Published:Updated:

நிலவேம்புக் குடிநீர் மலட்டுத்தன்மை ஏற்படுத்துமா? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நிலவேம்புக் குடிநீர் மலட்டுத்தன்மை ஏற்படுத்துமா? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?
நிலவேம்புக் குடிநீர் மலட்டுத்தன்மை ஏற்படுத்துமா? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?

நிலவேம்புக் குடிநீர் மலட்டுத்தன்மை ஏற்படுத்துமா? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டெங்குவால் கலங்கிப்போய் இருக்கும் மக்களை மேலும் கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது, நிலவேம்புக் குடிநீர் பற்றி சமூக வலைதளங்களில் பரவும் செய்தி. அரசு மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், கடைத் தெருக்கள் என அனைத்து இடங்களிலும் அரசு சார்பாகவும், தன்னார்வலர்களாலும் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், 'நிலவேம்புக் குடிநீர் குடித்தால் மலட்டுத்தன்மை உண்டாகும்'  என்று செய்திகள் பரவுகின்றன.

'எலிகளை வைத்து நடத்தப்பட்ட சோதனையில், தொடர்ந்து 60 நாள்கள் நிலவேம்பு புகட்டப்பட்ட பெண் எலிகள், இனப்பெருக்கம் செய்யும் தன்மையை இழப்பதாகவும், நிலவேம்பில் உள்ள ஒரு மூலக்கூறு மலட்டுத்தன்மையை உருவாக்குவதாகவும்  சமூக வலைதளங்களில் செய்திகள் பரப்பப்படுகின்றன. சில மருத்துவர்களேகூட அந்தச் செய்தியைப் பகிர்கிறார்கள்.  

உண்மையில், நிலவேம்பு மலட்டுத்தன்மை ஏற்படுத்துமா? 

தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறையின் இயக்குநர், டாக்டர் குழந்தைசாமியிடம் கேட்டோம்.

 "நம் முன்னோர்கள், நன்மை செய்யும் தாவரங்களையும் உடலுக்குத் தீமை விளைவிக்கக்கூடிய தாவரங்களையும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டறிந்து வகைப்படுத்தி, ஆவணப்படுத்தியுள்ளார்கள்.  அதன்படி, நிலவேம்புக் குடிநீரில் உள்ள மூலிகைகளில், எந்த மூலிகையின் மூலக்கூறும் ஆண்மைக்குறைவை ஏற்படுத்தாது. கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிட்யூட்டில் நிலவேம்பில் உள்ள மருத்துவ குணம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நிச்சயமாக நிலவேம்புக் குடிநீர் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தாது. 100 சதவிகிதம் பாதுகாப்பானது" என்கிறார் குழந்தைசாமி.

சித்த மருத்துவர் சிவராமனிடம் பேசினோம்.

"இப்படி வதந்திகளைப் பரப்புபவர்கள், முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். நிலவேம்பு வேறு, நிலவேம்புக் குடிநீர் என்பது வேறு. நிலவேம்புக் குடிநீரில் சுக்கு, பற்படாகம், வெட்டிவேர், விலாமிச்சை வேர், கோரைக்கிழங்கு, பேய்ப்புடல், மிளகு, சந்தனம் உள்ளிட்ட மூலிகைகள் சேர்க்கப்படுகின்றன. இவை எல்லாம் சேர்ந்ததுதான் நிலவேம்புக் குடிநீர். 

நிலவேம்பால் மலட்டுத்தன்மை வரும் என்று செய்தி பரப்புபவர்கள்,  நிலவேம்பு என்ற ஒற்றை மூலிகையை மட்டும் வைத்து ஆய்வு செய்துள்ளதாகக் கூறுகின்றனர். எனவே, அடிப்படையே தவறு.  இதை நாம் முழுமையான ஆய்வாக எடுத்துக்கொள்ள முடியாது. 

 வைரஸுக்கு எதிரான எந்த ஒரு ஆன்டி-வைரஸ் மருந்திலும் விந்தணுக்களை அழிக்கும் சில மூலக்கூறுக்கள் இருக்கும். அலோபதியில் கொடுக்கப்படும் ஆன்டி-வைரஸ் மருந்துகளுக்கும் இது பொருந்தும். எடுத்துக்கொள்ளும் அளவைப் பொறுத்து அதன் விளைவு இருக்கும். 

டெங்கு அதிவேகமாகப் பரவிவரும் இக்கட்டான சூழ்நிலையில், ஒரே தீர்வாக  நிலவேம்புக் குடிநீர்தான். அதேசமயம், ஒருவர் எவ்வளவு குடிக்க வேண்டும், எந்தத் தரக்கட்டுப்பாட்டின் அடிப்படையில் நிலவேம்புக்குடிநீர் தயாரிக்கப்பட வேண்டும், யாரின் பரிந்துரையோடு கொடுக்கப்பட வேண்டும் என்பதில் ஒரு வறையறை கொண்டுவருவது அவசியம். ஒட்டு மொத்தமாக அவதூறு பரப்புவது தவறு..." என்கிறார் சிவராமன். 

நிலவேம்பை யார் எவ்வளவு, எப்படிக் குடிக்க வேண்டும் :

இளஞ்சூடாக குடிப்பதுதான் சிறந்தது. அதுவும் தயாரித்த 3 மணி நேரத்துக்குள் குடித்துவிட வேண்டும். நேரம் செல்லச்செல்ல, அதன் வீரியம் குறைந்துவிடும். ஒரு நாளைக்கு 10 மி.லி முதல் 50 மி.லி வரை குடிக்கலாம். இதில் குழந்தைகள் (3 - 12 வயதுக்குட்பட்டோர்) 15-30 மி.லி, பெரியவர்கள் 15 -50 மி.லி வரைக் குடிக்கலாம். காய்ச்சல் பாதித்தவர், ஒரு நாளைக்கு மூன்று தடவை குடிக்கலாம். அதே நேரம், மருத்துவர்களின் ஆலோசனைப்படி மட்டுமே  நிலவேம்புக் குடிநீரைக் குடிக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு