Published:Updated:

குழந்தைகளுக்கு பிரிவுப் பதற்றம் ஏன் ஏற்படுகிறது? - காரணங்கள், தீர்வுகள்!

ஒரு குழந்தை ஆறு மாதத்திலிருந்து நபர்களை அடையாளம் கண்டுகொள்ளத் தொடங்கும். அந்தத் தருணத்தில், தன்னிடம் அன்புகாட்டுபவரிடமிருந்து சிறிதுநேரம் பிரிவதைக்கூட குழந்தை ஏற்றுக்கொள்ளாது. அது அம்மாவாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அப்பாவாகவோ, வேலைக்குச் செல்லும்போது குழந்தைகளை விட்டுச்செல்லும் உதவியாளராகவோகூட இருக்கலாம்.

குழந்தைகளுக்கு பிரிவுப் பதற்றம் ஏன் ஏற்படுகிறது? - காரணங்கள், தீர்வுகள்!
குழந்தைகளுக்கு பிரிவுப் பதற்றம் ஏன் ஏற்படுகிறது? - காரணங்கள், தீர்வுகள்!

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. அவர்களின் பக்குவமறிந்து நேர்மறையான சிந்தனைகளை விதைத்து வளர்த்தெடுப்பது என்பது பெற்றோருக்கு பெரும் சவால்தான். குழந்தை வளர்ப்பில் பெற்றோர் காட்டும் சிறு அலட்சியம், கவனக்குறைவுகூட உளவியல் ரீதியாக அவர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். அதனால், அந்தக் குழந்தை வளர்ந்து சமுதாயத்தின் ஓர் அங்கமாக மாறும்போது, பல்வேறு விளைவுகளைச் சந்திக்க நேரிடும். 

குழந்தைகளுக்கு பிரிவுப் பதற்றம் ஏன் ஏற்படுகிறது? - காரணங்கள், தீர்வுகள்!

ஆண், பெண் இருவருமே வீட்டின் பொருளாதாரத்துக்காக உழைக்கும் காலம் இது. திருமணமாகி குழந்தை பிறந்த பிறகு, தான் பார்க்கும் வேலையை விட்டுவிட்டு குழந்தை வளர்ப்பில் கவனம்செலுத்தும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. 

குழந்தை பிறப்புக்கு ஒரு சிறிய இடைவெளி மட்டும் எடுத்துவிட்டு, மீண்டும் வேலைக்குச் செல்லும் பெண்கள்தான் அதிகமாக இருக்கின்றனர். மகப்பேறு விடுமுறை காலம் 6 மாதம் முதல் அதிகபட்சம் 9 மாதம் வரை வழங்கப்படுகிறது. அதற்குப் பிறகு, குழந்தையைப் பிரிந்து வேலைக்குச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால், அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைதான்.

குழந்தைகளுக்கு பிரிவுப் பதற்றம் ஏன் ஏற்படுகிறது? - காரணங்கள், தீர்வுகள்!

அதுவரை அம்மாவின் அரவணைப்பிலேயே இருந்த குழந்தை, வேறு ஒருவரின் கண்காணிப்புக்குச் செல்ல நேரிடும். இது, இயல்பான விஷயமாக இருந்தாலும், இந்தப் பிரிவு குழந்தைகளிடையே, 'பிரிவுப் பதற்றம்' (Separation anxiety)என்ற உளவியல் பிரச்னையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்கின்றனர் மருத்துவர்கள்.

பிரிவுப் பதற்றம் என்றால் என்ன, அதைப் பெற்றோர் எப்படிக் கையாள வேண்டும் என்று  குழந்தை நல மருத்துவர் டாக்டர் ஜெயக்குமார் ரெட்டி விளக்குகிறார்.

"ஒரு குழந்தை ஆறு மாதத்திலிருந்து நபர்களை அடையாளம் கண்டுகொள்ளத் தொடங்கும். அந்தத் தருணத்தில், தன்னிடம்

குழந்தைகளுக்கு பிரிவுப் பதற்றம் ஏன் ஏற்படுகிறது? - காரணங்கள், தீர்வுகள்!

அன்புகாட்டுபவரிடமிருந்து  சிறிதுநேரம் பிரிவதைக்கூட குழந்தை ஏற்றுக்கொள்ளாது. அது, அம்மாவாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அப்பாவாகவோ, வேலைக்குச் செல்லும்போது குழந்தைகளை விட்டுச்செல்லும் உதவியாளராகவோகூட இருக்கலாம். குழந்தையை யார் அதிகம் பராமரிக்கிறார்களோ, அதனுடன் அதிக நேரம் செலவழிக்கிறார்களோ... அவர்கள் வேலைக்குச் செல்லும்போதோ, வீட்டைவிட்டு வெளியே செல்லும்போதோ குழந்தையால் தாங்கிக்கொள்ள முடியாது. 
சிறுவயதுக் குழந்தைகள் அதிக நேரம் தூங்கிக்கொண்டே இருப்பார்கள். தூங்கி எழும்போது, அருகில் அம்மாவோ குழந்தையைக் கவனித்துக்கொள்பவர்களோ இல்லையென்றால் அழத்தொடங்குவார்கள்.

அவர்கள் அலுவலகத்துக்கோ, வெளியிடங்களுக்கோ செல்லும் தருணத்தில் அழுவது, அவர்கள் கிளம்புகிறார்கள் என்று தெரிந்துவிட்டால் அவர்களை சுற்றிச்சுற்றி வருவது, அழத்தொடங்குவது போன்ற செயல்பாடுகளைக் குழந்தைகளிடம் இயல்பாகப் பார்க்கமுடியும். ஆனால், அவர்கள் வெளியே சென்று நீண்ட நேரமாகியும் அழுதுகொண்டேயிருப்பது, சாப்பாட்டைத் தவிர்ப்பது, தூங்காமல் நச்சரிப்பது, எரிச்சல் உணர்வு, பயம், பதற்றம் போன்ற நிலை நீடிப்பதையே 'பிரிவுப் பதற்றம்' என்கிறோம்.

'பிரிவுப் பதற்றம்' என்பது, கூட்டுக் குடும்பங்களில் மிகவும் குறைவு. அம்மாவின் அரவணைப்பு இல்லாவிட்டாலும், குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள தாத்தா, பாட்டி போன்ற நெருங்கிய உறவினர்கள் இருப்பார்கள். ஆனால், தனிக்குடும்பங்களில் அப்பா, அம்மா, குழந்தைகள் மட்டும்தான் இருக்கின்றனர். இதனால், குழந்தைகள் 24 மணி நேரமும் அம்மாவின் அருகில் இருக்க விரும்புகிறார்கள். 
குழந்தைகள், பெற்றோர் தவிர வேறு யாரிடமும் ஈடுபாடு காட்ட மாட்டார்கள். பெற்றோர்,  '24 மணி நேரமும் நான்தான் என் குழந்தையைப் பார்த்துக்கொள்வேன்' என்று நினைத்தால், பிரிவுப் பதற்றம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதனால், ஏதேனும் அவசர அல்லது அத்தியாவசிய நேர்வுகள் நிகழும்போது குழந்தைகளை விட்டுவிட்டு பெற்றோரால் போகமுடியாத நிலை ஏற்படும். இந்த நிலை தொடர்ந்தால், அந்தக் குழந்தை பள்ளிக்குச் செல்லும்போது அதன் இயல்பான நடத்தையில் மாற்றம் ஏற்படும். இதனால், பேசுவதில் தாமதம், கண்ணைப் பார்த்து பேசுவதைத் தவிர்ப்பது போன்ற நிலை ஏற்படும். மாணவர்களுடன் இயல்பாகப் பழகமுடியாத நிலை ஏற்பட்டு, தனிமையை நாடும் சூழலும் ஏற்படலாம்.

குழந்தைகளுக்கு பிரிவுப் பதற்றம் ஏன் ஏற்படுகிறது? - காரணங்கள், தீர்வுகள்!

பெரிய குற்ற வழக்குகளில் சிக்குபவர்களின் கதைகளைக் கேட்டால், 'சிறு வயதில் ஏற்பட்ட ஏதோ ஒரு பாதிப்புதான் இதுபோன்ற செயல்களைச் செய்வதற்கு தூண்டியதாக'ச் சொல்வார்கள். பிரிவுப் பதற்றம்கூட இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். பெற்றோர்தான் ஒரு குழந்தையின் குழந்தைப் பருவத்தில் பெரும்பங்கு வகிக்கின்றனர். 

உறவினர்களைக் குழந்தைகளிடம் பழகவிட்டாலே இந்தப் பிரச்னை எளிதாகத் தீர்ந்துவிடும். குழந்தை பிறந்து ஆறுமாதம் ஆகி, நபர்களை அடையாளம் கண்டுபிடிக்கத் தொடங்கியதும், அவர்களிடம் தாத்தா, பாட்டி போன்ற நெருங்கிய உறவினர்களை அறிமுகப்படுத்த வேண்டும். அவர்களையும் குழந்தைகளைக் கையாள்வதற்கு அனுமதிக்க வேண்டும். அதனால் அம்மா இல்லாவிட்டாலும் அந்தச் சூழலை அனுசரித்துச் செல்ல குழந்தை பழகிவிடும். 

குழந்தைகளுக்கு பிரிவுப் பதற்றம் ஏன் ஏற்படுகிறது? - காரணங்கள், தீர்வுகள்!

உறவினர்களிடம் குழந்தைகளை விட்டுச்செல்லும்போது, 'நான் உடனே வந்துவிடுவேன்' என்று பொய்யெல்லாம் சொல்லக் கூடாது. உண்மையைச் சொல்லிவிட்டுச் செல்ல வேண்டும். பெற்றோர் இல்லை என்றாலும் குழந்தைகள் இயல்பாக இருக்கும் வகையில் நல்ல சூழலை உருவாக்கிவிட்டுப் போக வேண்டும். உடன் இருக்கும் நேரங்களில் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். 

பிரிவுப் பதற்றத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையைப் பெற்றோர் கையாள முடியாத கட்டத்தில், குழந்தைகள் நல நிபுணர் அல்லது குழந்தைகள் மனநல மருத்துவரை அணுகலாம். மருத்துவர்களின் எளிய ஆலோசனைகள், வழிமுறைகள் இந்தப் பாதிப்பிலிருந்து மீள்வதற்கு உதவிபுரியும்" என்கிறார், டாக்டர் ஜெயக்குமார் ரெட்டி.