Published:Updated:

சுட்டி மனசு !

தொகுப்பு: ஞா.அண்ணாமலை ராஜா, எஸ்.அனுசத்யா, சா.வடிவரசு படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

சொசனியா ரோஸ், யு.கே.ஜி, சென்னை.

சுட்டி மனசு !
##~##

'நான் எங்க வீட்ல சொப்பு  வெச்சு விளையாடுவேன், எங்க வீட்டுக்கிட்டே எனக்கு அதிகமா ஃப்ரெண்ட்ஸ் இல்லை. மாடி வீட்ல ஒரே ஒரு ஃப்ரெண்டுதான் இருக்கா. அவகூடதான் எப்போவாச்சும் விளையாடுவேன். அந்த ஃப்ரெண்டுகூட விளையாடக் கூடாதுன்னு எங்க பாட்டி திட்டிக்கிட்டே இருப்பாங்க. எங்க அப்பா, 'படிச்சுட்டுப் போய் விளையாடு. இல்லன்னா, அடி கொடுப்பேன்’னு திட்டுவாரு. நானும் படிச்சுட்டு விளையாடக் கிளம்புவேன், பாட்டிவிட மாட்டாங்க. நான் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கணும்னு அப்பா சொல்வாரு. ஒழுங்காப் படிக்கலைன்னா, எங்க அப்பா ஸ்கேலால்  அடிப்பாரு. நான் நல்லாத்தான் படிக்கிறேன். ஆனா, ரேங்க் வாங்கணும்கிறாங்க. எதுக்குத்தான் ரேங்க் வெச்சாங்களோ... எனக்கு ஒண்ணுமே புரியலை அங்கிள்.''

கோகுல், 5-ஆம் வகுப்பு, சென்னை.

சுட்டி மனசு !

''எனக்குத் தாய்மொழி கன்னடம். தமிழ் படிக்கவே வர மாட்டேங்குது. ஏகப்பட்ட ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ். இதனால ஸ்கூலில் டீச்சர் திட்டுறாங்க. வீட்டுக்கு வந்தா, அம்மா திட்டுறாங்க. திட்டுனா மட்டும் வந்துருமா? திட்டுற நேரத்துல எனக்குச் சொல்லிக்கொடுக்கலாம்ல அங்கிள்? நான் என்ன வேணும்னேவா பண்றேன். ஸ்கூலில்தான் படிச்சுட்டு வர்றோம். கொஞ்ச நேரம் விளையாடலாம்னா, அம்மா விட மாட்டாங்க. ரொம்ப நாளா நான் கேட்டுக்கிட்டு இருந்த சைக்கிள் இப்பதான் வாங்கிக் கொடுத்தாங்க. ஆனா, 'எங்கயாச்சும் போய் விழுந்திடுவே, காலை ஒடிச்சுக்குவே’னு எடுக்க விட மாட்டேங்கிறாங்க. அதை ஓட்டிப்பார்க்க ஆசையா இருக்கு அங்கிள். சைக்கிளை எடுக்கக் கூடாதுனா, அப்புறம் எதுக்குத்தான் வாங்கினாங்களோ தெரியலை.''

வ.ஷோபிகா, 4-ஆம் வகுப்பு, கரூர்.

சுட்டி மனசு !

''எங்க அம்மா சொப்பு சாமான் வெச்சு விளையாடவே விட மாட்டேங்குறாங்க அங்கிள். 'ஒழுங்காப் படிக்கிற வழியைப் பாரு. பெருசாகி சமையல்காரி வேலைக்கா போகப்  போறே’ங்கிறாங்க. ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் அவங்க அவங்க வீட்டுல இருந்து அரிசி, பருப்பு, உப்பு எல்லாம் எடுத்து வந்து சொப்புகளில்  சமைப்போம். ஒரு நாள் எங்க வீட்ல லெமன் ரைஸ்ல கரப்பான் பூச்சி கிடந்துச்சு. அதுல இருந்து எனக்கு லெமன் ரைஸே பிடிக்காது. ஆனா, அதை வாரம் ஒரு நாள் சமைச்சுத் தர்றாங்க. சாப்பிடலைனா, 'உனக்குனு ஸ்பெஷலா சமைக்க முடியாது’னு அடிக்கிறாங்க. எனக்கு கம்ப்யூட்டர்ல பார்பி டால்  பார்க்கப் பிடிக்கும். ஆனா, எங்க அப்பா அதை எல்லாம் பார்க்க விட மாட்டாரு. அதுவும் தவிர எனக்கு சிஸ்டம்ல வேலை இருக்குன்னு திட்டுவாரு. எனக்கு ஒத்த சடை போட ரொம்பப் பிடிக்கும். ஆனா  அம்மா ரெட்டைச் சடை தான் போட்டுக்கணும்னு சொல்றாங்க. நான் ஏதாவது சின்னத் தப்பு செஞ்சுட்டா, உடனே வீட்டுல இருக்கிற கம்பி மத்தாப்பு கம்பியை வச்சி அடிக்கிறாங்க. அது எவ்ளோ வலிக்கும் தெரியுமா?''

சிந்தியா ஜோஸ்,1-ஆம் வகுப்பு, சென்னை.

சுட்டி மனசு !

'எனக்குக் கார்ட்டூன் பார்க்க ரொம்பப் புடிக்கும். ஆனா, அப்பா பார்க்க விட மாட்டாரு. எனக்குப் பிடிச்ச பொருள் எதுனா வேணும்னு கேட்டா, வாங்கித் தர மாட்டாரு. வாங்கித் தரலைனா, அழுகை அழுகையா வரும். சில நாள் ரூமுக்கு உள்ளே போய் அழுது இருக்கேன். ஹோம் வொர்க் எல்லாம் எழுதி முடிச்சிட்டாலும், அம்மா விளையாட விட மாட்டாங்க  படிக்கச் சொல்வாங்க, எங்க அப்பா அம்மா எங்ககூட விளையாடவே மாட்டாங்க. என் ஃபிரெண்ட்ஸ் எல்லாம் அவங்க அப்பா அம்மாகூட நல்ல விளையாடுவாங்களாம். ஆனா, என்கூட மட்டும் எங்க வீட்ல யாருமே விளையாட மாட்டாங்க. தெரியாம ஏதாச்சும் தப்பு செஞ்சேன்னா மட்டும், சின்னப் பிள்ளைதானேன்னுகூடப் பாக்காம ரெண்டு பேருமே அடிப்பாங்க. ஒருநாள், நான் என் ஃப்ரெண்டுகிட்டே பென்சில் வாங்கினேன். எங்க அம்மா செம அடி அடிச்சுட்டாங்க. அதுல இருந்து யார்கிட்டயும் எந்தப் பொருளும் வாங்க மாட்டேன். விளையாடவிடாமத் திரும்பத் திரும்பப் படிக்கவோ, எழுதவோ சொல்வாங்க, பல நாள் என்னுடைய ஹோம் வொர்க்கை ரெண்டு மூணு தடவை செஞ்சு இருக்கேன். தினமும் எவ்ளோதான் படிக்கிறது, எழுதறது, சொல்லுங்க!''