குச் சொல்லப்போகிறேன். ‘நீ என்னை அடிச்சிட்டல்ல, நானும் உன்னைத் திருப்பியடிப்பேன்’ என்கிற பழிக்குப் பழி வாங்குகிற உணர்வு எழுகிற வயது இதுதான். அதே நேரம் கோபத்தையும் ஆத்திரத்தையும் கட்டுப்படுத்திக்கொள்ளும் திடமும் மிக அதிகமாக இருக்கும். நீங்கள் திட்டுவதற்கெல்லாம், கேலி செய்வதற்கெல்லாம் அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்றால், தங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்.  இவை தவிர கட்டுக்கோப்பு, ஒழுக்கம், என்ன பேச வேண்டும், என்ன பேசக் கூடாது என்று ஒரு தனிமனிதனுக்கான அடிப்படை ஒழுக்க விதிகள் படிப்படியாக உங்கள் பிள்ளைகளுக்குத் தெரிய ஆரம்பிக்கிற வயது இது.

குழந்தைகளுக்கு சௌகரியமான மொழியில் நிறைய பேசவையுங்கள். ‘இலை ஏன் பச்சை நிறத்தில் இருக்கு; பூக்கள் ஏன் பல நிறங்களில் இருக்கு’ என்று கூர்மையாக யோசிக்க ஆரம்பிப்பார்கள். அவற்றை உங்களிடம் கேள்விகளாகக் கேட்கவும் ஆரம்பிப்பார்கள். அதனால்தான், இந்த வயதில் குழந்தைகள் கணிதப் பயிற்சிகளை நன்றாகச் செய்வார்கள்.

தாய்மை உணர்வு வருகிற வயது இது! - ஆனந்தம் விளையாடும் வீடு - 23

வாழ்க்கை ஒரு வெண்மையான தாள் மாதிரி. அந்தத் தாளில் அதிகபட்ச உணர்வுகளை எழுதுகிற வயது இதுதான். அதனால், உங்கள் குழந்தை இந்த வயதிலிருந்தால், அவர்களுடன் நிறைய நேரம் செலவழியுங்கள்!

(வளர்த்தெடுப்போம்...)

ஆ.சாந்தி கணேஷ் - படங்கள்:மதன்சுந்தர்