ஏழு சக்கரங்களில் தலையாயது, மனிதனுக்குக் கிரீடமாக இருப்பது சஹஸ்ராரா சக்கரம். இதை, ஆயிரம் இதழ்களுடைய தாமரையாக உருவகப்படுத்துகின்றனர். முதலாவது சக்கரமான மூலாதாரச் சக்கரத்தின் சக்தியால் உந்தப்பட்டு, மற்ற சக்கரங்கள் அந்தந்தப் பருவத்தில் தடங்கல் இன்றி மலரும்போது, ஏழாவது சக்கரமான சஹஸ்ராரா சக்கரம் அழகாக மலரும். ஊதா நிறம் உடைய இதழ்களைக் கொண்டது. மூளையின் நடுவே இருக்கும் பினியல் எனும் நாளமில்லா சுரப்பியைச் சார்ந்தது. அனாஹதச் சக்கரம், பக்தி, அன்பின் இருப்பிடம். இந்தச் சக்கரத்தின் உணர்ச்சியால் சஹஸ்ராரா சக்கரம் மேலும் வலுவடையும்.

அனாஹதச் சக்கரத்தின் உணர்ச்சியும், சஹஸ்ராரா சக்கரத்தின் உணர்ச்சியும், ஒருங்கிணையாவிட்டால், இந்தச் சக்கரம் மலர்ந்தாலும், ‘நான்’ எனும் அகம்பாவம், இயற்கை/இறைவனை ஏற்க மறுப்பது போன்ற குணங்கள் தோன்றும். சக்கர தியானம் செய்வதால், எல்லா சக்கரங்களையும் சம நிலையில் இயங்கச்செய்து, நம்மையும் இறைவனையும் இணைக்கும் நிலையை அடையலாம். இதை ‘சமாதி நிலை’ என்பர்.

சஹஸ்ராரா சக்கரம், நம்மையும், இயற்கையையும் படைத்த இறைவனுடன் இணைக்கும் வல்லமை பெற்றது. கர்ப்பப்பையில் இருந்து வெளிவரும் சிசு, மூலாதாரத்தின் சக்தியால் உயிருடன் இந்த உலகை அடைகிறது. கருவிலேயே சுவாச உறுப்புகள் வளர்ச்சியுற்றிருந்தாலும், பிறக்கும் வரை நுரையீரலால் சுவாசிக்க முடியாது. பிறந்தவுடன், வாயைத் திறந்து அழும்போது, இயற்கையிலேயே நாசியின் வழியே சுவாசிக்கத் தொடங்குகிறது. பிராண வாயுவை சுவாசிப்பதால் இதயம் வலிமையடைந்து, ரத்த ஓட்டம் பலம் பெற்று உடல் உறுப்புகள் வலிமையடைகின்றன.

மூளையைப் பாதுகாக்கும் கபாலம் எனும் மண்டை ஓடு , பல எலும்புகளால் ஆனது. ஆனால், இவற்றில் சில எலும்புகள், சிசு பிறந்த பின் வலுவடைகின்றன. பிறக்கும்போது சில எலும்புகள், மெல்லிய சீலை போலத் தோன்றி பின்பு வலுவான எலும்பாகும். இவற்றை மெம்ப்ரேன் எலும்பு (Membrane bone) என்கிறோம்.

உச்சந்தலையில் ஃபான்டனெல் (Fontanelle) எனும் மெல்லிய எலும்புகளிடையே அமையப் பெற்றுள்ளது இந்தச் சக்கரம். சஹஸ்ராரா சக்கரத்தின் சக்தி குவிந்து சிசுவின் ஃபான்டனெல் மூலம் ஊடுருவி, பினியல் சுரப்பியை அடைகிறது. இதனால், பிரபஞ்ச சக்தி சஹஸ்ராரா சக்கரத்தின் வழியாக, பினியல் சுரப்பியை அடைகிறது.

குழந்தை பிறந்ததும், இயற்கையாகவே பிராண வாயு எனும் பிரபஞ்ச சக்தியைப் பெறுகிறது. இது, பினியல் சுரப்பியை வலுவடையச்செய்கிறது. இதனால், பினியல் சுரப்பியைச் சார்ந்த மூளை வலுவடைந்து, மற்ற உறுப்புகளும் வளர்ச்சியடைகின்றன. குழந்தை தவழும் பருவத்தில், இந்தச் சீலை போன்ற மென்மையான எலும்பு, வலுவுள்ள எலும்பாக மாறி மண்டை ஓடாக உருவெடுத்து, மூளையைப் பாதுகாக்கிறது.

ஏன் ஊடுருவ வேண்டும்?

இந்தச் சக்கரமும் பினியல் சுரப்பியும் ஒருங்கிணைந்து செயல்படும்போது, மூளையில் உள்ள நியூரான்கள் வளர்ச்சியடைந்து பெருகுகின்றன. இதன் மூலமாகவே, உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஒவ்வோர் உடல் உறுப்பும் ஒரு தானியங்கிக் கருவியாகத் தன் வேலையைத் தகுந்த நேரத்தில் செய்ய சஹஸ்ராரா சக்கரமும் அதனைச் சார்ந்த ஆக்ஞா சக்கரமும் முக்கியப் பொறுப்பை வகிக்கின்றன. இதை ஆங்கிலத்தில் பயோ ரிதம் (Bio rhythm), சர்காடியன் ரிதம் (circadian rhythm) என்பார்கள்.

சஹஸ்ராரா சக்கரமும் நோய்களும்

கல்வி கற்பதில் நாட்டமின்மை, கவனக்குறைவு அல்லது, தனக்கு எல்லாம் தெரியும் எனும் இறுமாப்பு, பிறரை அலட்சியம் செய்தல் போன்ற மனப்பான்மை தோன்றும்.

சிலருக்கு, மனச்சிதைவு ஏற்படும். மனதைப் பக்குவப்படுத்த சஹஸ்ராரா சக்கரத்துக்கும், ஆக்ஞா சக்கரத்துக்கும் ரெய்கி அளிக்க வேண்டும். முதுமையில், மூளையின் ஒரு பக்கத்தில் சுரக்கும் டோபமைன் (Dopamine) சுரக்காததால், பார்கின்சன் (Parkinson) எனும் நோய் தோன்றும். இதில் கை, கால் நடுக்கம் இருந்தாலும், சஹஸ்ராரா சக்கரங்களுக்கு ரெய்கி சிகிச்சை அளிக்க வேண்டும்.

இதே போல, பாரிசவாயு, மூளை, ரத்த ஓட்டப் பாதிப்பு, கட்டி, புற்றுநோய், தலையில் அடி போன்ற பிரச்னைகளுக்கும் இந்த இரு சக்கரங்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பதன் மூலம் நல்ல பலனைப் பெறலாம்.

- தொடரும்

படம்: ப.சரவணகுமார்

ஸுஜோக் அக்குபஞ்சர்

மூளையைச் சேர்ந்த பாதிப்புகளுக்கு ஆள்காட்டி விரலில் மூளை மெரிடியனில் தகுந்த புள்ளிகளைத் தேர்ந்தெடுத்து அக்குபஞ்சர் செய்ய வேண்டும். மேலும், கட்டை விரலின் நுனிப்பாகத்திலும் மூளையைச் சார்ந்த புள்ளிகளில் அக்குபஞ்சர் செய்ய வேண்டும். தேவையற்ற பயத்தினால், மனஅமைதியை இழந்தால், சிறுநீரக மெரிடியனில் சிகிச்சை அளிக்க வேண்டும். முடிவாக சஹஸ்ராரா சக்கரப் பாதிப்புக்கு ஆழ்நிலை தியானத்தை அனுபவம் உள்ள குருவின் மூலம் கற்று நிவாரணம் பெற வேண்டும். மனதையும் உடலையும் ஒருங்கிணைத்து, பிரபஞ்ச சக்தியுடன் ஒன்றி ஆரோக்கியமாக வாழலாம்.