Published:Updated:

சினிமா, பார்க், பீச் வேண்டாம்... குழந்தைகளுடன் இப்படியெல்லாம் நேரம் செலவழிக்கலாம்!

குழந்தை ( pixabay )

கொரோனா முடக்கிப்போட்டிருக்கும் விஷயங்கள் நிறைய என்றாலும், நமக்கும் நம் குழந்தைக்கும் ஒரு நல்ல வாய்ப்பும் அளித்துள்ளது.

சினிமா, பார்க், பீச் வேண்டாம்... குழந்தைகளுடன் இப்படியெல்லாம் நேரம் செலவழிக்கலாம்!

கொரோனா முடக்கிப்போட்டிருக்கும் விஷயங்கள் நிறைய என்றாலும், நமக்கும் நம் குழந்தைக்கும் ஒரு நல்ல வாய்ப்பும் அளித்துள்ளது.

Published:Updated:
குழந்தை ( pixabay )

பள்ளிக்கூடம் விடுமுறை விட்டாச்சு. பெற்றோரில் பலருக்கும் வொர்க் ஃப்ரம் ஹோம் சொல்லியாச்சு. வழக்கமாக இப்படிக் கிடைக்கிற வாய்ப்பில் சினிமா, சுற்றுலா, பொழுதுபோக்கு மையங்கள் எனக் கிளம்பிவிடுவோம். ஆனால், அவையெல்லாம் கூடாது என்பதற்குத்தான் இந்த `கொரோனா விடுமுறை.' பிள்ளைகளையும் வெளியே விடக் கூடாது. வீட்டுக்குள் சந்தோஷமாகவும் இருக்கணும். அப்படின்னா, அவர்களின் பொழுதுபோக்குக்கு என்னதான் செய்யுறது?

இந்தச் சூழ்நிலையில், கொரோனா முடக்கிப்போட்டிருக்கும் விஷயங்கள் நிறைய என்றாலும், நமக்கும் நம் குழந்தைக்கும் ஒரு நல்ல வாய்ப்பும் அளித்துள்ளது. காலமாற்றத்தாலும் தொழிநுட்ப கருவிகளின் ஆதிக்கத்தாலும் நம்மில் பலரும் மறந்துவிட்ட விஷயங்களை நினைவுபடுத்தி நடைமுறைப்படுத்திப் பார்க்கும் வாய்ப்பு. செய்து பார்க்கலாமா?

குழந்தை
குழந்தை
pixabay

நம்மில் எத்தனை பேர் இப்போது மொட்டைமாடியில் அமர்ந்து நிலாச்சோறு சாப்பிடுகிறோம். படுத்துக்கொண்டு கதைகள் பேசுகிறோம். நம் சிறு வயதில் இது எவ்வளவு அழகான பொழுதுபோக்காக இருந்தது. இப்போது, அதைத் தூசுதட்டி எடுப்போம்.

மாலை நேரம் வீட்டிலேயே சுடச்சுட பஜ்ஜியையோ, சுண்டலைலோ செய்துகொண்டு மொட்டைமாடியில் இடம்பிடியுங்கள். பாய் அல்லது விரிப்பு போட்டு அமர்ந்து சாப்பிட்டவாறு கதைகள் பேசுங்கள். இந்த வெயில் காலத்தில் மாலை நேர இயற்கைக் காற்றால் உடலுக்கு இதமும் கிடைக்கும். மனம் திறந்து பேசி இதயமும் மகிழும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உங்களின் சிறு வயது விளையாட்டுகள், சாப்பிட்ட தின்பண்டங்கள், அவற்றின் விலைகள், பொழுதுபோக்குகள், அப்போதும் இப்போதும் ஊருக்குள் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்று பலவற்றைக் குழந்தைகளிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். அவற்றில் பல உங்கள் குழந்தைகள் கேள்விப்படாததாக இருக்கும். ரொம்பவும் சீரியஸாகப் பேசி, கொட்டாவி வரவைத்துவிடக் கூடாது என்பதுதான் சவாலே. அப்புறம், இரண்டாம் நாள் மொட்டைமாடி பக்கமே வரமாட்டாங்க. அதனால், கலகலப்புடன் சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துக்கங்க.

உங்க குழந்தைகளுக்கு எதில் அதிகம் ஆர்வமோ, அது சம்பந்தமாக உங்களின் சின்ன வயது அனுபவங்கள், தகவல்கள் இருந்தால் நிச்சயம் ஆர்வமாகக் கேட்பார்கள். உதாரணமாக, உங்க குழந்தைக்குச் சினிமா பிடிக்கும் என்றால், உங்களுக்கு சின்ன வயசில் பிடிச்ச சினிமா, பாட்டு புத்தகம், ரசிகர் கடிதம் அனுப்பி கையெழுத்துடன் வந்த போட்டோ, அப்போதைய தியேட்டர் இருந்த விதம், டிக்கெட் வாங்க நடந்த அடிதடி, போடுகிற விளம்பரம், கொசுக்கடி, மூட்டைப்பூச்சி எனப் பகிர்ந்துக்க நிறைய இருக்கும்.

kids
kids
pixabay

பல்லாங்குழி, பம்பரம், நொண்டியாட்டம், கண்ணாமூச்சு என மறந்துபோன பல விளையாட்டுகளை விளையாடிப் பார்க்கவும், நீங்களும் குழந்தைகளாக மாறவும் இதுதான் நேரம். பக்கத்து மாடியிலிருந்து பார்க்கறாங்களே என்று கூச்சப்படாதீங்க. அவங்களையும் விளையாட வெச்சுடுங்க. உங்க பிள்ளைகளுக்குப் பிடிச்ச இன்றைய விளையாட்டுகளையும் சேர்த்துக்கங்க. எல்லா விளையாட்டுகளுமே வீட்டுக்குள்ளேதான். நினைவில் இருக்கட்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சமூக வலைதளக் கடலில் தொபுகடீர்னு குதிச்சதுக்கு அப்புறம், ஒண்ணுவிட்ட சித்தப்பா, ரெண்டுவிட்ட பெரியப்பா என்று எத்தனை உறவுகளை மறந்தேபோயிருப்போம். ஏதாவது உறவினர் விழாவில் பார்த்து புன்னகைத்து அவசர அவசரமாகப் பேசுவதோடு சரி. அவங்க போன் நம்பர்களை வாங்கியிருப்போம். பல வருஷமா அது உங்க செல்போனில் ஆழத்தில் இருக்கா? சர்ச் கொக்கி போட்டு வெளியே எடுங்க. அவங்களோடு பேசுங்க. உங்க பிள்ளைகளுக்கும் அறிமுகப்படுத்தி அவங்க வீட்டு பிள்ளைகளுடன் பேசவிடுங்க.

உங்க பிள்ளைகளுடன் சேர்ந்து சின்னச் சின்ன கிராஃப்டுகள், ஓவியங்கள் உருவாக்கி வீட்டுச்சுவர், அலமாரி என அலங்கரிக்க அற்புதமான வாய்ப்பு. குழந்தைகளின் திறமைக்குத் தீனி போட்டதாகவும் இருக்கும். வீடும் அழகாகும். பொழுதும் உற்சாகமாகப் பறக்கும்.

kids
kids
pixabay

செல்ஃபிகள் எடுக்கிறதே போட்டோ என இப்போது ஆகிப்போச்சு. ஆனால், கொஞ்சம் வருடங்களுக்கு முன்னாடி வரை சுற்றுலா, கல்யாணம் என எல்லாத்தையும் பிலிம் கேமராவில் எடுத்து, ஆல்பங்களாக வெச்சிருப்போம். அவற்றையெல்லாம் எடுத்து புரட்டுங்க. உங்க சின்ன வயசு, வாலிப வயசு போட்டோக்களை குழந்தைகளும் பார்க்கட்டும். அப்போதைய மலரும் நினைவுகளைச் சொல்லுங்க. அந்தப் புகைப்படங்களை இப்போதைய போனில் போட்டோ எடுத்துக்கிட்டா போதும். அதைவெச்சு பலவித செயலிகளைப் பயன்படுத்தி, உங்க குழந்தைகள் சூப்பரா டைம் பாஸ் பண்ணலாம்.

கொரோனா பற்றிய தேவையற்ற பயங்களை உதறிட்டு, அதுக்கு ஒரு நன்றி சொல்லிவிட்டு, வீட்டுக்குள்ளேயே பொழுதுபோக்குகளைக் கொண்டுவந்து அசத்துங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism