Published:Updated:

``அவள் பிறந்த நாளுக்குள் உயிர் பிழைக்க, உதவி தேவை!’’ #SaveThavathi

``அவள் பிறந்த நாளுக்குள் உயிர் பிழைக்க, உதவி தேவை!’’ #SaveThavathi
``அவள் பிறந்த நாளுக்குள் உயிர் பிழைக்க, உதவி தேவை!’’ #SaveThavathi

``மூளை மூச்சுவிடறதுக்கு கமாண்ட் கொடுக்கலையாம். அதனால, குழந்தை மூச்சுவிட மாட்டேங்கிறா. செயற்கை சுவாசம்தான் கொடுத்து வைச்சிருக்காங்க. அதுக்கு இன்னொரு ஆபரேஷன் செய்யணும்னு சொல்லியிருக்காங்க.’’

ரோஜா வண்ண தேவதை அவள். பெயர் தவதி. மார்ச் 12-ம் தேதி வந்தால் 5 வயது ஆரம்பிக்கப்போகிறது. ஜனவரி மாதம் வரைக்கும், வரப் போகும் துன்பம் பற்றித் தெரியாமல் தன் குட்டித் தங்கையுடன் ஆடி, பாடிக்கொண்டு இருந்திருக்கிறாள். பிப்ரவரி மாதம் குடித்தத் தண்ணீர்கூட வயிற்றில் தங்காமல் வாந்தி எடுக்க ஆரம்பித்திருக்கிறாள். பனிக்காலத்தில் பிடித்த சளியெல்லாம் வாந்தியில் வெளியேறியதால், நல்லதுதானே என்று அமைதியாக இருந்திருக்கிறார் தவதியின் அம்மா தீபிகா. ஆனால், சிறுமி ஒரு கட்டத்தில் சாப்பிட்ட ஒரு இட்லியையும் வாந்தி எடுக்க ஆரம்பித்தவுடன், பயந்துபோய் டாக்டரைப் பார்த்திருக்கிறார்கள். அங்கு சில பரிசோதனைகளைச் செய்து பார்த்துவிட்டு, குழந்தைக்கு மூளையில் ஏதோ பிரச்னை இருப்பதுபோல தெரிகிறது. எல்லா வசதியும் இருக்கிற பெரிய ஹாஸ்பிட்டலுக்குச் செல்லுங்கள் என்றிருக்கிறார்கள். பிறகு, நுங்கம்பாக்கத்தில் இருக்கிற காஞ்சி காமகோடி சைல்ட் டிரஸ்ட் ஹாஸ்பிட்டலில் சிறுமி தவதியை கொண்டு வந்து அட்மிட் செய்திருக்கிறார்கள். 

`தற்போது எப்படியிருக்கிறாள் சிறுமி தவதி?’ அவள் அம்மாவிடம் கேட்டோம். 

``என் குழந்தை வாந்தி எடுத்து எடுத்து சோர்ந்துபோய் இருந்ததால, அவளை நடக்கவே விடாம பார்த்துக்கிட்டோம். அவள், `அம்மா தலை வலிக்குது’னு சொன்னப்பவும் வாந்தி எடுத்தா தலைவலிக்கிறது நார்மல்தானே’னு நினைச்சுட்டோம். ஆனா, இங்க ஹாஸ்பிட்டல் வந்ததும், பாப்பாவை நடக்கச் சொன்னாங்க. அவ நடக்க ஆரம்பித்ததும் பிட்ஸ் வந்துடுச்சு. என் இதயமே ஒரு நிமிஷம் நின்னு துடிச்சதுங்க’’ என்றவர், கண்ணீரை அடக்கிக்கொண்டு மகளைப் பற்றித் தொடர்ந்து பேசினார். 

``பாப்பாவுக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்துப் பார்த்தாங்க. எல்லோருக்கும் மூளையைச் சுற்றி இருக்கிற தண்ணீர் நகர்ந்துகொண்டே இருக்குமாம். ஆனா, என் குழந்தைக்கு மூளையில் பெரிய கட்டி இருக்கிறதால, அந்தத் தண்ணியால சுத்த முடியலையாம். அதனாலதான், அவ எது சாப்பிட்டாலும் வாந்தி எடுக்கிறான்னு சொன்னாங்க. அவளுக்கு பிரைன் டியூமர்னு சொல்லி `உடனே, ஆபரேஷன் செய்து அந்தக் கட்டியை எடுக்கலைன்னா, குழந்தை கோமாவுக்குப் போயிடுவா’ன்னு சொல்லிட்டாங்க. ஆபரேஷனுக்கு மட்டுமே 3 லட்சம் ஆகியிருக்கு. ஆபரேஷன் செஞ்சதுக்கு அப்புறம், மூளை மூச்சுவிடறதுக்கு கமாண்ட் கொடுக்கலையாம். அதனால, குழந்தை மூச்சுவிட மாட்டேங்கிறா. செயற்கை சுவாசம்தான் கொடுத்து வைச்சிருக்காங்க. அதுக்கு இன்னொரு ஆபரேஷன் செய்யணும்னு சொல்லியிருக்காங்க. யூரினும் அவளா போக மாட்டேங்கிறா. அதுக்கும் மூளை கமாண்ட் கொடுக்கலையாம். அதனால, டியூப் வழியாகத்தான் யூரின் வெளியேறிட்டிருக்கு. இதுக்கு நடுவுல குழந்தைக்கு அடிக்கடி காய்ச்சலும் வருது. அதுக்கும் ட்ரீட்மெண்ட் கொடுத்திட்டு இருக்காங்க. இவற்றைத் தவிர, மருந்து, மாத்திரை, ஐ.சி.யு-வில் இருக்கிறதுன்னு எவ்வளவு செலவாகும்னு தெரியலை. டாக்டர்ஸ் சொல்லும்போது ஒன்பதரை லட்சம் வரைக்கும் செலவாகும்னு சொல்லியிருக்காங்க. எனக்கு பொருளாதாரரீதியா கணவரின் துணையும் இல்லை. நான்தான் வேலைக்குப் போய், குழந்தைகளையும் பராமரித்து வந்தேன். பாப்பாவுக்கு நிலைமை இப்படி ஆனதிலிருந்து வேலைக்கும் போக முடியவில்லை.  

தவதி என்ற பெயருக்கு சாதனை செய்யப் பிறந்தவள்னு அர்த்தம்.  நான்தான் ஆசை ஆசையா அந்தப் பேரை வைச்சேன். என் மகள் பிழைச்சு எழுந்து நிறைய சாதனை செய்யணும். இன்னும் ஒரு வாரத்துல வரப்போகிற அவளுடைய பிறந்த நாளை அவ கொண்டாடணும். அதுக்கு நல்ல உள்ளங்களைத்தான் நம்பியிருக்கேன்’’ என்கிற அந்தத் தாயின் குரல் கண்ணீரில் உடைகிறது. 

வாசகர்களின் கவனத்துக்கு...

தவதிக்கு நீங்கள் நிதியுதவி அளிக்க விரும்பினால், கீழ்க்கண்ட வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தவும்..!

வங்கிப் பரிவர்த்தனைகளுக்கு `HELP DAVATHI’ என description-ல் குறிப்பிடுமாறு வேண்டிக்கொள்கிறோம்!

1. இந்தியாவில் இருக்கும் வாசகர்கள் வாசன் சாரிட்டபிள் டிரஸ்ட்டின் ஹெச்.டி.எஃப்.சி வங்கி சேமிப்பு கணக்கு எண் 00040330019032 (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி கோட்:  HDFC 0000004, ஐடிசி மையம் கிளை, சென்னை-600002) மூலம் அனுப்பலாம்.

2. வெளிநாட்டு வாசகர்கள் வாசன் சாரிட்டபிள் டிரஸ்ட்டின் இந்தியன் வங்கி கரன்ட் அக்கவுன்ட் எண் 443380918 (ஐ.எஃப்.எஸ். கோட்:  IDIB000C032, ஸ்விப்ட் கோட்:  IDIBINBBESI எத்திராஜ் சாலை கிளை, சென்னை - 600008) மூலம் அனுப்பலாம். 

3. நேரில் வந்து நிதி அளிக்க விரும்புவோர், விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 முகவரியில் அளித்து உரிய ரசீதை உடனே பெற்றுக்கொள்ளலாம்.

4. மேலதிக தகவல் மற்றும் நிதி உதவிக்கான ரசீதுகளைப் பெற help@vikatan.com மின்னஞ்சலுக்கு தொடர்புகொள்ளவும்.

அடுத்த கட்டுரைக்கு