Published:Updated:

இனிதாகக் கற்போம் தமிழ் !

பொள்ளாச்சி நசன் ஆ.முத்துக்குமார்

##~##

இனிமையான தமிழை கடந்த ஒன்பது இதழ்களில் நீங்கள் கற்றுகொடுத்த எழுத்துகளை உங்களின் பயனாளியை மீள்பார்வை செய்துகொள்ளச் செய்யுங்கள்.

1. 'அ’ முதல் 'ஒள’ வரையிலான உயிர் எழுத்துகள் = 12.

2. 'க்’ முதல் 'ன்’ வரையிலான மெய்யெழுத்துகள் = 18  (எழுத்தின் தலையில் புள்ளி இருக்கும்).

3. 'க’ முதல் 'ன’ வரையிலான 'அ’ வரிசை உயிர்மெய் எழுத்துகள் = 18 (எழுத்தின் தலையில் புள்ளி இருக்காது).

4. 'கா’ முதல் 'னா’ வரையிலான 'ஆ’ வரிசை உயிர்மெய் எழுத்துகள் = 18 (எழுத்தின் வலது பக்கத்தில் துணைக்கால் குறியீடு இருக்கும்).

5. 'கி’ முதல் 'னி’ வரையிலான 'இ’ வரிசை உயிர்மெய் எழுத்துகள் = 18 (எழுத்தின் மேல் கொம்பு குறியீடு இருக்கும்).

6. 'கீ’ முதல் 'னீ’ வரையிலான 'ஈ’ வரிசை உயிர்மெய் எழுத்துகள் = 18 (எழுத்தின் மேல் கொம்பு, சுழியோடு இருக்கும்).

இனிதாகக் கற்போம் தமிழ் !

7. 'கெ’ முதல் 'னெ’ வரையிலான 'எ’ வரிசை உயிர்மெய் எழுத்துகள் = 18 (எழுத்தின் இடது பக்கத்தில் ஒற்றைக் கொம்பு இருக்கும்).

8. 'கே’ முதல் 'னே’ வரையிலான 'ஏ’ வரிசை உயிர்மெய் எழுத்துகள் = 18 (எழுத்தின் இடது பக்கத்தில் இரட்டைக் கொம்பு இருக்கும்).

ஆக, இதுவரை 138 எழுத்துகளை ஒலிக்கவும், அடையாளம் கண்டு செய்தித்தாளில் வட்டமிடவும், இரண்டு இரண்டு எழுத்துகளாக இணைத்துப் படிக்கவும் பயிற்சி கொடுத்தாயிற்று. நீங்கள் கற்றுத்தரும் பயனருக்கு ஒன்றிரண்டு எழுத்துகளில் குழப்பம் இருந்தாலும் பரவாயில்லை, தொடர்ந்து செய்தித்தாளில் மேலுள்ள எழுத்துகளை அடையாளம் கண்டு ஒலிக்கவும், இரண்டு இரண்டு எழுத்துகளை இணைத்துப் படிக்கவும் பயிற்சி எடுக்கச் சொல்லுங்கள். இது, அவரின் படித்தல் திறனுக்கு அடித்தளம் அமைக்கும். இனி, உயிரெழுத்தான 'ஐ’ வரிசையில் உருவாகும் உயிர்மெய் எழுத்துகளை இந்த இதழில் பார்க்கலாம்.

'ஐ’ நெட்டெழுத்தாக ஒலிப்பது. இரண்டு மாத்திரை நேரம் ஒலிப்பது. (கண் சிமிட்டும் நேரம் ஒரு மாத்திரை)

இனிதாகக் கற்போம் தமிழ் !

ik + ai = kai ( க் ஐ = கை)

'க்’ முதல் 'ன்’ வரையிலான மெய்யெழுத்துகளுடன் 'ஐ’ உயிரெழுத்து இணையும்போது, அருகிலுள்ள 18 உயிர்மெய் எழுத்துகள் உருவாகுகின்றன.

அட்டை எண்: 31-ல் உள்ள 'ஐ’ வரிசை உயிர்மெய் எழுத்துகளை கவனியுங்கள். சிவப்பு வண்ணத்தில் உள்ள குறியீட்டைப் பாருங்கள். இரண்டு சுழியும் ஒரு கொம்பும் இருக்கும். எனவே, இந்தக் குறியீட்டை, 'இரட்டைச்சுழி கொம்பு’ என்று அழைப்போம்.

'ஐ’ வரிசை உயிர்மெய் எழுத்துகள் அதிகமாகப் பயன்படுத்தப்படுபவை. எனவே, செய்தித்தாளில் அதிகமாக இந்த எழுத்துகளைக் கண்டுபிடித்து, வட்டமிட்டு,  ஒலித்துப் பழகச் செய்யுங்கள்.

கீழுள்ள 'ஐ’ வரிசை உயிர்மெய் எழுத்துகளை உங்கள் குறிப்பேட்டில் எழுதிக்கொண்டே ஒலித்துப் பழகச் செய்யுங்கள்.

இனிதாகக் கற்போம் தமிழ் !

கை சை டை தை பை றை

யை ரை லை வை ழை ளை

ஙை ஞை ணை நை மை னை

31கி அட்டையில் எளிமையான சொற்கள் தரப்பட்டுள்ளன.

வழக்கமாகப் படிப்பது போலவே இந்தச் சொற்களை உங்களுடைய உதவி இல்லாமல், படிக்க முயற்சி செய்ய சொல்லுங்கள். கடினமாக இருந்தால், இரண்டு இரண்டு எழுத்துகளாகப் பிரித்துக்கொடுக்கவும். ஒவ்வோர் எழுத்தாக ஒலித்து, பிறகு இரண்டு எழுத்துகளையும் இணைத்து ஒலித்து பிறகு மொத்தமாக இணைத்து ஒலிக்கக் கற்றுக்கொடுங்கள்.

தமிழ் எழுத்துகள் இனிதாக வசப்படும்.

 - தொடர்ந்து கற்போம்.