Published:Updated:

5 மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை! - டெல்லி மருத்துவர்கள் புதிய சாதனை

5 மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை! - டெல்லி மருத்துவர்கள் புதிய சாதனை
5 மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை! - டெல்லி மருத்துவர்கள் புதிய சாதனை

புதுடெல்லியைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 5 மாத பெண் குழந்தையான எரினாதேவுக்கு, மஞ்சள்காமாலை உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பாதிக்கப்பட்டன. இதற்காகப் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை. இந்நிலையில், கல்லீரல் பாதிக்கப்பட்டு குழந்தையின் உடல்நிலை கவலைக்கிடமானது. இந்நிலையில், புதுடெல்லி மேக்ஸ்  சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் குழந்தையைச் சேர்த்தனர். 

10 கிலோ எடையுடன் இருந்த குழந்தைக்கு மருத்துவர்கள் பல்வேறு பரிசோதனைகளைச் செய்துபார்த்துவிட்டு, குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்யத் திட்டமிட்டனர். இதற்காக, குழந்தையின் தாய் தனது கல்லீரலைத் தானமாகக் கொடுக்க முன்வந்தார். இதையடுத்து, மருத்துவர்கள் அறுவைசிகிச்சை மூலம் தாயின் இடதுபக்க கல்லீரலை வெட்டி எடுத்து, எந்தப் பாதிப்பும் ஏற்படாத அளவுக்கு அதை 182 கிராம் அளவுக்கு சிறிதாக்கினர்.

தாயிடம் இருந்து பெறப்பட்ட கல்லீரலை அறுவைசிகிச்சை மூலம் குழந்தைக்கு வெற்றிகரமாகப் பொருத்தி, ரத்தக் குழாய்கள், பித்தக் குழாய்களை முறையாக இணைத்தனர். 10 மணி நேரம் நடந்த கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைக்குப் பிறகு, குழந்தை நலமாக இருக்கிறது. கல்லீரலைத் தானம்செய்த தாயும் நலமாக இருக்கிறார்.

22 நாள்கள் மருத்துவமனையில் பராமரிக்கப்பட்ட அந்தக் குழந்தை, தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 5 மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருப்பது, நாட்டிலேயே இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.