காலையும் மாலையும் ஓட்டப்பயிற்சி மேற்கொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. அப்படி ஓடும்போது கவனிக்கவேண்டிய விஷயங்கள்...

*தலை நேராக இருக்கட்டும். கண்கள் முன்னோக்கி இருக்க வேண்டும்.
*மார்பு முன்னோக்கி இருக்கட்டும். தோள்கள் பின்புறம் தளர்வாக இருக்க வேண்டும்.
*நிமிடத்துக்கு 180 அடிகள் ஓடினால் போதும்.
*கைகள் உடலையொட்டி இருக்கட்டும். கால்களுக்கும் கைகளுக்கும் 90 டிகிரி சாய்வு முக்கியம்.
*கைகளை முன்னோக்கியும் பின்னோக்கியும் நகர்த்த வேண்டும். பக்கவாட்டில் நகர்த்தக் கூடாது.
*இடுப்பை நேராக வைக்க வேண்டும்.
*சமமான நிலையில் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
* முட்டுகள் கொஞ்சமாக மடங்கிய நிலையில் ஓட வேண்டும்.
*குதிகால் அல்லது கட்டை விரல் தரையில் படுவதைவிட, பாதத்தின் நடுப்பகுதி தரையில் படுவது சிறப்பு.
*கணுக்கால் பகுதி நகராமலும் பிற பகுதிகள் தளர்வாகவும் இருக்கட்டும்.
