மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சுட்டி நாயகன் - தாமஸ் ஆல்வா எடிசன்

ஆயிஷா இரா.நடராசன் பாரதிராஜா

##~##

அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் என்கிற அந்த ஊரின் ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக இருக்கும். அந்தப் பெரிய ரயில் நிலையத்தில் எடி என்ற சிறுவன் வாழ்ந்துவந்தான்.

ரயில் நிலையத்தில் ஒருவர் வாழ முடியுமா என்று நீங்கள் கேட்பது சரிதான். ஆனால், அந்தச் சிறுவன் அங்கேயே எந்த நேரமும் இருந்ததால், அப்படியும் சொல்லலாம். அவன் அம்மா, நான்ஸி மாத்பாக் எலியட் அவனைப் பள்ளியில் இருந்து நிறுத்திவிட்டார். காரணம், பள்ளியில் அவனை ஆசிரியர்கள் சரியாகக் கவனித்துப் பாடம் நடத்தவில்லை என்று அம்மா நினைத்தார். அதனால், வீட்டிலேயே எடிக்கு அவர் பாடம் நடத்தினார்.

பள்ளியில் இருந்து எடி வெளியேறியது ஏன் தெரியுமா? அவன் பாடப் புத்தகங்களைவிட அறிவியல் நூல்களை அதிகம் விரும்பிப் படித்தான். நான்காம் வகுப்புப் படிக்கும்போதே ஆர்.ஜி.பார்க்கர் எழுதிய இயற்கைத் தத்துவத் துறை (ஷிநீலீஷீஷீறீ ஷீயீ ழிணீtuக்ஷீணீறீ றிலீவீறீஷீsஷீஜீலீஹ்) எனும் புத்தகத்தை அவன் வாசிப்பதை ஆசிரியர்கள் ஆட்சேபித்தனர். எனவே, பள்ளியில் இருந்து நின்றுவிட்டான்.

அறிவியல் மீதான அவனது ஆர்வத்தை வீட்டுக் கல்வி அதிகரிக்கவே செய்தது. வறுமைக்கு நடுவே அறிவு பிரகாசித்தது. ரயில் நிலையத்தில், ரயில்பயணிகளுக்கு மிட்டாயும் தினசரி நியூஸ் பேப்பர்களும் விற்றபடி எடி வாழ்ந்தான். அத்துடன், அறிவியல் ஆய்வுகள் பலவற்றில் சுய ஆர்வத்தோடு அவன் ஈடுபட்டான்.

சுட்டி நாயகன் -  தாமஸ் ஆல்வா எடிசன்

ஒரு நாள்,  பத்திரிகை விற்பனையில் தீவிரமாக இருந்தபோது, மூன்று வயது சிறுமி ஒருத்தியின் மேல் ரயில் ஒன்று மோதி, பெரும் விபத்து நடக்க இருந்ததைச் சிறுவன் எடி கண்டான். இமைப்பொழுதில் பாய்ந்துசென்று அந்தச் சிறுமியைக் காப்பாற்றினான். உயிரைத் துச்சமென மதித்து, அவன் செய்த சாகசம் அனைவரையும் ஈர்த்தது.

அந்தச் சிறுமியின் பெயர் ஜிம்மி. அவள் அந்த ரயில் நிலைய மேலாளர் மகள். ரயில் நிலைய மேலாளர் எடிக்கு நன்றி மட்டும் கூறவில்லை. அவனுக்கு ஆய்வுகள் மேற்கொள்ள அந்த ரயில் நிலையத்தில் உள்ள தனது அறையில், ஒதுக்குப்புறமாய்  ஆய்வகம் ஒன்றையும் அமைத்துக் கொடுத்தார்.

கம்பி இல்லாத் தந்தி முறையை (டெலிகிராஃப்) அந்த ரயில் நிலையத்தில், ரயில் நிலையங்களுக்கு இடையே தகவல் பரிமாற்றம் செய்யத் தனது முதல் கண்டுபிடிப்பாக, எடி அறிமுகம் செய்தான். அப்போது அவனுக்கு வயது 14.

சுட்டி நாயகன் -  தாமஸ் ஆல்வா எடிசன்

அது மட்டும் அல்ல, ஓடும் ரயிலை உடனே நிறுத்த முடியாத நிலை அப்போது இருந்தது. அதற்கு ஒரு மாற்றாக, இன்று எந்தப் பெட்டியில் பயணம் செய்பவரானாலும் ரயிலை ஒரு அவசர காலத்தில் நிறுத்த, சங்கிலி போன்ற அமைப்பைக் கண்டுபிடித்தது, எடி என்கிற எடிசன்தான்.

தன் வாழ்நாளில் ஏறத்தாழ 2,000 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி, உலகின் கவனத்தை ஈர்த்து, பிற்காலத்தில் தாமஸ் ஆல்வா எடிசனாய் பிரகாசித்தார்.