Published:Updated:

நண்பர்களைத் தேர்ந்தெடுக்கிற வயது! - ஆனந்தம் விளையாடும் வீடு - 25

நண்பர்களைத் தேர்ந்தெடுக்கிற வயது! - ஆனந்தம் விளையாடும் வீடு - 25
பிரீமியம் ஸ்டோரி
நண்பர்களைத் தேர்ந்தெடுக்கிற வயது! - ஆனந்தம் விளையாடும் வீடு - 25

தனசேகர் கேசவலு குழந்தைகள்நல மருத்துவர்

நண்பர்களைத் தேர்ந்தெடுக்கிற வயது! - ஆனந்தம் விளையாடும் வீடு - 25

தனசேகர் கேசவலு குழந்தைகள்நல மருத்துவர்

Published:Updated:
நண்பர்களைத் தேர்ந்தெடுக்கிற வயது! - ஆனந்தம் விளையாடும் வீடு - 25
பிரீமியம் ஸ்டோரி
நண்பர்களைத் தேர்ந்தெடுக்கிற வயது! - ஆனந்தம் விளையாடும் வீடு - 25

ங்கள் பிள்ளைகளின் 7 வயதில் ஆரம்பித்து 9 வயதுவரையான  இரண்டு வருட காலத்தில் அவர்கள் வளர்ச்சியில் என்னென்ன மாயாஜாலங்கள் நடக்கும் என்று இந்த இதழில் சொல்லப்போகிறேன்.

நண்பர்களைத் தேர்ந்தெடுக்கிற வயது! - ஆனந்தம் விளையாடும் வீடு - 25

* சேட்டை, சில்மிஷம், நக்கல், நையாண்டி எனப் பலதரப்பட்ட உணர்வுகளும் கைவர ஆரம்பிக்கும். ஜோக்குகளைப் புரிந்துகொண்டு அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து பேசவும் ஆரம்பிப்பார்கள்.

* கறுப்பு-வெள்ளை, இரவு-பகல் என எதிர்மறைகளை அழகாகப் புரிந்துகொள்வார்கள். எண்களைப் பின்னோக்கி எழுதுவது, சொல்வது இரண்டையும் செய்வார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நண்பர்களைத் தேர்ந்தெடுக்கிற வயது! - ஆனந்தம் விளையாடும் வீடு - 25



* பேச்சு இன்னமும் தெளிவாக இருக்கும். இரண்டு அர்த்தம் தருகிற சொற்களையெல்லாம் தெரிந்துவைத்திருப்பார்கள். உதாரணமாக, மாலை (சாயங்காலம்) - மாலை (பூமாலை).

* பல் விழுதல், புதுப்பல் முளைத்தல் என உடலளவில் வேகமான வளர்ச்சி ஏற்படும். எடை அதிகமாகும். இதை ‘கேப்ச்சர் குரோத்’ என்போம். அதாவது, இதற்கு முன்னர் மெலிந்திருந்த குழந்தைகள்கூட இந்தக் காலகட்டத்தில் எடைகூட ஆரம்பிப்பார்கள்.

* இதுவரை ‘நான் குண்டா இருக்கேன்’, ‘நான் ஒல்லியா இருக்கேன்’ என்பது மட்டுமே தெரிந்திருந்தவர்கள், இன்னமும் அதிகமாகத் தெரிந்துகொள்ள ஆரம்பிப்பார்கள். அவர்களை ‘ஷெல்ஃபில் இருக்கும் ஒரு பொருளை எடுக்கச் சொன்னால், ‘நான் குள்ளமா இருக்கேனே... எனக்கு எப்படி எட்டும்?’ என்று கேட்கிற அளவுக்கு புரிந்து வைத்திருப்பார்கள்.

நண்பர்களைத் தேர்ந்தெடுக்கிற வயது! - ஆனந்தம் விளையாடும் வீடு - 25

* ‘கைகால் வலிக்குது, கால் பிடிச்சு விடு’ என்று இரவுகளில் அடிக்கடி கேட்க ஆரம்பிப்பார்கள். உடல் வளர்ச்சி வேகமாக இருப்பதும், அதிகமான விளையாட்டும்தான் இதற்குக் காரணம்.

* இந்த வயதில் சில பிள்ளைகள் ஆபத்து என்று தெரிந்த விஷயங்களைச் செய்ய மாட்டார்கள். சில பிள்ளைகள் ஆபத்து என்று தெரிந்தும் அதைத்தான் முதலில் செய்வார்கள். உங்கள் பிள்ளை, இதில் எந்த வகை என்பதைத் தெரிந்து வழிநடத்துங்கள்.

* ‘இந்தப் பையன்கூடத்தான் விளையாடணும்; அந்தப் பொண்ணுகூட விளையாடக் கூடாது’ போன்ற கட்டுப்பாடுகளை விதிக்காதீர்கள். தனக்கான நண்பர்களை அவர்களே தேர்ந்தெடுக்கிற வயது இது.

* ‘என் ஃபிரெண்டு இன்னிக்கு என்னை அடிச்சிட்டான்’ என்று இதுவரைக்கும் சொன்னவர்கள், ‘அவன் ஏன் என் மேலே இவ்வளவு கோபமா இருக்கான்னே தெரியலை.’ என்று வருத்தத்தைப் பகிர ஆரம்பிப்பார்கள். 

* விளையாட்டாக ஏமாற்றுவது, அம்மாக்கள் நம்புகிற மாதிரி காரணம் சொல்லி ஸ்கூலுக்கு மட்டம் போடுவதையெல்லாம் செய்ய ஆரம்பிப்பார்கள்.

* தினமும் காலையில் அவர்களுடன் உட்கார்ந்து செய்தித்தாள்களைப் படிக்கப் பழக்குங்கள். குழந்தைகளைக் கடத்துவது, குற்றங்கள், போதைப் பொருள்கள் மாதிரியான மோசமான விஷயங்களெல்லாம் உலகத்திலிருப்பதைப் புரிகிறபடி சொல்லுங்கள்.  இவற்றையெல்லாம் கட்டாயம் அவர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய வயது இதுதான்.

* டி.வி-யிலும் கம்ப்யூட்டரிலும் பேரன்ட்டல் கன்ட்ரோல் வைத்திருங்கள். இந்த வயதில் உங்கள் பிள்ளைகளின் கேட்ஜெட் பார்க்கும் பழக்கத்தை ஒரு கன்ட்ரோலுக்குள் கொண்டு வரவில்லையென்றால், அவர்கள் இன்னும் சில வருடங்களில் அதற்கு அடிமையாகிவிடுவார்கள்.

* 7 - 9 வயது என்பது பிள்ளைகளின் சுயமரியாதை வளர்கிற காலகட்டம். அவர்களுடைய சுயமரியாதையை ஊக்கப்படுத்துங்கள். ‘உன்னால இதெல்லாம் முடியாது’ என்பதுபோலப் பேசி அவர்களின் சுயமரியாதையையும் தன்னம்பிக்கையையும் சிதைத்துவிடாதீர்கள். 

* இந்த இரண்டு வருடங்களில் பிள்ளைகளின் உடல் எடை அதிகமாகும். அவர்களை நீச்சல் பழக வைக்கலாம். வெளிநாடுகளில் இந்த வயதில் ‘தீயணைப்பு முறைகள்’ எல்லாம் சொல்லித் தருவார்கள். நாமும் சொல்லித் தரலாம். ‘சின்னப் பிள்ளைகள் இதையெல்லாம் கத்துக்குமா?’ என்று கேட்டு, உங்கள் பிள்ளைகளைக் குறைத்து மதிப்பிடாதீர்கள்.

* தனக்குப் பிடிக்காத கிஃப்ட்டை யாராவது கொடுத்தாலும், ‘இது எனக்குப் பிடிக்காது’ என்று சொல்லிக்கொண்டிருந்த பிள்ளைகள் வாங்கிக்கொள்வார்கள். அதாவது, மற்றவர்களின் மனதை நோகடிக்காத பக்குவம் அவர்களுக்குள் வர ஆரம்பிக்கும். 

* தனிமையை விரும்ப ஆரம்பிப்பார்கள். இது நார்மல்தான். சில குழந்தைகள் மன அழுத்தம் காரணமாகத் தனிமையிலிருப்பார்கள். இரண்டுக்குமான வித்தியாசத்தைப் புரிந்து நடந்துகொள்ளுங்கள்.

* கோபத்தை, வருத்தத்தைத் தங்களுக்குள் வைத்துக்கொண்டு, அதற்கான தீர்வுகளைத் தேட ஆரம்பிப்பார்கள். இதனால், தன்னம்பிக்கை வளர ஆரம்பிக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளிடம் பேசினால்தான் அவர்களின் இந்த மாற்றங்களைக் கண்டறிய முடியும். இந்த வயதில் பிள்ளைகளிடம் நிறைய பேசுகிற பெற்றோர்கள்தாம் பிள்ளைகளின் டீன் ஏஜில் அவர்களுடைய சிறந்த நண்பர்களாக இருக்க முடியும்.

* ‘ஃபிரெண்டு வீட்டுக்குப் போய் படிக்கப் போறேன்;  பாட்டி வீட்டுக்குப் போய் தங்கப் போறேன்’ என்றெல்லாம் பர்மிஷன் கேட்க ஆரம்பிப்பார்கள். அடுத்தகட்ட வளர்ச்சிதான் என்பதால், தாராளமாக என்கரேஜ் செய்யலாம்.

* ஆண் குழந்தைகள் என்றால், பெண் குழந்தைகளிடம் எப்படி மரியாதையாக நடந்துகொள்ள வேண்டும் என்றும், பெண் குழந்தைகளிடம், ‘ஆண் உன் நண்பன்’ என்றும் சொல்லிக்கொடுத்து வளருங்கள்.

* ஒரு மணி நேரம் எடுத்தாலும் ஒரு விஷயத்தைக் கவனம் கொடுத்துச் செய்வார்கள். 3,000  வார்த்தைகள்வரை (Vocabulary) தெரிந்து வைத்திருப்பார்கள். குழந்தை வேகமாக வளர்கிறான்/ள் என்ற எண்ணம் உங்களுக்கு வர ஆரம்பிக்கும். மொத்தத்தில் இது வளர்கிற வயது. வளரவிடுங்கள்; தடுமாறினால் கைகொடுங்கள்.

(வளர்த்தெடுப்போம்...)

ஆ.சாந்தி கணேஷ்