Published:Updated:

அறிவுசார்ந்த விஷயங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டிய வயது! - ஆனந்தம் விளையாடும் வீடு - 26

அறிவுசார்ந்த விஷயங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டிய வயது! - ஆனந்தம் விளையாடும் வீடு - 26
பிரீமியம் ஸ்டோரி
அறிவுசார்ந்த விஷயங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டிய வயது! - ஆனந்தம் விளையாடும் வீடு - 26

தனசேகர் கேசவலு குழந்தைகள்நல மருத்துவர்

ங்களுக்கு ‘ட்வீன் ஏஜ்’ (Tween Age) பற்றித் தெரியுமா... ஒரு  குழந்தையின், குழந்தைப் பருவத்தின் இறுதிதான் ‘ட்வீன் ஏஜ்.’ அதாவது, ஒன்பதிலிருந்து 11 வயதுவரையான மூன்று ஆண்டுகளைத்தான் நாங்கள் அப்படிக் குறிப்பிடுவோம். சென்ற இதழில் ஒன்பது வயதுக் குழந்தைகள் பற்றிப் பேசியிருந்தாலும், அந்த வயதைப் பற்றி இன்னும் கொஞ்சம் விளக்கமாகப் பேச விரும்புகிறேன்.

அறிவுசார்ந்த விஷயங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டிய வயது! - ஆனந்தம் விளையாடும் வீடு - 26

வேலைக்குப் போகும் இன்றைய அம்மாக்கள், பிள்ளைகள் ஸ்கூல் முடிந்து டியூஷனுக்குப் போனார்களா, ஸ்போர்ட்ஸ் கோச்சிங் போனார்களா போன்றவற்றைத் தெரிந்துகொள்வதற்காக அவர்கள் கைகளில் போன் கொடுக்கிறார்கள் என்பது ஒரு பக்க நியாயம். அதே நேரம், இந்தப் பருவத்தில்தான் பிள்ளைகள் செல்போனுக்கு அடிமையாவதும் நிகழ ஆரம்பிக்கிறது. இதற்காக செல்போன் கொடுக்காமலும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு அது அத்தியாவசியமாகிவிட்டது. ஆனால், பிள்ளைகள் அதற்கு அடிமையாகாமல் உங்களால் தடுக்க முடியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அறிவுசார்ந்த விஷயங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டிய வயது! - ஆனந்தம் விளையாடும் வீடு - 26

குழந்தைகளின் ஆர்வத்தை ஏதேனும் ஓர் ஆக்கபூர்வமான விஷயத்துக்கு மடைமாற்றினால், அவர்கள் செல்போனை நாடுவது தானாகக் குறையும். அதனால், செடி வளர்ப்பது, அவுட்டோர், இண்டோர் விளையாட்டுகள், கிரியேட்டிவ்வான ஒரு விஷயத்தைச் செய்யவைப்பது, தினமும் சில ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்ளவைப்பது என்று சுவாரஸ்யமாகப் பொழுதைக் கழிக்க அவர்களைப் பழக்கப்படுத்துங்கள். வீண் பொழுதுகள்தாம் அவர்களை செல்போனுக்கு அடிமையாக்கும். அவர்களை இப்படி பிஸியாக வைத்திருக்க, பெற்றோர்தான் கொஞ்சம் மெனக்கெட வேண்டும்.

ஒன்பது வயதில் உங்கள் பிள்ளைகள் வளர்ந்த குழந்தைகள் என்பதால் விளையாட்டு, இசை என அவர்களுடைய தனித்திறமைகளை இந்தக் காலகட்டத்தில் நிச்சயம் வளர்க்க ஆரம்பிக்க வேண்டும். இந்த வயதில் பிள்ளைகள் மன அழுத்தத்திலிருந்தால், ‘தானாகச் சரியாகிவிடுவார்கள்’ என்று இருக்காதீர்கள். உடனே கவனம் செலுத்துங்கள். கட்டியணைப்பது, மடியில் உட்காரவைப்பது என்று பெற்றோரின் ஸ்பரிசம் அவர்களுக்குத் தேவைப்படுகிற வயது இது. வளர்ந்த பிள்ளைகள் என்று நீங்கள் தள்ளி நிற்கக் கூடாத வயதும் இதுதான். ஒரு பாடத்தைப் படிப்பதற்குக் கஷ்டப்படுகிறார்கள் என்றால் அரவணைத்து, ‘இன்று முடியவில்லை என்றால் நாளை செய்டா தங்கம்’ என்று தட்டிக்கொடுங்கள். 

அறிவுசார்ந்த விஷயங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டிய வயது! - ஆனந்தம் விளையாடும் வீடு - 26

மற்ற குழந்தைகளின் கேலிகள் மனதை பாதிக்க ஆரம்பிக்கும் வயது இது. இதை, எந்த இடத்தில் பாசிட்டிவ்வாக எடுத்துக்கொள்ள வேண்டும், எந்த நேரத்தில் நெகட்டிவ்வாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுங்கள். பிள்ளைகளின் விருப்பு வெறுப்புகளைத் தாண்டி, ‘எல்லா விஷயங்களிலும் எல்லா மனிதர்களிலும் நல்ல பக்கம் உண்டு’ என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும். கூடவே, அவன்/ள் வயதிலிருக்கும் மற்ற பிள்ளைகள் மன அழுத்தத்திலிருந்தால், அதை விசாரிக்கவும் சொல்லிக் கொடுங்கள்.

பெண் குழந்தைகளுக்கு ஒன்பது வயது என்பது அவர்கள் வயதுக்கு வரப்போகிற பருவத்துக்குப் பக்கத்தில் வந்துவிட்ட வயது. அதனால், ஹார்மோன் மாற்றங்கள் எக்கச்சக்கமாக நிகழ ஆரம்பிக்கும். திடீரென்று வளர்ந்ததுபோலத் தெரிவார்கள். யதார்த்துக்கு மீறிய கற்பனைகள், கனவுகள், தன் உடல் வளர்ச்சியைவைத்து ‘தான் பெரிய பொண்ணாயிட்டோம்’ என்று நினைத்துக்கொள்வது, அதனால் சுதந்திரமாகச் செயல்படுவது என்றிருக்க ஆரம்பிப்பார்கள். அதனால், அவர்களைக் கொஞ்சம் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஒன்பது வயதில், 30 - 40 நிமிடங்களுக்கு மேல் ஒரு விஷயத்தில் குழந்தைகளால் கவனம் செலுத்த முடியாது. ஸ்கூல் டைம் டேபிளில் ஒரு பீரியட் 40 நிமிடங்கள்தான் என்று வரையறுத்ததற்குக் காரணமே இதுதான். அதனால், அவர்களுடைய கவனச்சிதறல் என்பது இயல்பான விஷயம்தான். அதே நேரம், அவர்களுக்கு போரடிக்காத விஷயங்களில் ரொம்ப நேரம்கூட கவனம் செலுத்துவார்கள்.

எனவே பெற்றோர்களே, ஒன்பதாவது பிறந்தநாளை உங்கள் பிள்ளைகள் கொண்டாடிவிட்டார்கள் என்றால், கெட் ரெடி! மியூசியம் செல்வது, புத்தகக் கண்காட்சிக்குச் செல்வது, நூலகத்துக்குச் செல்வது என்று அறிவுசார்ந்த அத்தனை விஷயங்களையும் அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க ஆரம்பியுங்கள். பிள்ளைகளின் அடிப்படையை பலமாக்குங்கள்.

(வளர்த்தெடுப்போம்...)

ஆ.சாந்தி கணேஷ்