Published:Updated:

5 வயதுக் குழந்தை... இதய ஆபரேஷன்... காவல்துறையின் உதவி!

கவிஷ்கா குடும்பம்

கான்ஸ்டபிள் செந்தில்குமார், குழந்தை கவிஷ்காவின் நிலைமையைத் தன் ஸ்டேஷனின் இன்ஸ்பெக்டர் தங்கராஜிடம் சொல்ல, அவர் குழந்தையின் அறுவைசிகிச்சைக்காகத் தனக்குத் தெரிந்தவர்களிடம் பண உதவி பெற்றுத் தந்திருக்கிறார்.

5 வயதுக் குழந்தை... இதய ஆபரேஷன்... காவல்துறையின் உதவி!

கான்ஸ்டபிள் செந்தில்குமார், குழந்தை கவிஷ்காவின் நிலைமையைத் தன் ஸ்டேஷனின் இன்ஸ்பெக்டர் தங்கராஜிடம் சொல்ல, அவர் குழந்தையின் அறுவைசிகிச்சைக்காகத் தனக்குத் தெரிந்தவர்களிடம் பண உதவி பெற்றுத் தந்திருக்கிறார்.

Published:Updated:
கவிஷ்கா குடும்பம்

இதயத்தில் பிரச்னை கொண்ட 5 வயதுக் குழந்தை கவிஷ்காவின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார்கள் காவல்துறையினர். கவிஷ்காவின் அப்பா கார்த்திக், எலெக்ட்ரிக்கல் ஷாப் ஒன்றில் சேல்ஸ்மேன். அம்மா பிரியங்கா இல்லத்தரசி. தற்போது கூடுவாஞ்சேரியில் வசித்து வருகிறது கவிஷ்காவின் குடும்பம்.

காவல்துறை
காவல்துறை
மாதிரி புகைப்படம்

``பாப்பா பிறந்தப்போவே அதுக்கு இதயத்துல பிரச்னை இருந்திருக்கு. ஆனா, அது எங்களுக்கு மூணாவது மாசம்தான் தெரிஞ்சது. பாப்பா அரசு மருத்துவமனையில பிறந்தா. அங்கிருந்த டாக்டருங்க, ஏழாவது மாசமே பாப்பாவுக்கு ஹார்ட்ல ஒரு ஆபரேஷன் செய்யணும்னு சொல்லி, தனியார் மருத்துவமனைக்கு லெட்டர் கொடுத்துவிட்டாங்க. பணியாளர் மாநிலக் காப்பீட்டை (இ.எஸ்.ஐ) வெச்சு அந்த ஹார்ட் ஆபரேஷனை செஞ்சோம். 'இன்னும் ரெண்டு மேஜர் ஆபரேஷன்கள் செய்யணும். அதைக் குழந்தையோட 5 வது வயசுல செஞ்சுக்கலாம்'னு சொல்லியிருந்தாங்க டாக்டர். அதுக்கு 5 லட்ச ரூபாய் செலவாகும்னு சொல்லிட்டாங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முதல் ஆபரேஷன் மாதிரியே இ.எஸ்.ஐ காப்பீட்டில் இந்த ஆபரேஷனையும் செஞ்சுடலாம்னு நினைச்சோம். ஆனா, நாங்க போன ஹாஸ்பிட்டல்ல அதுக்கான வாய்ப்பு இல்ல. வேற வழியில்லாம லோன் போட்டோம். அதுவும் கிடைக்கல. இதுக்கு நடுவுல அங்க இங்க கடனை வாங்கி கவிஷ்காவுக்கு ஆஞ்சியோ பண்ணிட்டோம். ஆஞ்சியோ செஞ்சு மூணு மாசத்துக்குள்ள ஆபரேஷன் செஞ்சே ஆகணும்னு டாக்டர் சொல்லிட்டாங்க. என்ன செய்யறதுன்னே தெரியாம அழுதுக்கிட்டிருந்தப்போதான் செந்தில்குமார் சார் உதவிக்கு வந்தாரு’’ என்கிறார் கவிஷ்காவின் அம்மா பிரியங்கா. செந்தில்குமார், நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் ரைட்டர் கம் ஹெட் கான்ஸ்டபிளாக பணியாற்றுகிறார். இவர், குழந்தை கவிஷ்காவின் எதிர் வீட்டில் வசிக்கிறார்.

``எங்க ஸ்டேஷன்ல இருக்கிற போலீஸ்காரங்க எல்லோரும் சேர்ந்து எங்களால முடிஞ்ச உதவியை அந்தக் குழந்தையின் குடும்பத்துக்கு செஞ்சோம். அப்புறம்...''
இன்ஸ்பெக்டர் தங்கராஜ்

கவிஷ்காவின் அம்மா தொடர்ந்து பேசினார். ``செந்தில் சார் குடும்பம் கடந்த ரெண்டு வருஷமா எங்க வீட்டுக்குப் பக்கத்துலதான் குடியிருக்காங்க. நல்லா பேசுவாங்க. அவர் மனைவிகிட்ட எங்க குழந்தையோட நிலைமையைப் பத்தி சொல்லி அழுதுட்டு இருந்ததைக் கேட்டவர், 30,000 ரூபாயை ஏற்பாடு செய்து கொடுத்தார்’’ என்றவர் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்குகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கான்ஸ்டபிள் செந்தில்குமார், குழந்தை கவிஷ்காவின் நிலைமையைத் தன் ஸ்டேஷனின் இன்ஸ்பெக்டர் தங்கராஜிடம் சொல்ல, அவர் குழந்தையின் அறுவை சிகிச்சைக்காகத் தனக்குத் தெரிந்தவர்களிடம் பண உதவி பெற்றுத் தந்திருக்கிறார். தங்கராஜிடம் பேசினோம்.

``அந்தக் குழந்தைக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்ய 50,000 தேவைப்பட்டுச்சு. அதுல 30,000 ரூபாயை எங்க ரைட்டர் செந்தில்குமார் கொடுத்து உதவி பண்ணார். அதுக்கு மேல அவரால முடியலைங்கிறதால எங்க ஸ்டேஷன்ல இருக்கிற போலீஸ்காரங்க எல்லோரும் சேர்ந்து 20,000 புரட்டிக் கொடுத்தோம். அதுக்கப்புறம் குழந்தை கவிஷ்காவுக்காகத் தனியார் மருத்துவமனையில பேசினப்போ, 'சிம்' (chim) அப்படிங்கிற டிரஸ்ட் பத்தி சொன்னாங்க. அங்கே அப்ரோச் பண்ணதுல அவங்க குழந்தையோட மருத்துவ செலவுல பாதியை ஏத்துக்கிட்டாங்க. கவிஷ்கா ஒரு மாசம் ஹாஸ்பிடல்ல இருந்ததுக்கான பெட் செலவு, உணவு செலவை மருத்துவமனை நிர்வாகம் ஏத்துக்கிச்சு. முதல்வர் காப்பீட்டுத் திட்டத்துல ஒரு லட்சம் கிடைச்சது. அப்படியும் 50,000 குறைஞ்சது. காவல்துறையினர் நாங்க எல்லாம் மறுபடியும் ஆளுக்கு ஒரு தொகை போட்டு 50,000 கொடுத்தோம். ஸோ, நாங்க பல பேர் சேர்ந்துதான் அந்தச் சின்ன உயிரைக் காப்பாத்தினோம். மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்குங்க’’ என்கிறார் நெகிழ்ச்சியுடன்.

கவிஷ்கா குடும்பம்
கவிஷ்கா குடும்பம்

குழந்தை கவிஷ்காவுக்கு அறுவைசிகிச்சை நல்லபடியாக முடிந்திருக்கிறது. ``பாப்பா இப்போ நல்லாயிருக்காங்க. நானும் மறுபடியும் வேலைக்குப் போக ஆரம்பிச்சிருக்கேன். என் குழந்தைக்கு உதவி செஞ்ச அத்தனை பேருக்கும் நன்றிங்க’’ என்று கைகூப்புகிறார் கவிஷ்காவின் அப்பா கார்த்திக்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism