Published:Updated:

ஆனந்தம் விளையாடும் வீடு - 28 - பிரச்னைகளைத் தீர்க்க சொல்லிக்கொடுங்கள்!

ஆனந்தம் விளையாடும் வீடு - 28 - பிரச்னைகளைத் தீர்க்க சொல்லிக்கொடுங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
ஆனந்தம் விளையாடும் வீடு - 28 - பிரச்னைகளைத் தீர்க்க சொல்லிக்கொடுங்கள்!

ஆனந்தம் விளையாடும் வீடு - 28 - பிரச்னைகளைத் தீர்க்க சொல்லிக்கொடுங்கள்!

ஆனந்தம் விளையாடும் வீடு - 28 - பிரச்னைகளைத் தீர்க்க சொல்லிக்கொடுங்கள்!

ஆனந்தம் விளையாடும் வீடு - 28 - பிரச்னைகளைத் தீர்க்க சொல்லிக்கொடுங்கள்!

Published:Updated:
ஆனந்தம் விளையாடும் வீடு - 28 - பிரச்னைகளைத் தீர்க்க சொல்லிக்கொடுங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
ஆனந்தம் விளையாடும் வீடு - 28 - பிரச்னைகளைத் தீர்க்க சொல்லிக்கொடுங்கள்!

ந்த இதழில் 12 வயது பிள்ளைகளைப் பற்றிப் பேசப் போகிறேன்.  இது டீன் ஏஜுக்கு முந்தைய பருவம். பெண் குழந்தைகள் என்றால் பருவமடைந்திருக்கலாம்; ஆண் குழந்தைகள் என்றால் ஆணுறுப்பும் விதைப்பைகளும் பெரிதாகும். இவையெல்லாம் நமக்குத் தெரியும்.  இவற்றையும் தாண்டி, இவர்களின் உணர்வுநிலை எப்படியிருக்கும் என்பதைப் பற்றிச் சொல்லப் போகிறேன்.

ஆனந்தம் விளையாடும் வீடு - 28 - பிரச்னைகளைத் தீர்க்க சொல்லிக்கொடுங்கள்!

தனசேகர் கேசவலு
குழந்தைகள்நல மருத்துவர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

● நிறைய பேசுவார்கள்; அறிவாகப் பேசுவார்கள்; ஆர்வக்கோளாறாகப் பேசுவார்கள். ஓர் உண்மை என்னவென்றால், இந்த வயதில் அவர்கள் இப்படித்தான் பேச வேண்டும்.

● இந்த வயதில் அவர்கள் ஒரு விஷயத்தில் ஜெயித்துவிட்டால், எல்லாவற்றிலும் ஜெயித்தது மாதிரி துள்ளிக் குதிப்பார்கள்; தோல்வியடைந்தால், எல்லாவற்றிலும் தோற்றதுபோல வருந்துவார்கள். அவர்களின் இந்த மனநிலையை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆனந்தம் விளையாடும் வீடு - 28 - பிரச்னைகளைத் தீர்க்க சொல்லிக்கொடுங்கள்!

● பெற்றோர்,  தனக்கு  எல்லா விஷயங்களிலும் சப்போர்ட் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். ஆனால், தன்னுடைய எந்த விஷயத்திலும் தலையிடக் கூடாது என்று நினைப்பார்கள். இது இந்த வயதுக்கேயான முரண்பாடு... அவ்வளவுதான்.

● பள்ளிக்கூடம் மற்றும் சமூகம் சார்ந்த முடிவுகளை அழகாக எடுக்க ஆரம்பிப்பார்கள். தலைமைப் பண்பு தெரிய ஆரம்பிக்கும். அதனால் சில நேரங்களில் கொஞ்சம் கிளர்ச்சியாளர்களைப்போலவும் நடந்துகொள்வார்கள்.  உங்கள் மகளோ, மகனோ சேகுவேராவா, நேதாஜியா, கவிக்குயிலா, தெரசாவா என்பதெல்லாம் தெரியும் வயது இது.

● வீட்டைவிட்டு வெளியிடங்களுக்குச் செல்ல வேண்டும், நிறைய இடங்களைச் சுற்றிப் பார்க்க வேண்டும், சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். இவற்றுக்கு  பெற்றோரின் அனுமதி வேண்டும் என்று விரும்புவார்கள்.

● தன் குடும்பத்திலிருக்கும் பழக்கவழக்கங்களை, `நீதி’ என்று சொல்லப்படுபவற்றை, ‘இதை ஏன் நான் கடைப்பிடிக்க வேண்டும்?’, ‘கடைப்பிடித்தால் என்ன நன்மை கிடைக்கும்?’ என்பதுபோலக் கேள்வி கேட்க ஆரம்பிப்பார்கள். இதற்கு நீங்கள் சரியாக பதில் சொல்லும் பட்சத்தில், உங்கள் குடும்பத்தின் சரியான பழக்கவழக்கங்கள் இன்னும் பலமாகும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

● எதிர்ப்பால் மீது விருப்பம் வருகிற வயது. அதனால், எதிர்ப்பாலினத்தாரைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பிப்பார்கள்.

● மேலை நாடுகளில், இந்த வயதில், ‘நான் புத்த மதத்துக்கு மாறப்போகிறேன்’ என்றெல்லாம் புது லைஃப் ஸ்டைலுக்கே மாறுவார்கள். அதாவது, பெற்றோரின் நம்பிக்கைகளை சேலஞ்ச் செய்ய ஆரம்பிப்பார்கள். நம் நாட்டில் அந்த அளவுக்கெல்லாம் பிள்ளைகள் யோசிப்பதில்லை. ஆனால், பெற்றோர்களை எதிர்த்துப் பேச ஆரம்பிப்பார்கள்.

● பெரியவர்கள்போல நடந்துகொள்ள ஆரம்பிப்பார்கள். அவர்களின் பேச்சில், ‘எல்லாம் எனக்குத் தெரியும்’ என்ற தொனி இருக்கும். பெற்றோர் தப்பு செய்தால், தட்டிக் கேட்க ஆரம்பிப்பார்கள். ‘நீ ஜங்க் ஃபுட் சாப்பிடுறே... என்னைச் சாப்பிடக் கூடாதுனு சொல்றே’, ‘என்னை மொபைல் பார்க்கக் கூடாதுனு சொல்லிட்டு, நீங்க டி.வி பார்த்துட்டு இருக்கீங்க’ என்கிற கேள்விக்கணைகளை எல்லாம் எதிர்கொள்ளத் தயாராக இருங்கள்.

பெற்றோர்களே, சில நிமிடங்கள் ப்ளீஸ்...

● பிள்ளைகளுக்குப் பிரச்னைகளைத் தீர்க்கச் சொல்லிக்கொடுங்கள். கோபத்தை மனதுக்குள் வைக்காமல் பேசச் சொல்லிக்கொடுங்கள்.

● `நீ அறிவாளி, கலைஞன், ஓவியன், விளையாட்டு வீரன், டான்ஸர், படிப்பாளி...’ என்று பிள்ளைகளின் மீது முத்திரை குத்தாதீர்கள். இது கேட்பதற்கு நல்ல விஷயம்போலத்தான் இருக்கும். ஆனால் பிள்ளைகள், ‘எனக்கு ஓவியம் மட்டும்தான் வரைய வரும்’ என்றோ, ‘நான் அறிவாளி, அதனால் எனக்கு எல்லாம் தெரியும்’ என்றோ மனதுக்குள் தீர்மானித்துக்கொள்வார்கள். இந்த மாதிரியான தீர்மானங்கள் மற்ற தளங்களில் அவர்களின் வளர்ச்சியைத் தடுத்துவிடலாம்.

● அவர்களுக்கு நன்மை செய்யும் கட்டுப்பாடுகளே என்றாலும், நச்சரிக்கும் தொனியில் சொல்லிக்கொண்டே இருக்காதீர்கள். தேவைப்பட்டால், கட்டுப்பாடுகளைத் தளர்த்துங்கள்.

● நீங்கள் அழுக்குத்துணியைக் கூடையில் போட்டால், உங்கள் மகனும் அதைச் செய்வான். நீங்கள் எந்நேரமும் செல்போன் பார்த்துக்கொண்டிருந்தால், உங்கள் மகளும் அதைத்தான் செய்வாள்... கவனம் பெற்றோர்களே.

● ‘என் ஆதரவு எப்போதும் உனக்குத்தான்’ என்பதை வார்த்தைகளாகச் சொல்லாமல் செயல்களில் உணர்த்துங்கள். எது ஒழுக்கம் என்பதைக் கண்முன் உதாரணமாக நடந்து காட்டுங்கள். கண்களைப் பார்த்துப் பேசச் சொல்லுங்கள். ‘பெண்கள் உன் தோழிகள்’ என்று ஆண் குழந்தைகளுக்கும், ‘ஆண்கள் உன் நண்பர்கள்’ என்று பெண் குழந்தைகளுக்கும் மனதின் ஆழத்தில் பதியவைத்துவிடுங்கள். பிள்ளைகளின் ஆசிரியர்களுடன் தொடர்பில் இருங்கள். வருடத்துக்கு மூன்று, நான்கு முறையாவது அவர்களைச் சந்திக்கலாம்.

● இந்த வயதில் உடலின் வேகமான வளர்ச்சி காரணமாகவோ அல்லது அந்த வளர்ச்சியின் மீதான  இந்த உலகத்தின் கவனம் காரணமாகவோ பெண் குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படலாம். அவர்களின் உடலின் மேல் மட்டுமல்லாமல், மனதின் மேலும் கவனம் வையுங்கள்.

● ரொமான்ஸ் ஆரம்பிக்கிற வயது. இது இயல்பான விஷயம். பருவ மாற்றம். இந்த உணர்வு நோய் கிடையாது. எதிர்ப்பாலின ஈர்ப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்று. ‘நான் சின்ன வயசுல குனிஞ்ச தலை நிமிராம நடப்பேன்’ என்று உங்கள் வளரிளம் பருவத்துடன், உங்கள் பிள்ளைகளின் வளரிளம் பருவத்தை ஒப்பிடாதீர்கள். அவர்களின் பிரச்னைகளை, அவற்றுக்கான தீர்வுகளை, அவர்களின் காலத்தில் நின்று தீர்த்துவையுங்கள். முக்கியமாக, வீட்டுக்கு வெளியே எது நடந்தாலும் ஓடி வந்து உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் அளவுக்குப் பிள்ளைகளுடன் நட்பாக இருங்கள். ‘என் பெற்றோருக்கு என்னைப் பற்றி எல்லாமும் தெரியும்’ என்கிற கர்வத்தைப் பிள்ளைகளுக்குக் கொடுங்கள்.

(நிறைவடைந்தது)


ஆ.சாந்தி கணேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism