Published:Updated:

மும்பை; அபார நினைவாற்றலால் விருதுகளைக் குவிக்கும் 20 மாத பெண் குழந்தை!

சமர்த்தா

``என் மகள் பிறந்து 3 மாதங்களானபோது அவளுக்குப் பயிற்சி கொடுக்க ஆரம்பித்துவிட்டேன். 5 மாதத்தில் டேபிள், சேர், காய்கறிகளை அடையாளம் காட்ட ஆரம்பித்தாள். அதோடு பாடல்களையும் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தேன்.’’

Published:Updated:

மும்பை; அபார நினைவாற்றலால் விருதுகளைக் குவிக்கும் 20 மாத பெண் குழந்தை!

``என் மகள் பிறந்து 3 மாதங்களானபோது அவளுக்குப் பயிற்சி கொடுக்க ஆரம்பித்துவிட்டேன். 5 மாதத்தில் டேபிள், சேர், காய்கறிகளை அடையாளம் காட்ட ஆரம்பித்தாள். அதோடு பாடல்களையும் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தேன்.’’

சமர்த்தா

சில குழந்தைகள் சிறு வயதிலேயே அபார திறமை கொண்டவர்களாக இருப்பார்கள். அது போன்ற ஒரு குழந்தைதான், மும்பையைச் சேர்ந்த சமர்த்தா.

மும்பை, மாட்டுங்கா லேபர்லேம்ப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அர்ஜுன்- மகாலெக்ஷ்மி தம்பதி. இவர்களின் மகள் சமர்த்தா, 20 மாதங்களே ஆன குழந்தை. இவர் தனது அபார நினைவாற்றலால் மலர்கள், பழங்கள், நிறங்கள் உள்ளிட்ட பொருள்களின் பெயர்களை மிகச் சரியாகக் கூறி, பல விருதுகளையும், சான்றிதழ்களையும் வாங்கிக் குவித்து வருகிறார். ஒன்றரை வயதிலிருந்து தனது சாதனையைத் தொடர்ந்திருக்கிறார்.

மேலும், பொது அறிவுப் போட்டியில் 70 கேள்விகளுக்கு 5 நிமிடங்களில் பதிலளித்ததன் மூலம், இன்ஃப்ளூயன்சர் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்டில் `யங் மெமரி சாம்பியன்’, யுனிவர்சல் சாதனை புத்தகத்தில் `ஈர்க்கக்கூடிய சாதனை’ மற்றும் இன்ஃப்ளூயன்சர் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட், மெமரி கிட் ரெக்கார்டிலும் பதிவு பெற்றுள்ளார். யுனிவர்சல் ரெக்கார்ட்ஸ் ஃபோரம் உலக சாதனை புத்தகம் - 2023-ல் அவரின் பெயர் மற்றும் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

மும்பை; அபார நினைவாற்றலால் விருதுகளைக் குவிக்கும் 20 மாத பெண் குழந்தை!

தேசிய கீதம், ஏ முதல் இசட் வரையிலான எழுத்துகள், மனித உறுப்புகள் மற்றும் உடல் உள்பாகங்களின் பெயர்கள், 10 பழங்கள், 5 காய்கறிகள், வாகனப் பெயர்கள், 14 விலங்குகளின் பெயர்கள், 2 ஆங்கிலக் கவிதைகள், 6 கட்சிப் பெயர்கள், இந்திய கரன்சி நோட்டுகள் மற்றும் நாணயங்கள் ஆகியவற்றைச் சொல்லி, ஏப்ரல் மாதத்தில் நடந்த போட்டியில் பங்கேற்று சாதனை படைத்தார்.

இதைத் தொடர்ந்து 2023-ம் மே மாதம் நடந்த ஆன்லைன் போட்டியில் தேசியப் பறவையின் பெயர், தேசியப் பூவின் பெயருடன் தேசியப் பழம், நாட்டின் தலைநகர், நாட்டின் பிரதமர், மகாராஷ்டிராவின் அனைத்து மாவட்டங்களின் பெயர்களைக் கூறி சாதனை படைத்துள்ளார்.

சாதனைப் புத்தகத்தினர் குழந்தையின் நினைவாற்றலுக்கு சோதனைகள் நடத்தி விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் சமர்த்தா கூர்மையான அறிவுத் திறமையை வெளிப்படுத்தியதற்காக, `இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ விருது வழங்கி கௌரவித்துள்ளது. ஆங்கிலத்தில் பதிலளிக்கும் குழந்தை சமர்த்தா தாய்மொழியான தமிழ் மற்றும் மராத்தி, இந்தி உள்ளிட்ட மொழிகளின் வார்த்தைகளையும் உச்சரித்துப் பேசத் தொடங்கியுள்ளார்.

மழலையின் அம்மா மகாலட்சுமி, மும்பையில் வசித்தாலும் தமிழ்நாட்டில் உள்ள காரைக்குடி பகுதியைச் சேர்ந்தவர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றார். தற்போது மாணவர்களுக்கு வீட்டில் டியூஷன் நடத்தி வருகிறார்.

சமர்த்தா
சமர்த்தா

இப்போது மகாலட்சுமி தன் மகளோடு தன் தாயார் வீட்டில் வசித்து வருகிறார். தந்தையின் அரவணைப்பு இல்லாத நிலையிலும் சமர்த்தா, தனது 20வது மாதத்தில் 6-க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கிக் குவித்திருக்கிறார். மகாலட்சுமி, கடந்த 10 மாதங்களாக மகள் சமர்த்தாவின் சாதனைகளுக்காக அயராது உழைத்து வருகிறார்.

இது குறித்து மகாலட்சுமி கூறுகையில், ``என் மகள் பிறந்து 3 மாதங்களானபோது அவளுக்குப் பயிற்சி கொடுக்க ஆரம்பித்துவிட்டேன். 5 மாதத்தில் டேபிள், சேர், காய்கறிகளை அடையாளம் காட்ட ஆரம்பித்தாள். அதோடு பாடல்களையும் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தேன். 7 மாதத்தில் பாடல்களை சொல்ல ஆரம்பித்தாள். 12வது மாதத்தில் வார்த்தைகளை கற்றுக்கொடுத்தேன். 14வது மாதத்தில் இந்தியாவின் யங்கெஸ்ட் டேலண்ட் சைல்டு என்ற விருதை பெற்றாள். இது தொடரும்..." என்று மகிழ்ச்சியுடனும் வைராக்கியத்துடனும் தெரிவித்தார்.