Published:Updated:

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
கன்சல்ட்டிங் ரூம்

ஹெல்த்

கன்சல்ட்டிங் ரூம்

ஹெல்த்

Published:Updated:
கன்சல்ட்டிங் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
கன்சல்ட்டிங் ரூம்
கன்சல்ட்டிங் ரூம்

`மார்பகப் புற்றுநோய்க்கான மேமோகிராம் பரிசோதனையின்போதும், பற்களுக்கான எக்ஸ்-ரே பரிசோதனையின்போதும் ‘தைராய்டு கார்டை’ (Thyroid Guard) கேட்டுப் பெற்று அணிய வேண்டும்’ என்கிறாள் வெளிநாட்டில் வசிக்கிற என் தோழி. `தைராய்டு கார்டு அணிந்தால், கதிர்வீச்சு அபாயத்திலிருந்து காத்துக்கொள்ளலாம்’ என்கிறாள். `தைராய்டு கார்டு’ என்றால் என்ன, அதன் அவசியம் என்ன?

- நான்ஸி, உக்கடம், கோவை 

கன்சல்ட்டிங் ரூம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`தைராய்டு கார்டு’ (Thyroid Guard) என்பது, கழுத்தில் அணியப்படும் ஒருவகைக் கவசம். ஈயம் மூலம் உருவாக்கப்படும் இதை `லெட் காலர் புரொடெக்‌ஷன்’ (Lead Collar Protection), `தைராய்டு ஷீல்டு’ (Thyroid Shield) என்றும் குறிப்பிடலாம். கதிர்வீச்சுப் பரிசோதனைகளின்போது உடலுக்குள் ஊடுருவும் கதிர்வீச்சுகள், உடலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, இதை அணிந்துகொள்ளப் பரிந்துரைக்கப்படும். ஆனால், இதை அணிவதால் ஏற்படும் நன்மைகள் மிகக் குறைவே. இன்றைய சூழலில் தேவையில்லாத பயம் காரணமாக மட்டுமே இதை அணிந்துகொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது.

கன்சல்ட்டிங் ரூம்



மேமோகிராம் மற்றும் பற்களுக்கான எக்ஸ்-ரே எடுக்கும்போது வெளிப்படும் கதிர்வீச்சுகளுக்கும், புற்றுநோய் பாதிப்புக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை பரிசோதனை மேற்கொண்டால் ஹார்மோன் குறைபாடுகள், ஹார்மோன் மாற்றங்கள், புற்றுநோய் பாதிப்பு என எதுவும் ஏற்படாது. தைராய்டு கார்டை அணியும்போது, உடலில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் பகுதிக்கு, போதிய அளவு கதிர்வீச்சு கிடைக்காமல் போகும். இதனால் பரிசோதனையின் முடிவில், அதன் துல்லியத் தன்மையில் சிக்கல் உண்டாகலாம். எனவே, மீண்டுமொருமுறை பரிசோதனை மேற்கொள்ளவேண்டிய சூழல் உருவாகும். ஆக, தைராய்டு கார்டு அணியாதவர்களைவிட, கார்டு அணிந்தவர்களுக்குக் கூடுதலாக இரண்டு முறை பரிசோதனைகள் மேற்கொள்ளவேண்டிய சூழல் உருவாகலாம். இதுபோன்ற சூழல் ஏற்படாமலிருக்க, `தைராய்டு கார்டு’ அணிவதைத் தவிர்ப்பதே நல்லது.

கன்சல்ட்டிங் ரூம்

ஆறு வயதாகும் என் மகன், கிட்டப்பார்வை பிரச்னையால் கண்ணாடி அணிந்திருக்கிறான். அவனுக்கு லேசர் சிகிச்சை செய்யலாமா... இது குறித்து விளக்கம் தரவும்.

- கோமதி, தஞ்சாவூர்

கன்சல்ட்டிங் ரூம்

அதிகமான கேட்ஜெட்ஸ் பயன்பாடு, உணவுப் பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட காரணங்களால், இன்றைய குழந்தைகளுக்குப் பார்வைப் பிரச்னைகள் அதிக அளவில் ஏற்படுகின்றன. அதனால் கண்ணாடி அணியவேண்டிய நிலை ஏற்படுகிறது. ஒவ்வொருவரின் கண் பாதிப்பின் தன்மைக்கேற்ப, கண்ணாடியின் பவர் மாறுபடும். பவர் அளவானது 0.5 - 0.7-க்கு குறைவாக இருந்தால், படிக்கும்போது மட்டும் கண்ணாடி அணிந்துகொண்டால் போதுமானது. அதற்கு மேல் பவர் இருந்தால் படிப்பது, விளையாடுவது, வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட அத்தியாவசியச் செயல்பாடுகளின்போது கண்ணாடி அணிந்துகொள்ளவேண்டிய அவசியம் ஏற்படும். பொதுவாக 20 - 25 வயதுவரை கண் வளர்ச்சியடையும் என்பதால், உங்கள் மகனுக்கு லேசர் சிகிச்சைசெய்ய இது உகந்த காலம் கிடையாது. எனவே, அதுவரை கண்ணாடி அணிந்துகொள்வது அல்லது கான்டாக்ட் லென்ஸ் அணிந்துகொள்வது மட்டுமே தீர்வு. குழந்தைகளுக்கு லென்ஸ் அணிந்துகொள்வது செளகர்யமாக இருக்காது. எனவே, உங்கள் மகனைப் பொறுத்தவரை 20 வயதுக்கு மேல் அப்போதைய கண் பிரச்னையின் தன்மையைப் பொறுத்து லேசர் சிகிச்சை செய்யலாம்.  மேலும், ஆண்டுக்கு ஒருமுறை குழந்தையின் கண் பவர் அளவை செக் செய்துகொள்ளுங்கள். கண்ணாடி அணிவது குறித்து பயப்படவேண்டியதில்லை. கண்ணாடி அணியவேண்டிய தேவை இருந்தும் அணியாமல் இருந்தால் மாறுகண், கண்ணில் புரை விழுவது உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

ங்கள் கேள்விகளை அனுப்பவேண்டிய முகவரி: கன்சல்ட்டிங் ரூம், டாக்டர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.