Published:Updated:

மருந்தில்லா மருத்துவம் - 8

மருந்தில்லா மருத்துவம் - 8
பிரீமியம் ஸ்டோரி
மருந்தில்லா மருத்துவம் - 8

விஷுத்தி சக்கரம்

மருந்தில்லா மருத்துவம் - 8

விஷுத்தி சக்கரம்

Published:Updated:
மருந்தில்லா மருத்துவம் - 8
பிரீமியம் ஸ்டோரி
மருந்தில்லா மருத்துவம் - 8
மருந்தில்லா மருத்துவம் - 8

னாஹதச் சக்கரத்தை அடுத்து, 7 முதல் 11 வயது வரை மலர்வது, விஷுத்தி. தொண்டைப் பகுதியில் நீல வண்ணம் உடைய இதழ்களுடன் இது அமைந்துள்ளது. விஷுத்தி என்றால், `மிகவும் தூய்மையானது’ எனப் பொருள். இந்தச் சக்கரம் தைராய்டு, பாரா தைராய்டு என்ற இரண்டு நாளமில்லா சுரப்பிகளைச் சார்ந்தது.

தைராய்டு சுரப்பி டி3, டி4 எனும் ஹார்மோன்களைச் சுரக்கிறது. உணவில் உள்ள அயோடின், தைராய்டு செல்களால் ஹார்மோனாக மாறுகிறது. உடல் உறுப்புகளின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஹார்மோன் சுரப்பி தைராய்டு ஆகும். உணவில் உள்ள அயோடினும் கடல் உப்பில் உள்ள தாதுஉப்பும், நுண்ஊட்டச்சத்தும் தைராய்டு சுரப்பியை வலுவுறச்செய்யும். தைராய்டு சுரப்பியின் ஒரு பாகமாக அமைந்திருக்கும் ஒரு சிறிய ஹார்மோன் சுரப்பி, பாரா தைராய்டு. இது, எலும்பின் உறுதிக்குத் தேவையான கால்சியத்தை உணவில் இருந்து கிரகிக்க உதவுகிறது.

விஷுத்திச் சக்கரத்தைச் சார்ந்த தொண்டைப் பகுதியில் உள்ள மற்ற உறுப்புகள், டான்சில், குரல்வளை, செரிமான மண்டலம் மற்றும் சுவாச மண்டலத்துக்குப் பொதுவான உறுப்பான பாரின்க்ஸ் (Pharynx), உணவுக்குழல் ஆகும்.

விஷுத்தி, மற்ற நான்கு சக்கரங்கள் மலர்ந்து வளர்ச்சியடையும் தருணத்தில் ஏற்படும் உணர்ச்சிகளை ஒருங்கிணைக்கும். இந்தச் சக்கரத்தால்தான் குரல்வளை மேம்பட்டு பேச்சுத்திறன், கலைத்திறன் வெளிப்படுகிறது. இந்தப் பருவத்தில் மழலை மாறி, மனதில் உள்ளவற்றைக் கோர்வையாகப் பேசும் திறன் அதிகரிக்கும். கலைகளைக் கற்று, அதில் தேர்ச்சி பெற இந்தச் சக்கரத்தின் திறன்தான் காரணம்.
ஆனால், இது மலரும் பருவத்தில் குழந்தையைத் தேவைக்கு அதிகமாகக் கண்டித்தால், தாழ்வு மனப்பான்மை தோன்றும். இதனால், திக்குவாய் தோன்றலாம். இதே சூழ்நிலை ஒரு சில குழந்தைகளுக்குக் காழ்ப்புஉணர்ச்சியைத் தூண்டி, தேவை இல்லாமல் மற்றவருடன் சண்டை போடுவது, பொய் சொல்வது, தான் எனும் அகங்காரத்தால் மற்றவர்களைப் பேச்சில் அதிகாரம் செய்வது, அடக்குவது போன்ற குணங்கள் வளரும். விஷுத்திச் சக்கரத்தின் சுழற்சியைச் சரிசெய்து, மனம் சார்ந்த இந்தப் பிரச்னைகளைச் சரிசெய்யலாம்.

மருந்தில்லா மருத்துவம் - 8

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டான்சில்ஸ்: விஷுத்திச் சக்கரத்தைச் சார்ந்த தொண்டைப் பகுதியில் உள்ள இந்தச் சுரப்பி, சுவாசிக்கும் காற்றில் உள்ள கிருமிகளையும், உணவில் வியாதியை உண்டாக்கும் நுண் கிருமிகளையும் எதிர்க்கும் சக்திகொண்ட செல்களால் ஆனது. எனவே, முழு உடலுக்கும், எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, வியாதிகளில் இருந்து உடலைப் பாதுகாக்கும் அற்புதமான சுரப்பி, டான்சில்ஸ். விஷுத்திச் சக்கரம் சீராகச் சுழலும்போது, டான்சில்ஸ் சரிவர வேலைசெய்யும்.

டான்சில்ஸ் சுரப்பியின் செல்கள், அசுத்தக் காற்று, அசுத்த உணவு, அசுத்த நீர், இவற்றால் வரும் விஷக்கிருமிகளைத் தாக்கும்போது, டான்சில்ஸ் வீக்கம் அடையும். இது, உடல் எதிர்ப்பு சக்தியின் அறிகுறி. ஆனால், வீக்கத்தினால் வலி தோன்றும்போது, மருத்தவர் உதவியை நாடி ஆன்டிபயாடிக் மாத்திரைகளைச் சாப்பிடுவதால், சுரப்பின் அளவு குறையும். நாளடைவில் அடிக்கடி சளி, இருமல் தோன்றி, டான்சிலைடிஸ் உபாதை தீவிரமடையும்போது, அறுவைசிகிச்சை செய்து டான்சில்ஸ் சுரப்பியை அறவே நீக்கிவிடுவார்கள். இதனால், நாளடைவில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, அடிக்கடி நோய்வாய்ப்பட வாய்ப்பு உண்டாகிறது.

தீர்வு என்ன?

டான்சில் சுரப்பியை வலுவாக்க, திறம்பட வைக்க, விஷுத்திச் சக்கரத்தின் வழியாகப் பிரபஞ்ச சக்தியைச் செலுத்தி, வலுப்படுத்த வேண்டும். இதனால், மருந்தும் தேவை இல்லை. அறுவைசிகிச்சையும் தேவை இல்லை. நோய் எதிர்ப்பு சக்தி வலுவடையும்.

மருந்தில்லா மருத்துவம் - 8

பாரின்க்ஸ் (Pharynx): சிலருக்கு, சளி, இருமல், தும்மல் போன்ற வியாதிகள் தோன்றும்போது, தொண்டை எரிச்சல் காணப்படும். சிலருக்கு வயிற்றுப்புண் இருந்தால், ஹைட்ரோகுளோரிக் அமிலம் வயிற்றிலிருந்து மேல் நோக்கி வந்து தொண்டை எரிச்சலை உண்டாக்கும்.  பாரின்க்ஸில் இருந்து யூஸ்டேஷியன் குழல் (Eustachian Tube) பாரின்க்ஸையும் நடுக்காதையும் இணைக்கும். எனவே, வயிற்றில் அமிலம் அதிக அளவில் சுரந்து, ஒரு சிலருக்கு மேல் நோக்கி செல்லுவதால் (Acid reflux) தொண்டை புண்ணாகி நடுக்காது வரை சென்று தலைவலி வரலாம். சுவாசக் குழாயில் தடை ஏற்படுவதால், தொண்டை, புண்ணாகியும் நடுக்காதில் சீழ் சேரலாம். சிலருக்கு வறட்டு இருமல் மட்டுமே அறிகுறியாக இருக்கும்.

டான்சிலைடிஸ், குரல்வளைப் பாதிப்பு, தொண்டைப்புண், இருமல் போன்ற வியாதிகளுக்கு  விஷுத்திச் சக்கரத்துக்கு ரெய்கி சிகிச்சை மூலம் சக்தியூட்டி நிவாரணம் பெறலாம்.

சுவாச உறுப்புகளுக்குப் பாதிப்பிருந்தால், ஸுஜோக் அக்குபஞ்சர் மூலம், ஆள்காட்டி விரலில், நுரையீரல் மெரிடியனில் சிகிச்சை அளிக்கப்படும். ஜீரண மண்டலப் பாதிப்பினால் ஏற்பட்ட வியாதிகளுக்கு, நடு விரலில் இரைப்பை மெரிடியனில் அக்குபஞ்சர் செய்து நிரந்தரத் தீர்வு காணலாம்.

- தொடரும்

படம்: ப.சரவணகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism