ஸ்பெஷல்
Published:Updated:

நோய் எதிர்ப்பு சக்திக்கு...

ஆப்பிள் பேரிக்காய் ஜூஸ்உணவு

டி.கிருஷ்ணமூர்த்தி, சீஃப் டயட் கவுன்சலர்

தேவையானவை: ஆப்பிள் 1, பேரிக்காய் சிறியது -2.

செய்முறை: ஆப்பிள், பேரிக்காய்களை தோல் சீவி, விதை நீக்கி, சிறு சிறு துண்டுகளாக வெட்டவும். சிறிது நீர் சேர்த்து, மிக்ஸியில் நன்கு அரைக்கவும். பழங்களின் இனிப்புச் சுவையே போதுமானது. தேவை எனில் சிறிது சர்க்கரை, ஐஸ்கட்டி சேர்த்துக்கொள்ளலாம்.

நோய் எதிர்ப்பு சக்திக்கு...

பலன்கள்:

•  வைட்டமின் ஏ,சி,கே மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட தாது உப்புக்கள் இதில் நிறைய உள்ளன.

•  தொடர்ந்து இந்த ஜூஸ் குடித்துவந்தால், தோல் பொலிவு அதிகரிக்கும், நோய் எதிர்ப்பு சக்தி கூடும். நோய்கள் அண்டாது.

• இதய நோயாளிகள், சிறுநீரகத்தில் கற்கள் இருப்பவர்கள், புற்றுநோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் என அனைவருக்கும் ஏற்றது. இவர்கள் சர்க்கரை சேர்க்காமல் அருந்த வேண்டும்.

• சர்க்கரை நோயாளிகள் பழங்களை ஜூஸ் செய்து சாப்பிடாமல், அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.

•  குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் இந்த ஜூஸ் அருந்துவது நல்லது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிக அளவு உள்ளது.

- பு.விவேக் ஆனந்த், படம்: கு.பாலசந்தர்