நோயாளிகளின் ஆரோக்கியத்தைக் காப்பதற்காக, 24 மணி நேரம் போதாமல் ஓடிக்கொண்டிருக்கும் மருத்துவர்கள், தங்கள் நேரத்தை எப்படி நிர்வகிக்கிறார்கள்... அவர்களின் விருப்பங்கள், பொழுதுபோக்குகள் மற்றும் உடல், மன ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களை எப்படித் திட்டமிடுகிறார்கள்..?

தமிழகத்தின் பிரபலமான சில மருத்துவர்களிடம் பேசினோம்.

‘‘தம்பதியரின் வாழ்த்துகளே வாழவைக்கின்றன!’’

குழந்தையின்மை சிகிச்சையின் தன்மையை மாற்றியவர், 35 ஆண்டுகளில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரசவங்கள் பார்த்தவர் என்ற பெருமைக்குரியவர், மகப்பேறு மருத்துவ நிபுணர் கமலா செல்வராஜ்.

“என் அப்பா நடிகர் ஜெமினி கணேசன் ஒருநாள்கூட சும்மா உட்கார்ந்து நான் பார்த்ததில்லை. எப்போதும் படப்பிடிப்பிலேயே இருப்பார். நானும் அப்படித்தான். ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய வேலைகளை டைரியில் குறித்து வைத்துக்கொள்வேன். என் பேரப்பிள்ளைகளுக்கு அன்பளிப்புகள் வாங்குவதிலிருந்து மருத்துவமனையில் நோயாளிக்கு மருந்து கொடுப்பதுவரை அனைத்தையும் டைரிதான் எனக்கு நினைவுபடுத்தும். ஊருக்குச் செல்ல வேண்டுமென்றால், 15 நாள்களுக்கு முன்னதாக என் பொருள்களையெல்லாம் எடுத்து, பெட்டியில் அடுக்கி வைத்துவிடுவேன். பல நாள்கள், மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடித்து அங்கிருந்து அப்படியே விமான நிலையத்துக்குச் சென்றிருக்கிறேன். நான், என் கணவர், என் மகள், மகன் என அனைவரும் ஒரே கட்டடத்தில்தான் குடியிருக்கிறோம். ஆனாலும் நாங்கள் அனைவரும் ஒன்றாகச் செலவழிக்கும் நேரம் மிகவும் குறைவு. மகள், மகன் இருவருமே மருத்துவர்கள் என்பதால், அனைவருமே மருத்துவமனையில்தான் சந்தித்துக்கொள்வோம். குடும்பத்தில் எந்த சந்தோஷ, துக்க நிகழ்வுகள் நடந்தாலும், புறநோயாளிகள் சிகிச்சையை ஒருநாள்கூட நிறுத்தியதில்லை.

நேரம், காலம், தூக்கம், சாப்பாடு என எதையும் பார்க்காமல் பல ஆண்டுகள் வேலை செய்திருக்கிறேன். சில சமயங்களில் உணவு ஒவ்வாமைகூட ஏற்பட்டிருக்கிறது. ஆனால், எதையும் மனதில் ஏற்றிக்கொள்ள மாட்டேன். இப்போதும் காலை 6 மணிக்கு எழுந்தால் இரவு 10 மணிவரை நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டேதான் இருக்கிறேன். குழந்தையின்மைப் பிரச்னைக்காக வருபவர்களுக்கு சிகிச்சை அளித்து, அந்தப் பெண்கள் கருவுற்று, பிரசவத்துக்குப் பிறகு குழந்தையை எடுத்து அவர்களிடம் கொடுக்கும்போது கிடைக்கும் மனநிறைவை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அந்தக் குடும்பத்தினர், ‘டாக்டர் நீங்க 100 வருஷம் நல்லா இருக்கணும்’ என்று வாழ்த்துவதுதான் என்னை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்கிறது...” என்கிறார் மருத்துவர் கமலா.

‘‘சினிமா பார்த்து 27 ஆண்டுகள் ஆகின்றன!’’

காது, மூக்கு, தொண்டை மருத்துவத்தில் 42 ஆண்டுகள் அனுபவமுள்ளவர் டாக்டர் மோகன் காமேஸ்வரன்.

“என்னுடைய நாள் தினமும் காலை 5 மணிக்குத் தொடங்கும். 6 மணி முதல் 7:15வரை உடற்பயிற்சி செய்வேன். வீட்டிலேயே ஜிம் வைத்திருக்கிறேன். தனிப்பட்ட பயிற்சியாளர் உதவியுடன் தினமும் உடற்பயிற்சிகள் செய்வேன். வேறு இடத்துக்கோ, வெளிநாட்டுக்கோ சென்றாலும் ஜிம் வசதி இருக்கும் ஹோட்டலில்தான் தங்குவேன். என் அப்பாவுக்கு 90 வயது. தினமும் காலையில் அரை மணி நேரம் அவருடன் மனம்விட்டுப் பேசிக் கொண்டிருப்பேன். வீட்டிலிருந்து 8 மணிக்குக் கிளம்பி மருத்துவமனைக்குச் செல்வேன்.

8:30 மணிக்கு அறுவை சிகிச்சை அரங்கில் நுழைந்தால், மதியம் 2:30 மணிவரை அதுதான் உலகம். என் மனைவி மருத்துவமனையை நிர்வகிப்பதால், அங்கேயே இருவரும் மதிய உணவைச் சாப்பிடுவோம். சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு, மாலை 4:30 மணிக்கு புறநோயாளிகளைப் பார்க்கத் தொடங்கினால் நிறைவடைய இரவு 10:30 மணியாகும். அதற்குப் பிறகு வீட்டுக்குச் சென்று இரவு உணவு, புத்தக வாசிப்பு முடித்து 11:30 மணிக்கு உறங்கச் செல்வேன். உணவில் புரதச்சத்துள்ள பழங்கள், தானியங்களை அதிகம் சேர்த்துக்கொள்வேன். கார்போஹைட்ரேட் உணவைக் குறைத்துவிடுவேன். ஐந்து நட்சத்திர ஹோட்டலில் மீட்டிங்கில் பங்கேற்றால்கூட வீட்டுக்குப் போய்தான் சாப்பிடுவேன்.

பெரும்பாலும் வார இறுதிநாள்களில் மருத்துவக் கருத்தரங்கம், மாணவர்களுக்குப் பயிற்சி என வெளிநாடுகளுக்கோ, வெளி மாநிலங்களுக்கோ செல்ல நேரிடும். ஆனால் நோயாளிகளுக்கு அவசர சிகிச்சையளிக்க வேண்டுமென்றால், வெளிநாட்டுப் பயணங்களைக்கூட யோசிக்காமல் ரத்து செய்துவிடுவேன். வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியாத சூழல்கூட ஏற்பட்டிருக்கிறது. ‘மருத்துவச் சேவைக்காக சமரசம் செய்துகொண்டேன்’ என்பது அதன் அர்த்தமல்ல, `அது மருத்துவருடைய கடமை’ என்று நினைக்கிறேன். இந்தத் துறையைத் தேர்ந்தெடுக்கும்போதே, வேலைப்பளு எப்படி இருக்கும் என்று தெரியும். என் மனைவியிடமும் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேன். என் பிள்ளைகளுக்கும் தெரியும். எப்போதும் என் நோயாளிகளுக்குத்தான் முன்னுரிமை. தேவையில்லாமல் என் நேரத்தைச் செலவழிக்கவே மாட்டேன். நான் திரையரங்கில் சினிமா பார்த்து 27 ஆண்டுகள் ஆகின்றன...” என்கிறார் மருத்துவர் மோகன் காமேஸ்வரன்.

‘‘குட்டித் தூக்கம் தவிர்க்க மாட்டேன்!’’

சர்க்கரைநோய் மருத்துவத் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான பங்களிப்பை அளித்துவருகிறார் டாக்டர் வி.மோகன்.

“அடுத்தநாள் என்னென்ன வேலைகளைச் செய்ய வேண்டும் என்பதை முதல்நாள் இரவே திட்டமிட்டுவிடுவேன். என்னுடைய காலை நேரம், நடைப்பயிற்சியுடன் தொடங்கும். ஒரு மணி நேர நடைப்பயிற்சி முடித்துவிட்டு யோகா செய்வேன். பிராணாயாமம், தியானம் இரண்டுமே எனக்கு முக்கியம். இரவு தாமதமாகப் படுத்தால் காலையில் நடைப்பயிற்சியைக் கைவிட்டுவிடுவேன். ஆனால் யோகா, பிராணாயாமம் தவறாமல் செய்துவிடுவேன். ஒருநாள் அவற்றைத் தவிர்த்தால்கூட அன்றைய தினம் முழுமையடையாது. காலை 9 மணி முதல் 6:30 மணிவரை மருத்துவமனையில் என் வேலை நேரம். காலை நேரம் நோயாளிகளைப் பார்ப்பேன். மதிய நேரத்தில் நிர்வாக வேலைகள், கூட்டங்கள், ஆய்வுக்கான வேலைகள், மருத்துவர்களுக்கு வகுப்பெடுப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுவேன். பிற்பகல் அரை மணி நேரம் ஒரு குட்டித் தூக்கம் இல்லாவிட்டால் இரவு 7:30 மணிக்கே சோர்வாகிவிடும். ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் இரண்டு மணி நேரம் உறங்குவேன். வெளியிடங்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ சென்றாலும்கூட அரை மணி நேரம் ஓய்வெடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். இரவு வீடு வந்ததும், ஆய்வுக் கட்டுரைகள் குறித்த வேலைகளில் ஈடுபடுவேன். பேரனுடன் சிறிது நேரம் செலவழிப்பேன். இரவு உணவை மகள், மருமகன், பேரன் அனைவரும் குடும்பமாகச் சேர்ந்து சாப்பிடுவோம். அதிக அளவில் பயணங்கள் செய்ய வேண்டியிருக்கும். அதனால் ஆய்வுக் கட்டுரைகள் குறித்த பணிகள் அனைத்தையும் பயண நேரங்களில்தான் மேற்கொள்வேன்.

விமான நிலையத்தில் நுழைந்ததுமே வேலைகளைத் தொடங்கிவிடுவேன். செல்போன் போன்ற எந்தத் தொந்தரவும் இல்லாமல் கவனமாக, நிம்மதியாக வேலைகளைச் செய்ய முடியும். அதனால்தான் 1,200 ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பிக்க முடிந்தது” என்கிறார் மருத்துவர் வி.மோகன்.

‘‘எட்டு எட்டா பிரிச்சுப்பேன்!’’

இந்திய அளவில் புகழ்பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணர் சொக்கலிங்கம். பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோருக்குச் சிகிச்சையளித்தவர். 50 ஆண்டுகள் அனுபவமுள்ளவர்.

“ `எண்ணம் சீராக, உண்ணும் உணவு சீராக, உடற்பயிற்சியும் சீராக இருக்க வேண்டும்’ - இதுதான் நான் கடைப்பிடிக்கும் வாழ்வியல் மந்திரம். எட்டு மணி நேரம் தூக்கம், எட்டு மணி நேரம் சுய பயன்பாட்டுக்கு, எட்டு மணி நேரம் வேலைக்கு... இந்த நேர மேலாண்மையை நான் எப்போதும் கடைப்பிடித்துவருகிறேன். எனக்காக ஒதுக்கிக்கொண்ட எட்டு மணி நேரத்தில் என் சொந்தத் தேவைகள் தவிர, குடும்பத்தினருடன், உறவினர்களுடன், நண்பர்களுடன் உறவாடுகிறேன். தவிர, தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு மணி நேரம் ‘பிரிஸ்க் வாக்கிங்’ செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். பத்து நிமிடங்கள் உடற்பயிற்சி, பத்து நிமிடங்கள் தியானம் செய்கிறேன். அரிசி மற்றும் கோதுமை உணவுகளைப் பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன். காய்கறிகள், பழங்கள் அதிகமாகச் சாப்பிடுவேன். உணவில் 50 சதவிகிதம் காய்கறிகள், பழங்கள், 25 சதவிகிதம் பருப்பு வகைகள், 25 சதவிகிதம் நட்ஸ் இருக்குமாறு பார்த்துக்கொள்வேன்.

அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு வெற்றிடம்... இதை நான் எப்போதும் கடைப்பிடிக்கிறேன். காலை உணவை அதிகமாகவும், மதிய உணவைக் குறைவாகவும், இரவு உணவை மிகக் குறைவாகவும் உட்கொள்கிறேன். தூங்கச் செல்வதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்னதாக இரவு உணவைச் சாப்பிட்டுவிடுவேன். ஒரு கப் சூடான பால், சில துண்டுகள் ஆப்பிள் சாப்பிடுவேன். இரவில் காமெடி சேனல்கள், நியூஸ் சேனல்கள் பார்ப்பேன். அடிக்கடி தியேட்டருக்குச் சென்று திரைப்படங்கள் பார்ப்பேன். `Avoid hurry, worry, curry to get buried...’ இதுதான் என் மகிழ்ச்சிக்கான தாரக மந்திரம்...” என்கிறார் மருத்துவர் சொக்கலிங்கம்.

- ஜெனி ஃப்ரீடா, இரா.செந்தில் குமார்