Published:Updated:

குழந்தையுடன் சாப்பிட்டுக்கொண்டே டி.வி. பார்த்தால்...?! உஷார் பெற்றோர்களே!

குழந்தைகளின் இணையதள பயன்பாட்டை 18 சதவிகித பெற்றோர் மட்டுமே கண்காணிக்கின்றனர்... அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவு.

Parental Control
Parental Control

வாழ்க்கையில் எதுவும் அளவோடு இருக்கும்போது பிரச்னையில்லை. அளவுமீறும்போது அதன் பண்பும் மாறிவிடுகிறது. குழந்தைகள் விஷயத்திலும் இது உண்மைதான். அண்மைக்காலமாகக் குழந்தைகளிடத்தில் செல்போன், வீடியோ கேம்ஸ், தொலைக்காட்சி, சினிமா உள்ளிட்டவற்றின் சுருக்கமான `மீடியா பயன்பாடு’ என்பது அதிகரித்தே காணப்படுகிறது. குறிப்பாக, அதிக நேரம் செல்போன் பயன்படுத்தும் குழந்தைகள் நாளடைவில் அதற்கு அடிமையாகிவிடுகின்றனர்.

இதன் விளைவாக உடல் பருமன், படிப்பில் கவனமின்மை, படித்ததை மறந்துபோதல், ஆக்ரோஷமாக நடந்துகொள்வது போன்றவை நடக்கின்றன. சில நேரங்களில் தற்கொலை முயற்சிகளுக்கும் வழிவகுத்துவிடுகிறது.
R. Venkateshwaran
R. Venkateshwaran

`குழந்தைகளின் மீடியா பயன்பாட்டை பெற்றோர் கட்டுப்படுத்தாவிட்டால் பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி வரும்’ என எச்சரிக்கிறது மருத்துவ உலகம். அண்மையில் சென்னையில், குழந்தைகளுக்கான பிரபல தனியார் மருத்துவமனை ஒன்று `குழந்தைகளிடம் மீடியா பயன்பாடு எந்தளவுக்கு உள்ளது... இதுகுறித்த விழிப்புணர்வு பெற்றோர்களிடம் இருக்கிறதா?' என்பது குறித்த கணக்கெடுப்பை நடத்தியது. இந்தக் கணக்கெடுப்பை நடத்துவதில் முக்கியப் பங்காற்றியவர் மனநல மருத்துவர் ஆர்.வெங்கடேஸ்வரன். ஆய்வில் கண்டறியப்பட்டவை குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

"ஒரு குழந்தை மீடியா பயன்பாட்டுக்கு ஒருமுறை அடிமையாகிவிட்டால் அதிலிருந்து குழந்தையை மீட்பது மிகவும் கடினம். பெற்றோர்களுக்கு இது பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. ஆரம்பத்திலேயே இதைக் கண்டறிந்து, அது தொடராமல் தடுப்பது மட்டுமே சிறந்த வழி. சில சமயங்களில் குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை அளிக்க வேண்டிய சூழல்கூட ஏற்படலாம்.

Parental Control
Parental Control

ஒரு வயதிலிருந்து 17 வயது வரையிலான குழந்தைகளிடம் செல்போன், வீடியோ கேம்ஸ், தொலைக்காட்சி, இணையம், சினிமா உள்ளிட்ட மீடியாக்களின் தாக்கம் எந்தளவுக்கு உள்ளது என்பதை இந்த ஆய்வில் கண்டறிய முற்பட்டோம். இதற்காக சுமார் 150 பெற்றோர்களிடம் கணக்கெடுப்பை நடத்தினோம். பல்வேறு வகையான கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்களின் வழியாக எங்களுக்கு பல விஷயங்கள் தெரியவந்தன.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் குறித்து குழந்தைகளிடம் 25 சதவிகிதம் பெற்றோர் மட்டுமே அடிக்கடி விவாதிக்கின்றனர்.

ஒரு குழந்தை ஒரு வாரத்தில் சராசரியாக எவ்வளவு நேரம் மொபைலைப் பயன்படுத்துகிறது என்ற கேள்விக்கு ஏறக்குறைய 23 மணி நேரம் பயன்படுத்துவது தெரியவந்தது. பொதுவாக, 'நாளொன்றுக்கு ஒரு மணி நேரத்துக்கும் குறைவாகக் குழந்தைகள் செல்போன் பயன்படுத்தலாம்' எனப் பரிந்துரைக்கிறோம். கணக்கெடுப்பின் மூலம் பரிந்துரைக்கப்பட்டதைவிட செல்போனை மூன்று மடங்கு பயன்படுதுகின்றனர் என்பதை அறிந்தோம். இதில் சில வித்தியாசங்களையும் கண்டறிந்தோம். நன்றாகப் படிக்கும் குழந்தைகள் 20 மணி நேரம், சுமாராகப் படிக்கும் குழந்தைகள் 29 மணி நேரம், உடல் பருமனுள்ள குழந்தைகள் 25 மணி நேரம், சரியான எடையுள்ள குழந்தைகள் 22 மணி நேரம் செல்போனைப் பயன்படுத்துகின்றனர் எனவும் தெரியவந்தது.

குழந்தைகள் தப்பான வீடியோ பார்த்தால், பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?
சரியான எடையுள்ள குழந்தைகள், ஒரு வாரத்தில் சராசரியாக 22 மணி நேரம் செல்போனைப் பயன்படுத்துகின்றனர்.
மனநல மருத்துவர் ஆர்.வெங்கடேஸ்வரன்.

அதேபோல பெற்றோர்களுக்கு மீடியா பயன்பாடு குறித்த விழிப்புணர்வு எந்தளவுக்கு உள்ளது என்பதையும் அறிய முற்பட்டோம். தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் குறித்து குழந்தைகளிடம் 25 சதவிகிதம் பெற்றோர் மட்டுமே அடிக்கடி விவாதிக்கின்றனர். 70 சதவிகிதம் பெற்றோர் எப்போதாவதுதான் விவாதிக்கின்றனர். 'தொலைக்காட்சிகளில் வன்முறை சார்ந்த நிகழ்ச்சிகளைப் பார்க்கக் கூடாது' என்று 45 சதவிகித பெற்றோர் மட்டுமே குழந்தைகளைக் கட்டுப்படுத்துகின்றனர்.

குழந்தைகள் இணையத்தில் என்ன பார்க்கிறார்கள் என்பதை 18 சதவிகித பெற்றோர் மட்டுமே கண்காணிக்கின்றனர்.

91 சதவிகித குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் சாப்பிட்டுக்கொண்டே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கின்றனர். இது மிகவும் தவறான விஷயம். இதனால் குழந்தைகள் சரியாகச் சாப்பிடாமல் போக வாய்ப்புகள் உண்டு. அதேபோல தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டே அளவு தெரியாமல் சாப்பிடும்போது உடல் பருமனாகும் வாய்ப்புகளும் அதிகம்.

Child Disturbed Sleep
Child Disturbed Sleep

தியேட்டருக்குப் படம் பார்க்கச் செல்லும் பெற்றோரில் எத்தனை பேர் அந்தப் படம் தணிக்கையில் எந்தச் சான்றிதழ் (U, U/A, A) பெற்றிருக்கிறது எனப் பார்த்து அழைத்துச் செல்கின்றனர் என்ற கணக்கெடுப்பில் 90 சதவிகித பெற்றோர் சான்றிதழ் பார்த்து அழைத்துச் செல்வதேயில்லை என்பது தெரிந்தது. எந்தச் சான்றிதழ் பெற்றுள்ள படம் எனப் பார்க்காமலேயே அழைத்துச் செல்லப்படும் குழந்தைகளில் 5 சதவிகிதம் பேருக்குக் கொடுங்கனவுகள் வந்து இரவு தூக்கத்தில் பயத்தில் அலறுவது, அழுவது போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று அறிந்துகொண்டோம்.

குழந்தைகள் இணையத்தில் என்ன பார்க்கிறார்கள் என்பதை 18 சதவிகித பெற்றோர் மட்டுமே கண்காணிக்கின்றனர். குழந்தைகளின் இணையதள பயன்பாட்டைக் கண்காணிக்கவும், அவர்கள் எவற்றையெல்லாம் பார்க்கக்கூடாது என்பதைத் தடுப்பதற்கும் உதவும் `பேரன்ட்டல் கன்ட்ரோல்’ (Parental control) என்ற தணிக்கை இருப்பதே 50 சதவிகித பெற்றோருக்குத் தெரியவில்லை.

Parental control
Parental control

மீடியா பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பெற்றோர்களுக்கு அவசியம் தேவை. அப்போதுதான் குழந்தைகள் செல்போன், தொலைக்காட்சி, இணையம் போன்றவற்றுக்கு அடிமையாகாமல் தடுத்து, அவர்களின் உடல்நலம், மனநலம் பாதிக்கப்படாமல் தவிர்க்க முடியும்.

கல்வி சார்ந்த விஷயத்துக்காக மீடியாவை ஒரு மணி நேரத்துக்கு மேலாகவும் கேளிக்கை சார்ந்தவற்றுக்கு ஒரு மணி நேரத்துக்குக் குறைவாகவும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.

Parental Control
Parental Control
தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டே அளவு தெரியாமல் சாப்பிடும்போது உடல் பருமனாகும் வாய்ப்புகளும் அதிகம்
மனநல மருத்துவர் ஆர்.வெங்கடேஸ்வரன்.

`மாடல் பிஹேவியர்’ என்பது மிகவும் அவசியம். பெற்றோர்தான் குழந்தைகளின் முன்மாதிரி. பெற்றோர் எதைச் செய்கிறார்களோ அதையேதான் குழந்தைகளும் செய்வார்கள் என்பதால், பெற்றோர் மீடியாக்களில் அதிக நேரம் செலவிடுவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்” என்கிறார் மருத்துவர் ஆர்.வெங்கடேஸ்வரன்.