Published:Updated:

மருந்தில்லா மருத்துவம் - 15

மருந்தில்லா மருத்துவம் - 15
பிரீமியம் ஸ்டோரி
மருந்தில்லா மருத்துவம் - 15

மருந்தில்லா மருத்துவம் - 15

மருந்தில்லா மருத்துவம் - 15

மருந்தில்லா மருத்துவம் - 15

Published:Updated:
மருந்தில்லா மருத்துவம் - 15
பிரீமியம் ஸ்டோரி
மருந்தில்லா மருத்துவம் - 15
மருந்தில்லா மருத்துவம் - 15

முதுகின் நுனிப் பகுதியான வால் எலும்புகளை காக்சிக்ஸ் (Coccyx) என்பார்கள். இது, மூன்று முதல் ஐந்து சிறிய எலும்புகளால் ஆனது. தேவையற்ற  உறுப்பு என்று கருதப்பட்டாலும், இந்த எலும்புகளின் பாதிப்பினால் அவஸ்தைப்படுபவர்கள் அதிகம்.  அமரும்போது, இந்தக் கடைசி எலும்புகள் மேல்தான் மொத்த அழுத்தமும் ஏற்படுகிறது.

எவ்வாறு பாதிப்பு ஏற்படுகிறது?

இரு சக்கர வாகனங்களில் இருந்து, தவறி விழ நேரும்போது, இந்த எலும்புகள் நேரே தரையில் அழுத்தப்படுவதால் பாதிக்கப்படலாம். அப்போது, இந்த எலும்புகள் முறியவோ, நசுங்கவோ வாய்ப்பு உள்ளது. அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்வதால் சிலருக்கு முதுகின் நுனிப்பாகத்தில் வலி ஏற்படலாம். இவர்கள், நாற்காலியிலேயோ, தரையிலோ உட்காரும்போது, தாங்க முடியாத வலி ஏற்படும்.

சமீபத்தில், 30 வயது இளைஞர் ஒருவர் இந்த வலியுடன் என்னை அணுகினார். இவரின் முதுகின் நுனிப்பாகத்தில், உட்காரும் இடத்தில் வால் எலும்பு முறிவால், இரண்டு வருடங்களாக  அவதிப்படுவதாகக் கூறினார். வலி நிவாரணத்துக்காக பல மருத்துவர்களை அணுகியிருக்கிறார்.

அறுவைசிகிச்சைதான், இதற்குத் தீர்வு எனத் தெரிவிக்கப்பட்டதால், அதைத் தவிர்க்க மாற்று வழியைத் தேடியிருக்கிறார். வலிக்கு தற்காலிக நிவாரணமாக, மருத்துவரின் ஆலோசனையுடன், ஒரு ரிங்கை (Ring) உபயோகித்துவந்துள்ளார். இதனால், முதுகின் நுனிப்பாகம், நாற்காலியில் படாமல் இருக்கும். இது, எலும்பின் அழுத்தத்தைக் குறைக்கும். தற்காலிகமாக வலி குறையும்.  முதுகெலும்பின் நுனிப்பாகமான வால் எலும்புகள், மூலாதாரச் சக்கரத்தைச் சார்ந்தது. மருத்துவப் புத்தகங்களில் இந்த எலும்புகளால் பயன் ஏதும் இல்லை என்று இருக்கும். உண்மையில், நம் உடலில் தேவையற்றது என்று எந்தப் பகுதியும் இல்லை. இந்த நுனி எலும்புதான் நம் உடலுக்குத் தேவையான குண்டலினி சக்தியின் இருப்பிடம். இந்தப் பாகம் பாதிக்கப்படும்போது,  தண்டுவடத்தின் மூலம், மேல் நோக்கிச் செல்லும் சக்தியின் பாதை பாதிக்கப்படுகிறது. மூலாதாரச் சக்கரத்தின் மூலம் ஊடுருவும் சக்தியின் பாதைத் தடைப் படுகிறது. சக்திப் பாதையின் தடையே, வலிக்கு மூலக்காரணம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மருந்தில்லா மருத்துவம் - 15

ரெய்கி சிகிச்சை

நாட்பட்ட வலி இருந்தால், மூலாதாரச் சக்கரத்தின் அடைப்பை நீக்கி சுத்தம்செய்ய வேண்டும். பிறகு, பிரபஞ்ச சக்தியை, ரெய்கி சிகிச்சை மூலம் அளிக்க வேண்டும். சக்கரத்தின் அடைப்பு நீங்கி, அதன் சுழற்சி சமநிலையை அடைய, முறிந்த எலும்புகள் வலுப்பெற்று  குணமாகும். நோயின் மூலக்காரணம் நீங்கினால், வலியும் மறையும்.

சுஜோக் அக்குபஞ்சர்

நடு விரலும் மோதிர விரலும் சேரும் இடத்தில், ஒரு சிறு புள்ளி, வால் எலும்புகளைக் குறிக்கும். இந்தப் புள்ளியைத் தேர்ந்தெடுக்க, பிரத்யேகக் கருவியைப் பயன்படுத்தி அழுத்தம் கொடுப்போம். குறிப்பிட்ட புள்ளியில் வலி அதிகம் உணர்ந்தால், அந்தப் புள்ளியில், விரலால் அழுத்தம் கொடுத்து, வலி குறைகிறதா என்று கேட்போம். இந்த சிறிய பரிசோதனையின்போதே நோயாளியால் வலி இன்றி நன்றாக உட்கார முடியும். தொடர்ந்து, அந்தப் புள்ளியில் சுஜோக் அக்குபஞ்சர் முறையில் தூண்டுதல் செய்யப்படும்.  மீண்டும் வலி வரக் கூடாது என்பதால், ரெய்கி மற்றும் சுஜோக் முறைகளைச் சேர்த்து சிகிச்சை அளித்தால், பூரண நிவாரணம் பெறலாம். இதேபோல், வால் எலும்பு நசுங்கினாலோ முறிந்தாலோ, ஓரிரு நாளிலேயே மருந்து, மாத்திரை, அறுவைசிகிச்சை இல்லாமல் குணமாக்கலாம்.

- தொடரும்

கால் வலி

ஒரு சிலருக்கு இடுப்பு அல்லது தொடையின் வெளிப்பகுதியில் வலி காணப்படும். இதற்கு சையாடிகா (Sciatica) என்று பெயர். வலி நிவாரணத்துக்கு மருந்து கொடுத்து வலியைக் குறைத்துவிடுவார்கள். நோயின் மூலக்காரணம், காலுக்கு உணர்ச்சியூட்டும் நரம்புகள், தண்டுவடத்தில் இருந்து வெளிவந்து கால்களைச் சேரும் நரம்புகள் பாதிக்கப் பட்டிருப்பதுதான். இந்த நரம்புகள் பின்–மணிப்பூரகம், பின் – ஸ்வாதிஷ்டானா சக்கரங்களைச் சார்ந்தவை. நடு, கீழ் முதுகுப் பகுதியில் இருந்து வெளிவரும் ஒருங்கிணைந்த நரம்புகளில் பெரியது சையாடிகா நரம்பு. சையாடிகா நரம்பு பிசகினாலோ, உட்காரும் இடத்தில் அதிக அழுத்தம் ஏற்பவதாலோ, தாங்க முடியாத வலி ஏற்படும். பின் – மணிப்பூரகம், பின் – ஸ்வாதிஷ்டானா, மூலாதாரச் சக்கரங்களுக்குப் பிரபஞ்ச சக்தி அளிக்கும்போது தண்டுவடமும், அதில் இருந்து வெளிப்படும் நரம்புகளும் வலுவடைகின்றன. இடுப்பு, தொடைப் பகுதியில், சக்தியூட்டும்போது, சையாடிகா வலி அறிகுறியாக இருக்குமிடம் உணர்ச்சி பெறுகிறது.

தண்டுவடத்துக்கு சக்தியூட்ட, ஆட்காட்டி விரலில், தண்டுவட மெரிடியனில், புள்ளியைக் கண்டறிந்து சுஜோக் அக்குபஞ்சர் செய்ய வேண்டும். மேலும், நடு விரலில் இடுப்புப் பகுதியையும், தொடைப் பகுதியையும் குறிக்கும் பாகத்துக்கு சுஜோக் அக்குபஞ்சர் செய்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

ரெய்கி, சுஜோக் சிகிச்சை இரண்டுமே பழுதடைந்த பாகங்களுக்கு மிக விரைவாக சக்தி ஊட்டுவதால், சிகிச்சை அளிக்கும் காலம் வெகுவாகக் குறைகிறது. முதுகுவலியில் ஏராளமான வகைகள் உள்ளன. அவற்றில், பெரும்பாலானோருக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வலிகள் மற்றும் அதற்கான தீர்வுகளைப் பார்த்தோம். இனி, முழங்கால், மூட்டு வலி உள்ளிட்டவை பற்றியும், அதற்கான சிகிச்சை பற்றியும் விரிவாகப் பார்க்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism