Published:Updated:

"தட்டம்மை தடுப்பூசி... வதந்திகளை நம்பாமல் குழந்தைகளுக்குத் தவறாமல் போடுங்கள்!"- மருத்துவர் அறிவுறுத்தல்

தடுப்பூசி

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் தட்டம்மை நோய் பற்றி கவனம் செலுத்தப்படுகிறது என்றாலும், உலகின் மிக வறிய நாடுகளில்தான் தட்டம்மை இறப்புகள் அதிகம் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன என்பது வருந்தத்தக்கது.

"தட்டம்மை தடுப்பூசி... வதந்திகளை நம்பாமல் குழந்தைகளுக்குத் தவறாமல் போடுங்கள்!"- மருத்துவர் அறிவுறுத்தல்

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் தட்டம்மை நோய் பற்றி கவனம் செலுத்தப்படுகிறது என்றாலும், உலகின் மிக வறிய நாடுகளில்தான் தட்டம்மை இறப்புகள் அதிகம் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன என்பது வருந்தத்தக்கது.

Published:Updated:
தடுப்பூசி

அடுத்த ஆறு மாதங்களில், ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளில், 4 கோடியே 50 லட்சம் குழந்தைகளுக்கு `மீசல்ஸ்' எனப்படும் தட்டம்மை நோய்க்குத் தடுப்பூசி போட உள்ளதாக `கேவி குழு(GAVI - Global Alliance for Vaccines and Immunization) தெரிவித்துள்ளது.

தடுப்பூசி
தடுப்பூசி
Image Source

இக்குழு, உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் யூனிசெஃப் (UNICEF) உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பூசியை வழங்க முடிவெடுத்துள்ளது. தட்டம்மை நோய் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளையே அதிகம் தாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சமீப ஆண்டுகளில், இந்தத் தட்டம்மை நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2018-ம் ஆண்டில் உலக அளவில் கிட்டத்தட்ட 3,60,000 பேரும், 2019-ம் ஆண்டில் கிட்டத்தட்ட 4,30,000 பேரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.

மீசல்ஸ்
மீசல்ஸ்

"ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் தட்டம்மை நோய் பற்றிக் கவனம் செலுத்தப்படுகிறது என்றாலும், உலகின் மிக வறிய நாடுகளில்தான் தட்டம்மை இறப்புகள் அதிகம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பது வருந்தத்தக்கது. எனவே, தடுப்பூசி விழிப்புணர்வுப் பிரசாரம் பங்களாதேஷ், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, எத்தியோப்பியா, கென்யா, நேபாளம், சோமாலியா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் நடைபெறும்" என்கிறது GAVI குழு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வளரும் நாடுகளின் பட்டியலில் உள்ள இந்தியாவில், `மீசல்ஸ்' பற்றிய விழிப்புணர்வு போதுமான அளவுக்கு இருந்தாலும், இந்தியாவின் சில பகுதிகளில் இதனால் குழந்தைகள் பாதிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. எனவே, இந்தத் தட்டம்மை நோய் பற்றியும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் இதற்கு எதிராகப் போடப்படும் தடுப்பூசியின் பயன்கள் பற்றியும் குழந்தைகள் நல மருத்துவர் கண்ணனிடம் பேசினோம்.

குழந்தைகள் நல மருத்துவர் கண்ணன்
குழந்தைகள் நல மருத்துவர் கண்ணன்

"மீசல்ஸ் எனப்படும் இந்த அம்மை நோய், ஒரு வைரஸ் தொற்று ஆகும். இது, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை எளிதில் தாக்கும் என்பதால், வயதானவர்களைவிட ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளை எளிதில் தொற்றிக்கொள்கிறது.

எனவேதான், குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பூசியைக் கட்டாயம் போட்டுவிட வேண்டும். குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் இந்தத் தடுப்பூசி போடப்படுகிறது. ஏனெனில், பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதம் வரை தன் தாயிடமிருந்து தொப்புள்கொடி வழியே பெறப்பட்ட ஆன்டிபயாட்டிக்குகள் அதன் உடலில் இருக்கும். எனவே, குழந்தை பிறந்த ஆறு மாதங்களுக்குப் பிறகே இந்தத் தடுப்பூசி போடப்படுகிறது.

வைரஸ்
வைரஸ்

இந்தத் தடுப்பூசி போடப்படாதபட்சத்தில், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகள் தட்டம்மை நோய்க்கு ஆளாக நேர்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குக் காய்ச்சல், வறட்டு இருமல், தோலில் தடிப்புகள், தோல் சிவந்துபோவது ஆகியவை ஏற்படும்.

மேலும், வாந்தி, டயரியா, கண் சம்பந்தமான பிரச்னைகள் வரலாம். இந்நோய் தீவிரமடையும்போது மரணமேகூட நேரலாம். எனவே, இவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள, `மீசல்ஸ்' தடுப்பூசியைக் குழந்தைகளுக்குத் தவறாமல் போடவேண்டியது அவசியம்.

தடுப்பூசி
தடுப்பூசி

இதுபோன்ற தடுப்பூசி போடப்படும் காலங்களில், 'அந்தத் தடுப்பூசி குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல' போன்ற பல்வேறு வதந்திகள் பரவுவது இயல்புதான். தடுப்பூசிகள் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவே போடப்படுகின்றன.

இவற்றால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது. எனவே, பெற்றோர்கள் எந்த வதந்தியையும் நம்பாமல், சரியான காலங்களில் தங்கள் குழந்தைகளுக்குத் தவறாமல் தடுப்பூசி போட வேண்டும்" என்றார் மருத்துவர் கண்ணன்.

தடுப்பூசி
தடுப்பூசி

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும் அம்மை, காசநோய் போன்ற நோய்கள் வராமல் தடுப்பதிலும் தடுப்பூசிகள் முக்கியப் பங்காற்றுகின்றன. எனவே, சரியான பருவங்களில் குழந்தைகளுக்குத் தகுந்த தடுப்பூசிகள் போட வேண்டும் என்பதைப் பெற்றோர்கள் கவனத்தில்கொள்ள வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism