Published:Updated:

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி?

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி?

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி?

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி?

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி?

Published:Updated:
குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி?
குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி?

ம் குழந்தைகள் போட்டிகள் நிறைந்த சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். போட்டிகளும், படிப்பின் மீதான அழுத்தமும் குழந்தைகளின் உலகத்தைச் சுருக்கிவிட்டன. வெயிலிலும் மழையிலும் ஓடியாடி விளையாடவேண்டிய குழந்தைகளை கம்ப்யூட்டர், மொபைல் போன்றவை அறைக்குள்ளேயே கட்டிப்போட்டுவைத்திருக்கின்றன. இந்த வாழ்க்கைமுறை மாற்றங்கள் ஒரு பக்கமெனில், நம் உணவுமுறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் இன்னொரு பக்கம். கொழுப்புச்சத்து நிறைந்த, ஆரோக்கியமற்ற உணவுகளே குழந்தைகளைச் சூழ்ந்திருக்கின்றன. இந்த உணவுப்பழக்கம் குழந்தைகளின் உடல்நலனுக்கு மட்டுமின்றி, மனநலனுக்கும் சவாலாக மாறியிருக்கிறது. குறிப்பாக, நினைவாற்றல் பாதிப்பு. இன்றைய குழந்தைகள் பெரிதும் எதிர்கொள்கிற சவால் இது. படிப்பு உட்பட வாழ்க்கையின் எல்லா நகர்வுகளுக்கும் நினைவாற்றல் அவசியம். 

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குழந்தைகளின் நினைவாற்றலை மேம்படுத்துவது எப்படி... உணவுமுறையிலும் வாழ்வியலிலும் என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்? 

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி?

எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளிக்கிறார், நரம்பியல் மருத்துவர் மீனாட்சி சுந்தரம்.

“ஒரே நேரத்தில் பல கேள்விகளுக்கு பதில் சொல்லும் திறமை சில குழந்தைகளுக்கு இருக்கிறது. உதாரணமாக, திருக்குறளில் ஓர் அதிகாரத்திலுள்ள குறளின் எண்ணைக் குறிப்பிட்டால், உடனே சரியான குறளைச் சொல்லிவிடுகிறார்கள்.  குழந்தைகளை இப்படியெல்லாம் பயிற்றுவிப்பது சரியா?”

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி?

“எந்த அதிகாரத்திலிருந்து திருக்குறள் கேட்டாலும், சரியான குறளைச் சொல்வது சரிதான். ஆனால், அந்தக் குழந்தை பிற்காலத்தில் எப்படி வரப்போகிறது என்பது முக்கியம். எதிர்பார்ப்பு அதிகரித்து, குழந்தை மன அழுத்தத்தில் சிக்கிக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு குழந்தை, குழந்தையாக இருக்கவேண்டியது முக்கியம். திருக்குறளை மகிழ்ச்சியாகக் கற்றுக்கொண்டு செய்தால் தவறில்லை. ஆனால், வற்புறுத்திக் கற்பிக்கக் கூடாது. மூளையின் செயல்திறன் முழுவதையும் பயன்படுத்தலாம். குழந்தை எதைச் செய்தாலும் அதை மகிழ்ச்சியாகச் செய்வதே முக்கியம். `இதை நீ செய்யணும்.. அதை நீ சாதிக்கணும்’ என்று பெற்றோர் அழுத்தம் தரக் கூடாது.”

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி?

“ஐ.க்யூ என்றால் என்ன?”

“ஒருவரின் அறிவுத்திறனை அளப்பதையே ஐ.க்யூ என்கிறோம். கிழக்கு ஆசியாவில் உள்ளவர்களின் ஐ.க்யூ லெவல் 106. வெள்ளைக்காரர்களுக்கு 100, கறுப்பர்களுக்கு 85. இது சராசரி அளவு. இந்தியர்களின் சராசரி ஐ.க்யூ லெவல் 82-85. (ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் இருவரின் ஐ.க்யூ லெவல் 160 என்று தெரியவந்திருக்கிறது). அறிவுத்திறன் என்பது மூளையோடு தொடர்புள்ளது. மூளை எப்படி வினையாற்றுகிறது, எப்படி வேலை செய்கிறது என்பதைப் பொறுத்தே அது அமையும்.” 

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி?

“மறதி என்பது பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்கும் வேறுபடுமா?”

“குழந்தைகளுக்கான தேவைகளும், பெரியவர்களுக்கான தேவைகளும் வேறு வேறு. குழந்தையின் மூளை எதையும் ஏற்றுக்கொள்ளும் நிலையிலிருக்கும். அதனால், அந்தக் குழந்தைக்கு மூளையில் எந்த பாதிப்பும் இல்லையென்றால், அதற்கு மறதி என்பது கவனக்குறைவால் மட்டுமே ஏற்படும். `ரெஜிஸ்ட்ரேஷன்’ (Registration), `ரிட்டென்ஷன்’ (Retention), `ரீகாலிங்’ (Recalling) என்று ஞாபகசக்தியில் மூன்று நிலைகள் உண்டு. ஒரு குழந்தை கவனமில்லாமல் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கிறது என்றால், அதைச் சரிசெய்ய வேண்டும். 

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி?

பொதுவாக பெரியவர்களும் சரி, சிறியவர்களும் சரி... எல்லா விஷயங்களையும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய அவசியமில்லை. எதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமோ அதைத் திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்க்க வேண்டும். உதாரணமாக, `ஏ, பி... அதற்கு அடுத்தது என்ன?’ என்று கேட்டால், `சி’ என்று உடனே பதில் சொல்வோம். அது எப்படி நமக்குத் தெரிகிறது... பல முறை மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்ததால் நினைவிலிருக்கிறது.’’ 

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி?

“குழந்தைகளுக்குப் படிப்பில் மட்டும் மறதி ஏற்படுவது ஏன்... அதை எப்படிச் சரிசெய்யலாம்?”

“சில நோய்களால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், மறதி ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மூளையில் ஞாபகசக்திக்கான `டெம்பரல் லோப்’ (Temporal Lobe), `லிம்பிக் சர்க்யூட்’ (Limbic Circuit) ஆகிய பகுதிகள் உள்ளன. குழந்தையாக இருக்கும்போது சில நோய்களால் நினைவுச் செயல்பாட்டில் (Memory Process) பாதிப்பு ஏற்பட்டால், மறதி ஏற்படும். இது அவர்கள் வளர்ந்து, பெரியவர்களானாலும் தொடரும். சில நேரங்களில் மறதி என்பது மரபணு சம்பந்தப்பட்டதாகக்கூட இருக்கலாம். 

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி?
குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி?

பொதுவாக, பெற்றோர் தேர்வு நேரங்களில் `படிக்கிற எதுவுமே நினைவுல நிக்க மாட்டேங்குதுனு சொல்றான்/ள் டாக்டர்...’ என்பார்கள். நன்றாகப் படிக்கும் ஒரு மாணவனுக்குப் படித்தவையெல்லாம் மறந்துபோனது போன்ற பயம் இருக்கும். தனக்குத் தெரியாதது ஏதாவது வினாத்தாளில் வந்துவிடுமோ என்ற பதற்றமே அதற்குக் காரணம். ஆனால், பாடத்தைப் படித்தாலும் நினைவில் கொண்டுவர முடியவில்லை என்றால், பாடத்தைச் சரியாகப் படிக்கவில்லை என்றே புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, ஆழ்ந்து படிக்கவில்லை என்பதே  உண்மை. அதனால்தான், சில குழந்தைகள் தேர்வு தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்புவரை படித்துக்கொண்டிருப்பார்கள். பாடங்களைக் குழந்தைகளுக்குப் புரியும்வகையில் சொல்லிக்கொடுத்து, அவற்றின் மீது கவனத்தைக் குவியச் செய்ய வேண்டும். அதையும் தாண்டி குழந்தை ஞாபகமறதியால் தவித்தால், மூளையில் ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். மரபணுக் கோளாறு, பிறக்கும்போது மூளைக்கு வரும் ரத்தக்குழாயில் பாதிப்பு, வலிப்புநோய், மூளையில் தழும்புகள் போன்றவை இருந்தால் அவற்றைச் சரிசெய்யவேண்டியது அவசியம். கற்றலில் குறைபாடு இருந்தால், அதற்கான பயிற்சிகள் மூலம் சரிசெய்துவிடலாம்.”  

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி?

“சிறு வயதில் ஏற்படும் மறதி, வளர்ந்த பிறகும் தொடருமா?”

“குழந்தைகளுக்குச் சிறு வயதில் ஏற்படும் மறதி என்பது கவனக்குறைவு மட்டுமே. மூளையில் ஏதேனும் பாதிப்புகள் இருந்தால் மட்டுமே அது வளர்ந்த பிறகும் தொடரும்.” 

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி?

“ஞாபகத்திறனை அதிகரிப்பது எப்படி?”

“ஞாபகத்திறனை அதிகரிக்க ஏற்கெனவே குறிப்பிட்ட ரெஜிஸ்ட்ரேஷன், ரிட்டென்ஷன், ரீகாலிங் ஆகிய மூன்று விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளுக்குப் புரியும்வகையில் சொல்லிக்கொடுத்தால், அதை எளிதாக நினைவில் வைத்துக்கொள்வார்கள். `கைவீசம்மா... கைவீசு...’ என்று கையை வீசிக்கொண்டு பாட்டாகச் சொல்லித்தரும்போது குழந்தைகள் அதை எளிதில் கற்றுக்கொள்வார்கள். ஒரு விஷயத்தைத் திரும்பத் திரும்பச் செய்தால், அவர்களால் எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும். 

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி?

ஒரு பாடத்தை ஒரு குழந்தை ஓரிருமுறை படித்தால், 10 சதவிகிதம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியும். அந்தப் பாடத்தையே மூன்று முறை படித்தால் 25 சதவிகிதம் நினைவில் வைத்திருக்கலாம். எனவே, பாடத்தைத் திரும்பத் திரும்பப் படிக்கச் சொல்ல வேண்டும். சிலர் `நிமோனிக்ஸ்’ (Mnemonics) நுட்பத்தைப் பயன்படுத்துவார்கள். `நிமோனிக்ஸ்’ என்பது சொற்களின் முதலெழுத்தை மட்டும் சேர்த்து ஒரு வார்த்தையாக ஞாபகம் வைத்துக்கொள்வது. சிலர் ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக்கொள்ள வேறொரு சம்பவத்தை அத்துடன் சேர்த்துக்கொள்வார்கள். இதை `சிச்சுவேஷனல் மெமரி’ (Situational Memory) என்போம். இப்படிப் பல வகைகள் இருக்கின்றன. இவற்றில் குழந்தைக்கு எது பிடிக்கிறதோ அதைப் பின்பற்றலாம்.”

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி?

“வல்லாரை மற்றும் ஊட்டச்சத்து பானங்கள் குழந்தையின் நினைவாற்றலை அதிகரிக்க உதவுமா?”

``வல்லாரை போன்ற சில உணவுகள் நினைவாற்றலை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. இது தொடர்பாக, விஞ்ஞானபூர்வமாக பெரிய அளவிலான ஆய்வுகள் வரவில்லையென்றாலும், இந்த நம்பிக்கையைப் பொய் என்று கூற முடியாது. ஐந்து வயதிலிருந்து 15 வயதுவரை மூளை வளர்ச்சி அதிகமாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் வல்லாரையை அளவாகக் குழந்தைகளுக்குக் கொடுப்பது நல்லது.

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி?

இது மூளையிலுள்ள நியூரான்களை அதிகரிக்கும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வல்லாரையில் மட்டுமல்ல, மஞ்சளிலும்கூட நினைவாற்றலை அதிகரிக்கும் குணங்கள் உள்ளன. குழந்தை வளரும்போது தேவையான ஊட்டச்சத்துகளைக் கொடுக்க வேண்டும். இதனால் மூளை வளர்ச்சி மேம்படும். விளம்பரப்படங்களில் காட்டப்படுவதுபோல, ஊட்டச்சத்து பானங்களை அருந்துவதால் குழந்தையின் நினைவாற்றல் அதிகரிக்காது.”

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி?

“நினைவுத்திறனை அதிகரிக்கும் உணவுகள் என்னென்ன?”

“நினைவுத்திறனை அதிகரிப்பதற்கென நேரடியான உணவு எதுவுமில்லை. வல்லாரை, மஞ்சள் போன்றவற்றை உணவில் அளவாகப் பயன்படுத்துவதால் நினைவாற்றல் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. வளரும் குழந்தைகளுக்கு புரதம், கார்போஹைட்ரேட் உள்ளிட்ட சத்துகள் எவ்வளவு தேவையோ அந்த அளவு மட்டுமே தரப்பட வேண்டும்.”

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி?

“குழந்தைகள் துரித உணவுகளை விரும்பிச் சாப்பிடுகிறார்கள். அதனால் நினைவாற்றல் பாதிக்குமா?”

“ஐங்க் ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட் போன்றவை மூளைக்கு நல்லவையல்ல. அவற்றிலுள்ள கொழுப்புச்சத்துகளும் எதற்கும் பயன்படாத கலோரிகளும் நினைவாற்றலை பாதிக்கலாம். குழந்தைகளின் உடல்நலத்துக்கும் இத்தகைய உணவுகள் ஏற்றவையல்ல. இந்த உணவுகள் ரத்த நாளங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். குழந்தைகள் வளர்ந்து, பெரியவர்களானதும் பக்கவாதம், மாரடைப்பு போன்ற பிரச்னைகளைக்கூட இவை ஏற்படுத்தலாம். எனவே, இந்த வகை உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. தவிர்க்க முடியாதபட்சத்தில் மாதத்துக்கு ஒருமுறை மட்டும் சாப்பிட அனுமதிக்கலாம்.” 

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி?

“நினைவாற்றலை அதிகரிக்க சிசிச்சை அவசியமா?”

“மனதை ஒருமுகப்படுத்தும் `தியானம்’ போன்ற பயிற்சிகள் நினைவாற்றலை அதிகரிக்க உதவும். ஒரு குழந்தையால் பாடத்தை நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லையென்றால், அதற்கு என்ன பிரச்னை என்பதைக் கண்டறிய வேண்டும். பின்னர் அதற்கேற்ற சிகிச்சை அளிப்பதே நினைவாற்றலை அதிகரிப்பதற்கான ஒரே வழி. குழந்தைக்கு மூளையில் எந்த பாதிப்புமில்லை; ஆரோக்கியமான குழந்தைதான் என்றால், பாடங்களை அதற்கேற்பப் புரியும்படி சொல்லித்தரவேண்டியது அவசியம்.”

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி?

“நினைவாற்றலை அதிகரிக்க ஏதேனும் பயிற்சிகள் இருக்கின்றனவா?”

“மூளையின் செயல்பாட்டில் இடதுபக்க மூளை, வலதுபக்க மூளையின் பங்கு முக்கியம். இடதுபக்க மூளை, பேசுவது, படிப்பது, எழுதுவது போன்றவற்றைச் செய்ய உதவும். வலதுபக்க மூளை, ஓவியம் போன்ற கிரியேட்டிவான செயல்களைச் செய்ய உதவும். ‘எப்படி ஆடை அணிய வேண்டும்’ என்று இடதுபக்க மூளை சொன்னால், ‘இன்னும் நன்றாக ஆடை அணிவது எப்படி?’ என்று வலதுபக்க மூளை வழிகாட்டும். நினைவாற்றலை அதிகரிக்க `கிராஸ்வேர்டு க்ளூ’ (Crossword Clue), `சுடோகு’ (Sudoku) போன்ற பயிற்சிகளைத் தரலாம். புதுப்புது விஷயங்களை ஆர்வமாகக் கற்கும்போது நினைவாற்றல் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.”

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி?

“தூக்கத்துக்கும் நினைவுத்திறனுக்கும் தொடர்பு உண்டா?”

“தூக்கத்துக்கும் நினைவுத்திறனுக்கும் நிறைய தொடர்புகள் உண்டு. குழந்தை தூங்கும்போதுதான் மூளை ஓய்வெடுக்கும். இதில், `என்.ஆர்.ஈ.எம் ஸ்லீப்’ (Non-rapid eye movement sleep),`ஆர்.ஈ.எம் ஸ்லீப்’ (Rapid eye movement sleep) என இரண்டு வகையான தூக்கங்கள் உள்ளன. தூங்கும்போது விழிகள் மட்டுமே வேகமாக அசையும்; அந்த நேரத்தில் கனவு காண்போம். ஆனால், உடலில் அசைவு எதுவும் இருக்காது. அன்றன்று நடந்த விஷயங்களை ஒருங்கிணைக்க, தூக்கம் உதவுவதாக ஒரு கோட்பாடு இருக்கிறது. ஆழ்ந்த உறக்கத்தில் மட்டுமே கனவு வரும். குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் அவசியம். படுத்தவுடன் சில குழந்தைகள் தூங்கிவிடுவார்கள்; அவர்களுக்கு நினைவுத்திறன் மேம்பட்டிருக்கும். மூளை நன்றாக இயங்க வேண்டுமென்றால், தூக்கம் மிகவும் அவசியம்.”

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி?

“நினைவுத்திறனை அளக்க அளவீடுகள், அட்டவணைகள் இருக்கின்றனவா?”

“நினைவுத்திறனுக்கான அளவீடுகள் நிறைய இருக்கின்றன. அதில், `இன்டெலிஜென்ஸ் கோஷன்ட்’ (Intelligence Quotient) என்ற ஒன்று இருக்கிறது. அதை வைத்துத்தான் நாம் ஒருவரது ஐ.க்யூவை அளவிடுகிறோம். மூளையின் செயல்திறனை அளக்க `இன்டெலிஜென்ஸ் ஸ்கேல்’ (Intelligence Scale) பயன்படும்.” 

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி?

“தாத்தா, பாட்டி மற்றும் பெற்றோருக்கு மறதிநோய் இருந்தால், அது குழந்தைகளை பாதிக்குமா?”

“தாத்தா, பாட்டிக்கு ஞாபகமறதி இருந்தால், அது பேரன் அல்லது பேத்தியை பாதிக்காது. ஆனால், மூளையில் பாதிப்பு, மரபணு நோய்கள் போன்றவற்றால் குழந்தைக்கு மறதி ஏற்பட வாய்ப்புகள் உண்டு.”

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி?

“கருவிலிருக்கும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி எப்படியிருக்கும்?”

“கரு உருவான முதல் 70 அல்லது 80 நாள்களிலேயே மூளை உருவாகிவிடும். அப்போதே அந்தக் குழந்தையால் எல்லாவற்றையும் உணர முடியும். மூச்சுவிடுவது என்பது மட்டுமே குழந்தை பிறந்த பிறகு நடக்கக்கூடியது. அதனால்தான், `தாயின் உணர்வுகள் குழந்தையை பாதிக்கும்’ என்று கூறுகிறோம். எனவே, ஒரு தாய் தன்னை மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டால் குழந்தையும் மகிழ்ச்சியாக இருக்கும்; அதன் உலகம் என்பது தாயின் கர்ப்பப்பைதான். ஆகவே, அங்கு இருக்கும்வரை அதன் மூளை, வளர்ச்சி நிலையிலேயே இருக்கும். பிறந்த பிறகும்கூட குழந்தையின் தலையைப் பார்த்தால் கபாலம் மூடியிருக்காது. ஏனென்றால், மூளை வளர்ச்சிக்காகத்தான். இரண்டு வயதுக்குப் பிறகே கபாலம் மூடும். ஆகவே, பிறந்த குழந்தைக்கு தலை பெரிதாகவும் உடல் சிறிதாகவும் இருக்கும்.”

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி?

குழந்தைகளின் நினைவுத்திறனை அதிகரிக்கும் உணவுகள்!

மூளையை நன்றாக இயங்கச் செய்கிற உணவுகள் பல இருக்கின்றன. அந்த வகை உணவுகள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவுவதுடன் அவர்களது மூளையின் செயல்பாட்டையும் அதிகரிக்கும். இரண்டு வயதுக் குழந்தையின் மூளை, ஒரு நொடியில் 10 லட்சம் நியூரான்களை உற்பத்தி செய்யக்கூடியது. ஒரு குழந்தை எவ்வளவு வேகமாக வளர்கிறதோ, அதே அளவுக்கு மூளையும் வளரும். எனவே, குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு சில உணவுகளைக் கொடுக்கவேண்டியது அவசியம். 

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி?

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்க உதவும் பழங்கள் மற்றும் காய்கறிகள் பற்றிச் சொல்கிறார் இயற்கை மருத்துவரும் யோகா நிபுணருமான எஸ்.இந்திராதேவி. 

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி?

பசலைக்கீரை அல்லது பாலக்கீரை

பசலைக்கீரை மூளையின் செல்களை வளர்ச்சியடையச் செய்யும். மேலும், இதில் ஃபோலேட், வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே நிறைந்துள்ளதால் பகுத்தறியும் திறனை மேம்படுத்தும். ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளதால் உடலில் தேங்கும் நச்சுப்பொருள்களை அகற்றும். பாலக்கீரையை உணவுடன் சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால், மூளையின் செல்களில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம். பொதுவாக, குழந்தைகள் பசலைக்கீரையை உண்ண மாட்டார்கள். ஆகவே, பசலைக்கீரையை சிறிது சிறிதாக வெட்டி, சூப் செய்து அருந்தக் கொடுக்கலாம். 

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி?

முட்டை

குழந்தைகளுக்கு தினமும் ஓர் அவித்த முட்டையை சாப்பிடத் தர வேண்டும். இதில் `கோலின்’ (Choline) என்ற ரசாயனக் கலவை இருக்கிறது. இது மூளையின் `நியூரல் பாத்வே’யை (Neural Pathway) மேம்படுத்துவதால் குழந்தையின் நினைவுத்திறன் அதிகரிக்கும். நியூரல் பாத்வே என்பது மூளையின் நுண்ணிய நரம்புகள் செல்லும் பாதை. தினமும் ஒரு முழு முட்டை சாப்பிட்டால், அதிலிருந்து கால் பங்கு `கோலின்’ சத்து குழந்தைக்குக் கிடைக்கும். இதனால் மூளை வளர்ச்சி மேம்படும்.

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி?

தயிர்

குழந்தைகளுக்கு தயிர் சாதம் மிகவும் பிடித்த உணவு. வாரத்தில் மூன்று நாள்கள் ஏதேனும் ஒரு வேளை தயிர் சாதம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால், எந்த வகை உணவுகளைச் சாப்பிட்டாலும் கடைசியாகச் சிறிதளவு தயிர் சாதத்தை உண்ணத் தருவது நல்லது. தயிரில் உடலுக்கு நன்மை செய்யும் `புரோபயாடிக்ஸ்’ (Probiotics) பாக்டீரியா நிறைந்துள்ளன. இவை செரிமான சக்தியை அதிகரிக்கும். அதுமட்டுமன்றி, மூளையின் வளர்ச்சிக்கும் உதவுபவை. 

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி?

மீன்

மீன் வகைகளில் `ஒமேகா 3’ கொழுப்பு அமிலங்களான `டிஹெச்ஏ’ (DHA) மற்றும் `ஈபிஏ’ (EPA) நிறைந்துள்ளன. இவை மூளை வளர்ச்சிக்குத் துணைபுரிவதுடன் நினைவாற்றலையும் அதிகரிக்கச் செய்யும். இந்த வகை மீன்களை, வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை குழந்தைகளுக்குத் தரலாம். இதனால் குழந்தையின் நினைவாற்றல் கூர்மையடையும். 

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி?

பெர்ரி

பெர்ரியில் `புளுபெர்ரி’ (Blueberry), `கிரான்பெர்ரி’ (Cranberry), `ஸ்ட்ராபெர்ரி’ (Strawberry) எனப் பல வகைகள் உள்ளன. இந்த வகைப் பழங்களில் ஆன்டிஆக்ஸிடன்டுகள், வைட்டமின்கள் அதிகம் உள்ளன. மேலும் `ஒமேகா 3’ கொழுப்பு அமிலமும் உள்ளது. இவை மூளை நன்றாகச் செயல்பட உதவக்கூடியவை. மேலும், உடலிலுள்ள நச்சுப்பொருள்களை வெளியேற்றும். இதிலுள்ள `ஃபிளேவனாய்டு’ (Flavonoid) என்ற ரசாயனக் கலவை, கற்றல் திறனை அதிகரிக்கச்செய்யும். குழந்தைகளுக்கு ஐஸ்க்ரீம் சாப்பிடப் பிடிக்கும் என்பதால், அதனுடன் பெர்ரி வகைப் பழங்களைச் சேர்த்துச் சாப்பிடக் கொடுக்கலாம்.

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி?

மஞ்சள்

கிருமி நாசினியான மஞ்சளில் மேலும் பல மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளன. மஞ்சளுக்கு மூளையின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் தன்மை உண்டு. இதிலுள்ள `குர்குமின் (Curcumin), ஆன்டி இம்ஃப்ளமேட்டரி’ தன்மைகொண்டது. மேலும் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளதால், மூளை வளர்ச்சிக்கு நல்லது. சூடான பாலில் இரண்டு சிட்டிகை மஞ்சள்தூள் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். அன்னாசிப்பழம் மற்றும் மாம்பழத் துண்டுகளில் மஞ்சள்தூள், மிளகுத்தூள் தடவிச் சாப்பிடக் கொடுக்கலாம்.

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி?

நட்ஸ்

மூளையின் வளர்ச்சிக்கு உதவும் உணவுகளில் பாதாம், வால்நட் ஆகியவற்றுக்கு முக்கிய இடமுண்டு. தினமும் இரண்டு பாதாம், இரண்டு வால்நட் சாப்பிடக் கொடுக்க வேண்டும். இவற்றில் `ஒமேகா 3’ கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளதால், குழந்தைகளின் கற்றல் திறன் மேம்படும். அதுமட்டுமன்றி, மூளையில் சிறிதாக பாதிப்புகள் ஏதும் இருந்தால், அவற்றைச் சரிசெய்யும். வாழைப்பழத்தில் கொஞ்சம் தேன் கலந்து அதனுடன் வால்நட், பாதாம் சேர்த்து குழந்தைகளுக்குச் சாப்பிடத் தரலாம்.

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி?

ஓட்ஸ்

குழந்தைகளுக்கு வாரத்தில் இரண்டு நாள்கள் காலை நேரத்தில் ஓட்ஸ் கஞ்சி அருந்தக் கொடுக்கலாம். ஓட்ஸ் கஞ்சி குழந்தைகளைச் சுறுசுறுப்பாக வைத்திருப்பதுடன் சோம்பேறித்தனத்தை விரட்டி, படிப்பில் கவனம் செலுத்தத் துணை நிற்கும்.

பீன்ஸ்

குழந்தைகளின் ஞாபகசக்தியை மேம்படச் செய்யும் காய்கறிகளில் பீன்ஸ் முக்கியமானது. இதில் `ஒமேகா 3’ கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது. இதை கேரட்டுடன் சேர்த்துச் சமைத்துக் கொடுக்கலாம். 

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி?

ஆப்பிள்

ஆப்பிளில் `அசிட்டைல்கோலைன்’ (Acetylcholine) என்ற கலவை உள்ளது. இது மூளையில் தகவல் பரிமாற்றத்துக்கு உதவும் என்பதால், குழந்தைகளுக்கு அடிக்கடி ஆப்பிள் கொடுக்க வேண்டும்.

அவகேடோ (பட்டர் ஃப்ரூட்)

குழந்தைகளின் நினைவுத்திறனை மேம்படுத்தும் மற்றொரு பழம் அவகேடோ. இதை  `பட்டர் ஃப்ரூட்’ என்றும் கூறுவார்கள். இந்தப் பழத்தை ஜூஸாகத் தயாரித்து, குழந்தைகள் அருந்தக் கொடுக்கலாம். மூளை வளர்ச்சிக்கு உதவும் இந்தப் பழத்தில், வைட்டமின் கே, கால்சியம், ஃபோலேட் போன்ற சத்துகள் உள்ளன. கர்ப்பிணிகளுக்கு அவகேடோ பழத்தை ஜூஸாகத் தயாரித்துக் கொடுத்தால், கருவிலிருக்கும் குழந்தையின் நினைவுத்திறன் மேம்படும். 

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி?

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் ஆன்டிஆக்ஸிடன்டுகள் நிறைந்துள்ளதால் உடலிலுள்ள நச்சுப்பொருள்களை வெளியேற்றி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும், மூளை வளர்ச்சியடையவும், பார்வை மேம்படவும் துணைபுரியும். எனவே, குழந்தைகளுக்கு தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடக் கொடுத்தால், அவர்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கவனம் குவியும். 

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி?

`டார்க் சாக்லேட்’, `புரொக்கோலி’, முட்டைகோஸ், வாழைப்பழம், மாதுளை, வெண்டைக்காய், வல்லாரை போன்றவைகூட மூளை வளர்ச்சிக்கு உதவும். எனவே, இவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. குழந்தைகள் சரியான அளவு தண்ணீர் குடிக்கவில்லையென்றால் மூளையின் செயல்பாடுகள் குறைந்துவிடும். ஆகவே, குழந்தைகளுக்கு ஒவ்வொருநாளும் ஐந்து முதல் ஆறு டம்ளர் தண்ணீர் அருந்தக் கொடுக்க வேண்டும். 

- கிராபியென் ப்ளாக்

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி?

டலையும் உள்ளத்தையும் நல்வழிப்படுத்தும் வழிகள், உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சிகள் முதலிய வாழ்வியல் முறைகளை அறியவும், மருத்துவ உலகின் ஆச்சர்யங்களை விரல்நுனியில் தெரிந்துகொள்ளவும் ‘டாக்டர் விகடன்’ சோஷியல் நெட்வொர்க்கிங் பக்கங்களில் இணைந்திடுங்கள்.