மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சுட்டி நாயகன் - சுபாஷ் சந்திரபோஸ்

ஆயிஷா இரா.நடராசன் பாரதிராஜா

##~##

வீடு முழுக்க குழந்தைகள் இருந்தார்கள். அவர்களில் சுபாஷ் மிகவும் வித்தியாசமானவன். அவன் அதிகம் பேசுவதில்லை. 6 வயதிலேயே அவனது செயல்பாடுகள் மற்றவர்களை வியக்க வைத்தன. பிரிட்டிஷ் ஆதிக்க அரசாங்கம் இந்திய தீபகற்பத்தை ஆட்டிப்படைத்த கொடிய நாட்கள் அவை. அந்தச் சின்ன வயதில் அவனது  செயல்கள் பெற்றோருக்கு வியப்பாக இருந்தது.

ஆங்கிலேயரை எதிர்க்க மக்களை ஒன்றுபடுத்தும் ஓர் உத்தியாக, விநாயகர் ஊர்வலங்களை ஏற்பாடுசெய்தார் திலகர். அதுபோன்ற ஒரு விநாயகர் ஊர்வலத்தினை சுபாஷின் தந்தை, தான் வசிக்கும் பகுதியில் ஏற்பாடுசெய்திருந்தார். விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் அந்த நாள் காலையில், எங்கே தேடியும் சுபாஷைக் காணவில்லை.

அவன் எங்கே போனான்? தனது குட்டி சகாக்களுடன் சேர்ந்து அவன் செய்த வேலை என்ன? என்பதை சில மணி நேரத்துக்குப் பிறகு அறிந்த சுபாஷின் தந்தையும் அந்தப் பகுதி பெரியவர்களும் அசந்துபோனார்கள்.

விநாயகர் ஊர்வலத்தில்போது, மக்களை அடித்து உதைக்கத் திட்டமிட்டிருந்த கர்சன் பிரபுவின் காவலர்கள் இருந்த இடத்துக்கு யாருக்கும் தெரியாமல் நுழைந்தனர், சுபாஷ் தலைமையிலான சிறுவர்கள். குதிரைகளை அவிழ்த்துவிட்டதோடு, கையில் கிடைத்த லத்திக்கம்பு, துப்பாக்கி ஆகியவற்றைத் தூக்கி வந்துவிட்டார்கள்.

சுட்டி நாயகன் -  சுபாஷ் சந்திரபோஸ்

ஊர் பெரிய மனிதரான சுபாஷின் அப்பா, ஓரிரு நாட்கள் கழித்து, அவற்றைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

சுபாஷ் ஆரம்பப் பள்ளியில் படிக்கும்போது, அவரது பள்ளிக்கு வெள்ளைக்கார ஆய்வு அதிகாரி ஒருவர் வருகைபுரிந்தார். இந்தியப் பள்ளிகளில் அப்போதெல்லாம் விக்டோரியா மகாராணி படத்தையும் கர்சன் பிரபு படத்தையும் வைத்து, மாணவர்கள் மூலம் ரோஜா மலர்களைப் போடவைப்பார்கள்.

ஒருநாள் பள்ளியில் நடந்த பிரமிக்கவைத்த சம்பவம்... மேடையில் கர்சன் பிரபு படத்துக்குப் பதிலாக, எருமை மாட்டின் படம் இருந்தது. நான்காம் வகுப்பின் வாசலில் திலகரின் படத்தை வண்ணக்கோலமாகப் போட்டிருந்தார்கள். அந்த வகுப்புக்கு வந்த அதிகாரி, கோலத்தைப் பார்த்து பயங்கர கோபமானார். அதன் எதிரொலியாக பள்ளிக்கூடத்துக்கே வேட்டுவைத்திருப்பார். ஆனால், அதைச் செய்தது நான்தான் என்று அந்த வீரச் சிறுவன் சுபாஷ் ஒப்புக்கொண்டு தண்டனை பெற்றான்.

இந்திய விடுதலையின் புரட்சியாளர்களான பகத்சிங், அரவிந்த கோஷ் போன்றவர்கள் நடத்தும் ரகசியக் கூட்டங்களில் தனது மகன் எழுச்சியுடன்  கலந்துகொண்டதை அறிந்தார் சுபாஷின் தந்தை. தனது மகன், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு எதிராக விடுதலை வேள்விக்குத் தயாராவதை உணர்ந்தார். அவனது போக்கில் விட்டுவிட்டார்.

'வீர சுதந்திரம் வாழ்க... இன்குலாப் ஜிந்தாபாத்... புரட்சி ஓங்குக!’ என்று பள்ளிக்கூடச் சிறுவர்கள் சிலர் தங்களது கூட்டத்துக்கு வெளியே முழங்கியதைக் கண்ட அரவிந்த கோஷ§க்கு மிகவும் மகிழ்ச்சி. பகத்சிங், சுகதேவ் போன்ற மாமனிதர்களிடம் எதிர்கால நம்பிக்கையாக விளங்கினான் சுபாஷ்.

பிற்காலத்தில் பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராட இந்திய தேசிய ராணுவத்தை ஏற்படுத்திய அந்தச் சிறுவன்தான், 'நேதாஜி’ என்று அழைக்கப்படும் சுபாஷ் சந்திரபோஸ்.