அவள் விகடன் சோஷியல் மீடியா பக்கங்களில் வாசகிகளிடம் `குழந்தைகள் காய்கறிகள் சாப்பிட... நீங்கள் பின்பற்றும் `Mom Tricks'ஐ பகிர்ந்துகொள்ளுங்களேன்' என்று கேட்டிருந்தோம். பலரும் ஆர்வத்துடன் தங்கள் பதில்களை கமென்ட்களாகப் பதிவு செய்திருந்தனர். #Avaludan என்ற ஹேஷ்டேக்குடன் அவர்கள் பகிர்ந்திருந்தவற்றில் சிறந்த சில கமென்ட்கள் இங்கே...

Yasmin Rafeek

உருளை, வெண்டை, கேரட், பீட்ரூட் இவற்றையெல்லாம் ஸ்லைஸ் செய்து, சிக்கன் 65 மிக்ஸை ரெடி செய்து, வெஜ் 65 ஆக செய்து கொடுப்பேன். தட்டு காலியாகிவிடும்.

Gomathi Kumaravel

குழந்தைகள் சாப்பிடாத காய்கறிகளை எல்லாம் வேக வைத்து, க்ரீமியான, கலர்ஃபுல்லான காய்கறி சூப் ஆக்கிக் கொடுக்கலாம்.

Kames Wari

எந்தக் காயாக இருந்தாலும் சரி... அதனுடன் சுவைக்குக் கொஞ்சம் வெல்லம், நிறத்துக்கு மஞ்சள்தூள், சிறிதளவு கரம் மசாலா சேர்த்து சமைத்துக் கொடுத்தால் குழந்தைகள் கேட்டு வாங்கிச் சாப்பிடுவார்கள்.

Kokila Kumaran

பீட்ரூட், கேரட் போன்றவற்றை நன்கு வேக வைத்து மசித்துக் கூழாக்கி, தோசை மாவில் கலந்து தோசை வார்த்துக் கொடுப்பேன். பசலைக்கீரை, வெந்தயக் கீரையை சப்பாத்தி மாவில் சேர்த்துப் பிசைந்து, சப்பாத்தியில் சிறிது தேன் தடவி ரோல் செய்து கொடுப்பேன். முருங்கைக்கீரையை ராகி மாவில் கலந்து அடையாகச் சுட்டுத் தருவேன். குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

Anusha Satheeshkumar

நான் ஒரு டயட்டீஷியன். காய்கறிகளை குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் சூப்பாகவோ, வேக வைத்தோ, மசித்தோ கொடுத்து எல்லா காய்கறிகளின் சுவையையும் அறிமுகப்படுத்திவிட வேண்டும். பின்னர், அவர்கள் காய்கறிகளை ஒதுக்க மாட்டார்கள்.

Chithra Dhakshinamurthy

என் குழந்தைக்கு இரண்டு வயதானபோதே, அதுக்கு பிடிக்காத காய் எனில், அன்றைய சமையலில் அதை மட்டும்தான் சமைப்பேன், வேறு காய் சமைக்க மாட்டேன். இதனால் வேறு வழியேயில்லாமல், கொஞ்சமாகவாவது அதைச் சாப்பிட்டுவிடும். இப்போது ஐந்து வயதாகிறது... என் குழந்தை சாப்பிடாத காய் என்று எதுவும் இல்லை, பாகல் உட்பட.

Backiya Lakshmi

குழந்தைகளுக்கு ஒவ்வொரு காயின் ஊட்டச்சத்து பலன் களையும், சுவாரஸ்யமாகச் சொல்வேன். காய்கள் சாப்பிட அவர்களுக்குப் பிடித்துப்போனது.