தினமும் காலையில் டூத் பேஸ்ட்டையும் பிரஷ்ஷையும் கொடுத்து பிள்ளைகளைப் பல் துலக்க வைப்பதற்குள் பெற்றோர்களுக்குப் போதும் போதும் என்றாகிவிடும்.

அதென்னவோ தெரியவில்லை...

நம் குழந்தைகளுக்குக் காலையில் எழுந்தவுடன் பல் துலக்க வேண்டும் என்பது சோம்பல் நிறைந்த ஒன்றாகவே இருக்கிறது. பேஸ்ட்டையும் பிரஷ்ஷையும் அவர்கள் கையில் கொடுத்தால்... பல் துலக்காமல் வாயில் டூத் பிரஷ்ஷை வைத்துக்கொண்டு தூங்கி வழிவார்கள். டூத் பேஸ்ட்டை ருசிபார்த்துக் கொண்டிருப்பார்கள். பெரும்பாலும் இதை நாம் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், ஆரம்பத்திலேயே குழந்தைகளின் பல் சுத்தத்தைக் கவனிக்கத் தவறினால் அது எதிர்காலத்தில் பற்சொத்தை, ஈறுகளில் பிரச்னை போன்ற ஆரோக்கியக் குறைபாடுகளை ஏற்படுத்தலாம் என்கிறார் பல் மருத்துவர் செந்தில்குமரன். பல் துலக்க வைக்கும்போதும், குழந்தைகளின் பல் சுத்தத்திலும் என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும்... டாக்டர் தரும் டிப்ஸ் இதோ...

குழந்தை பிறந்ததிலிருந்து அதற்குப் பற்கள் முளைக்கும்வரையில் அதன் பல் ஈறுகளை, உப்புத் தண்ணீரில் ஊறவைத்த தூய்மையான சிறிய துணியைக்கொண்டு தினமும் துடைத்து சுத்தம் செய்ய வேண்டும்.

குழந்தைகளுக்குப் பற்கள் முளைக்கத் தொடங்கிய சில நாள்களில் இருந்தே அவர்களின் பல் சுத்தத்தில் பெற்றோர் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆரம்பத்தில் எல்லாக் குழந்தைகளுமே பல் துலக்க அடம்பிடிப்பார்கள். அப்போது பெற்றோரும் குழந்தைகளுடன் சேர்ந்து பல் துலக்கினால், அவர்களைப் பார்த்து குழந்தைகளும் தாங்களாகவே பல் துலக்கத் தொடங்குவார்கள்.

10 வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகளுக்குப் பெரியவர்கள் பயன்படுத்தும் டூத் பேஸ்ட், பிரஷ்ஷுக்குப் பதிலாகக் குழந்தைகளுக்கென உள்ள ஃபுளூரைடு சேர்க்காத டூத் பேஸ்ட் மற்றும் மிருதுவாக இருக்கும் டூத் பிரஷ்ஷைப் பயன்படுத்தலாம்.

தினமும் காலையில் எழுந்தவுடனும், இரவு தூங்கச் செல்வதற்கு முன்பும் குழந்தைகளைப் பல் துலக்க வைக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு பிரஷ்ஷில் டூத் பேஸ்ட்டை ஒரு பட்டாணி அளவிலேயே வைத்துக் கொடுக்க வேண்டும்.

பல் துலக்கும்போது டூத் பிரஷ்ஷை ஈறுகளில் இருந்து பற்களை நோக்கி செலுத்தித் தேய்க்க வேண்டும்.

கடவாய் பற்களில் உணவுத் துகள்கள் தங்கியிருக்க அதிக வாய்ப்பிருக்கும் என்பதால், அவற்றை டூத் பிரஷ் கொண்டு நன்றாக அழுத்தித் தேய்க்க வேண்டும்.

பொதுவாக இரண்டு நிமிடங்கள் பல் துலக்கினால் போதுமானது. எனவே, குழந்தைகள் இரண்டு நிமிடங்களுக்கு மிகாமலும் குறையாமலும் பல் துலக்க வேண்டும்.

பல் துலக்கிய பிறகு வாயில் உள்ள பேஸ்ட் நுரை நன்றாகப் போகும்படி தூய்மையான நீரைக்கொண்டு கொப்பளிக்கச் செய்ய வேண்டும்.

குழந்தைகளைப் பொறுத்தவரையில் குளிர்ந்த நீரைவிட வெதுவெதுப்பான நீரில் பல் துலக்குவதே சிறந்தது.

குழந்தைகளுக்குப் பல் துலக்கக் கொடுக்கும் டூத் பேஸ்ட்டை பல் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் அடிக்கடி மாற்றுவதைத் தவிர்க்க வேண்டும்.

தினமும் உணவு உண்ட பிறகு குழந்தைகளைத் தூய்மையான நீரில் வாய் கொப்பளிக்கச் சொல்வது அவசியம்.

குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது குழந்தைகளைப் பல் மருத்துவரிடம் அழைத்துச் சென்று, அவர்களின் பற்களின் ஆரோக்கியத்தை செக்-அப் செய்ய வேண்டும்.

குழந்தைகளுக்குப் பற்சொத்தை, பல்வலி, ஈறுகளில் வீக்கம், ரத்தம் வடிதல் போன்ற பிரச்னைகள் ஏதேனும் ஏற்படும்பட்சத்தில் உடனடியாக பல் மருத்துவரை அணுக வேண்டும்.