Published:Updated:

காஷ்மீரில் 41 சதவிகித குழந்தைகளுக்கு கடும் மன அழுத்தம்... எச்சரிக்கும் சர்வே! #NoMoreStress

Kashmir ( pixabay.com )

குழந்தைகளின் அறிவு மற்றும் செயல்திறனை வளர்க்க பெற்றோர் வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும். புதுப்புது செயல்களைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும்போது அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதுடன் பயம், பதற்றமான சூழலை அவர்கள் எளிதாகக் கடந்து செல்ல முடியும்.

காஷ்மீரில் 41 சதவிகித குழந்தைகளுக்கு கடும் மன அழுத்தம்... எச்சரிக்கும் சர்வே! #NoMoreStress

குழந்தைகளின் அறிவு மற்றும் செயல்திறனை வளர்க்க பெற்றோர் வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும். புதுப்புது செயல்களைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும்போது அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதுடன் பயம், பதற்றமான சூழலை அவர்கள் எளிதாகக் கடந்து செல்ல முடியும்.

Published:Updated:
Kashmir ( pixabay.com )

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்தது முதல் காஷ்மீரில் போராட்டம், கடையடைப்பு என எப்போதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. போராட்டங்கள் காரணமாக ஸ்ரீநகரில் மூடப்பட்ட தொடக்கப்பள்ளிகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. ஆனால், காஷ்மீர்வாசிகள் ஒவ்வொருவருக்கும் மனஅழுத்தம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. அதிலும் குறிப்பாகக் குழந்தைகள் மத்தியில் ஏற்படும் மனஅழுத்தம், அவர்களது வாழ்க்கைமுறையையே மாற்றியிருக்கிறது.

Kashmir
Kashmir

காஷ்மீர் மென்டல் ஹெல்த் சர்வேயின்படி (Kashmir Mental Health Survey) காஷ்மீரில் 41 சதவிகிதம்பேர் மன அழுத்தத்தில் இருக்கின்றனர். அதேபோல் 26 சதவிகிதம்பேர் கவலையில் இருக்கின்றனர். அதில் அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தப் பாதிப்பால் (Post-traumatic stress disorder) 19 சதவிகிதம்பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பதற்றமான சூழலில் இருக்கும் காஷ்மீர் குழந்தைகளின் மன அழுத்தத்தையும், இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று குழந்தைகள் மனநல மருத்துவர் கண்ணனிடம் கேட்டோம்.

Infographics
Infographics
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"போராட்டம், சண்டை என எப்போதும் பதற்றமான சூழல் நிலவுவதால், அங்குள்ள அனைவரின் மனநிலையும் பாதிக்கப்பட்டிருக்கும். இதில் குழந்தைகளைப் பொறுத்தவரை, தங்களின் பெற்றோர் தங்களைப் பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கையில் இருப்பார்கள். ஆனால், பெற்றோருக்கே பாதுகாப்பில்லை; கூடவே அவர்கள் மிகுந்த மன அழுத்தத்துடன் இருப்பதால் அது குழந்தைகளையும் பாதிக்கும். இதனால் குழந்தைகளின் செயல்திறன், அமைதி, நடவடிக்கை, படிப்பு போன்றவை அதிகமாகப் பாதிக்கும்.

Kashmir
Kashmir
pixabay.com

அவர்களது திறமைகள் முழுவதுமாக வெளிவராமலேயே போய்விடும். முக்கியமாக புதிதாக ஒரு விஷயத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் குறைந்துவிடும். வன்மம், காழ்ப்புணர்ச்சி, கோபம் போன்றவை சிறுவயதிலேயே அவர்களிடம் குடிகொண்டுவிடும். இது அவர்களுக்கு மனரீதியாக மட்டுமல்லாமல், உடல் ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும். இதுபோன்ற சூழலில் வளரும் குழந்தைகளின் அடுத்த தலைமுறையும் மரபணுக்கள் மூலம் பாதிக்கப்படுவர்.

இயற்கையோடு இணைந்து வாழ்ந்துவரும் மனிதர்களின் மனதுக்கும், சூழ்நிலைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. வெளிப்புற சூழல் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும்போது அங்கே வளரும் குழந்தைகளின் மன வளர்ச்சியும், உடல் வளர்ச்சியும் சிறப்பாக அமையும்.

மனநல மருத்துவர் கண்ணன்
மனநல மருத்துவர் கண்ணன்

பொதுவாக குழந்தைகளுக்கு இவை மிகவும் அத்தியாவசியமான ஒன்று. மாறாக, வெளிப்புறச் சூழல் அவ்வாறு இல்லையென்றால், குடும்பச் சூழலாவது குழந்தைகளுக்கு மகிழ்ச்சியாகவும், பிடித்த வகையிலும் இருக்க வேண்டும். இதற்குப் பெற்றோர்தான் முழு பொறுப்பேற்க வேண்டும். வீட்டிலுள்ள கஷ்டமான சூழலை ஏற்றுக்கொள்ளும் மனம் பெரியவர்களுக்கு இருந்தால்தான், குழந்தைகள் நம்பிக்கையுடன் வளருவார்கள். ஆய்வின்படி பார்த்தால், பெற்றோருக்கு மனதளவில் பாதிப்பு இருந்தால், அது குழந்தைகளையும் பாதிக்கும். எனவே, பெற்றோர் முதலில் தங்களை சரி செய்துகொள்ள வேண்டும்.

குழந்தைகளின் அறிவு மற்றும் செயல்திறனை வளர்க்க பெற்றோர் வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும். புதுப்புது செயல்களைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும்போது அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதுடன் பயம், பதற்றமான சூழலை அவர்கள் எளிதாகக் கடந்து செல்ல முடியும். அதேபோல் பள்ளிகளும் பாதுகாப்பான உணர்வைக் கொடுக்க வேண்டும். நார்ச் சத்து, நீர்ச் சத்து, தானிய வகைகள் என நல்ல சத்தான உணவுகளையும் கொடுக்க வேண்டும். இதனால் உடலும், மனமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

kashmir
kashmir
pixabay.com

மனதளவில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடற்பயிற்சி அவசியம். ஆனால், குழந்தைகளுக்கு உடற்பயிற்சி தேவையில்லை. அவர்களுக்குத் தேவை விளையாட்டுதான். புரிந்துகொள்ளும் மனநிலையில் உள்ள குழந்தைகளுக்கு ஆலோசனைகள் மூலம் மன அமைதியைக் கொடுக்கலாம். அதற்கு முன், தன்னைச் சுற்றியுள்ள சூழலும், சமூகப் பாதுகாப்பும் அமைதியைக் கொடுக்கிறது என்ற நம்பிக்கையை வளர்க்க வேண்டும்.

பதற்றமான சூழலில் வாழ்ந்துவரும் குழந்தைகளின் படிப்பு, எதிர்கால வாழ்க்கை, பிறருடன் பழகும் தன்மை அனைத்தும் பாதிப்படைகிறது. இந்தப் பாதிப்பும் வெகுவாக குறைய, குழந்தைகளிடம் மனம் விட்டுப் பேச வேண்டும்.

child
child

இது போன்ற சூழலில் குழந்தைக்கு என்ன தேவை என்பதைப் பெற்றோர் அறிந்துகொண்டு அதற்கேற்றாற்போல நடந்து கொள்ள வேண்டும். இதனால் அவர்களின் எதிர்காலம் குறித்து அச்சப்படாமல் இருக்கலாம்'' என்கிறார் கண்ணன்.