குழந்தைகளை ஆதரவின்றி விட்டுச்செல்லும் பெற்றோருக்கு உதவ, `குழந்தை பெட்டிகள்’ (Baby Boxes) என்ற புதிய முன்னெடுப்பைத் தொடங்க உள்ளதாக, இலங்கை குழந்தைகள் நலத்துறை அறிவித்துள்ளது.
குழந்தையை வளர்க்க விருப்பமில்லாத பெற்றோர்கள், வளர்க்க முடியாத பெற்றோர்கள் குழந்தையை சாலைகளில் விட்டுச் செல்கின்றனர். இப்படி வளர்க்க விருப்பமில்லாத பெற்றோர்கள் அரசிடம் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பைக் கொடுக்கலாம். இவர்கள் மீது எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது.

கடந்த சில வருடங்களில் 60 பெற்றோர்கள் குழந்தைகளை சாலையில் கைவிட்டுள்ளனர். கடந்த 6 வருடங்களில் பல காரணங்களுக்காக 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நன்னடத்தை மற்றும் குழந்தை பராமரிப்பு சேவைத்துறை தெரிவித்துள்ளது.
``பிறந்த குழந்தைகளை வீதிகளிலும், பாதுகாப்பற்ற பொது இடங்களிலும் பெற்றோர்கள் கைவிட்டுச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, “குழந்தை பெட்டிகளை” அறிமுகப்படுத்தும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குழந்தைகளை குழந்தை பெட்டியில் விட்டுச் செல்லும் பெற்றோர்கள் மீது எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது'' என நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் துறை கமிஷனர் என்.ஐ. லியனகே தெரிவித்துள்ளார்.