Published:Updated:

மருந்தில்லா மருத்துவம் - 17

மருந்தில்லா மருத்துவம் - 17
பிரீமியம் ஸ்டோரி
மருந்தில்லா மருத்துவம் - 17

கழுத்து வலி

மருந்தில்லா மருத்துவம் - 17

கழுத்து வலி

Published:Updated:
மருந்தில்லா மருத்துவம் - 17
பிரீமியம் ஸ்டோரி
மருந்தில்லா மருத்துவம் - 17
மருந்தில்லா மருத்துவம் - 17

நான்கு, ஐந்து கிலோ எடை உள்ள தலையைத் தாங்கிப்பிடிக்கும், தலையையும் மார்பையும் இணைக்கும் சிறிய அமைப்பான கழுத்துக்கு அதிகப்படியான வேலை கொடுக்கும்போது கழுத்து வலி ஏற்படுகிறது. ஏழு எலும்புகள் கொண்ட உறுப்பு கழுத்து. முதல் இரண்டு சி1, சி2 (அட்லாஸ், ஆக்ஸிஸ்) எனும் எலும்புகள் தலையைத் தாங்குவதோடு, தலை மேலும் கீழும் அசைவதற்கும், பக்கவாட்டில் அசைவதற்கும் உதவுகின்றன. இந்த ஏழு எலும்புகள் உராயாமலும், தேய்ந்துபோகாமலும் இருக்க, இவற்றுக்கு இடையே குருத்தெலும்புகள் உள்ளன.

மூளையுடன் தொடர்புடைய தண்டுவடம், கழுத்துப் பகுதியில் தொடங்குகிறது. இது, கழுத்து எலும்புகளுக்குப் பாதுகாப்பாக உள்ளது. தண்டுவடத்தில் இருந்து வெளிப்படும் நரம்புகள், கழுத்துப் பகுதியில் உள்ள தசைகளுக்கும், இரண்டு கைகளுக்கும் உணர்ச்சியூட்டுகின்றன. கழுத்து எலும்புகளின் இரு பகுதிகளிலும் வலுவான தசைகள் உள்ளன. இவற்றுக்கு இடையே நரம்புகளும் ரத்தக்குழாய்களும் ஊடுருவுகின்றன. இத்தகைய வலுவான கழுத்தை நம்முடைய அன்றாட செயல்கள் பாதிப்படையச் செய்கின்றன.

கழுத்து வலி என்பது, கழுத்துப் பகுதியைச் சார்ந்த நோயின் அறிகுறியே! இதற்கு பல காரணங்கள், வெவ்வேறு அறிகுறிகள் உள்ளன.

நீண்ட நேரம் கணினியில் வேலை செய்வது, அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, பாரமான பொருளைத் தூக்குவது, கனமான பள்ளிப் பைகளைச் சுமப்பது, மன அழுத்தம் போன்றவற்றால் கழுத்துவலி ஏற்படலாம்.

மருந்தில்லா மருத்துவம் - 17

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வலியின் அறிகுறிகள்:

கழுத்து வலி (Cervical spondylosis) என வருபவர்களுக்கு ஒரே மாதிரியான அறிகுறிகள் இருக்காது. சிலருக்குக் கழுத்து விறைப்பாக இருக்கும்; தலையை மேலே தூக்கிப் பார்த்தால் தலை சுற்றும்; கீழே பார்த்தால் கண்கள் இருட்டும்; பின்னந்தலை, தோள்பட்டை, கைகள் வலிக்கும் என்பர். ரெய்கி சிகிச்சையில், கழுத்து, தண்டுவடம், நரம்புகள், தசைகள் என பிரித்துப் பாராமல், கழுத்தை ஒரே பகுதியாகப் பார்க்கிறோம்.  ஏனெனில், மேற்கூறியவை ஒருங்கிணைந்து இயங்கினால்தான், கழுத்து ஆரோக்கியமாக இருக்கும்.

நடுத்தர வயதுப் பெண்மணி ஒருவர், ஐந்து வருடங்களாகக் கழுத்துவலி இருப்பதாக என்னிடம் வந்தார். இந்த வலி, கழுத்தை மட்டுமே பாதிக்காமல், தலையின் பின்பக்கமும் தோன்றியுள்ளது. இதை, `ஆக்ஸிபிட்டல் தலைவலி’ (Occipital headache) என்பார்கள். தலைசுற்றலும் இருந்தது. ஓர் இளைஞர், `கடுமையான கழுத்து வலியால் கழுத்தை அசைக்கவே முடியவில்லை’ என்றார்.

ரெய்கி சிகிச்சை கழுத்துப் பகுதி முற்றிலும், பின்–விஷுத்தி சக்கரத்தைச் சார்ந்தது. இந்தச் சக்கரத்தின் சுழற்சி பாதிப்பால், கழுத்தின் இயக்கம் பாதிக்கப்படுகிறது. தலை, பின்புறம், பின்–ஆக்ஞா சக்கரத்தின் இயக்கத்தைச் சார்ந்தது.  இந்த இரு சக்கரங்களுக்கும் பிரபஞ்ச சக்தி அளிப்பதன் மூலம் கழுத்து வலியைப் போக்கலாம்.

சுஜோக் அக்குபஞ்சர்

கட்டை விரலின் பின்பக்கம், கழுத்துப் பகுதியையும், நகத்தின் கீழ்ப்பகுதி, தலையின் பின்பகுதியையும் குறிக்கும். கட்டை விரலின் இந்த இரண்டு பகுதிகளுக்கும், அழுத்தமோ அக்குபஞ்சர் செய்தோ கழுத்துவலியை போக்கலாம். எலும்புகள் பாதிப்பால் ஏற்படும் கழுத்துவலிக்கு சிறுநீரக மெரிடியனிலும், தண்டுவடம், நரம்பு பாதிப்பிருந்தால் தண்டுவட மெரிடியனிலும், தசைகளில் கழுத்துவலி இருந்தால் கல்லீரல் மெரிடியனிலும் சுஜோக் அக்குபஞ்சர் செய்ய வேண்டும்.

பிறவிக் குறைபாடு

பொதுவாக, மார்புப் பகுதியில்தான், விலா எலும்புகள் இருக்கும். அபூர்வமாக, கழுத்தில் சி7 எனும் கடைசி எலும்பின் பக்கவாட்டில் ஒரு சிறு எலும்பு (Cervical rib) விலா எலும்புபோலக் காணப்படும். இது, கழுத்து அசைவுகளைப் பாதிக்கும். தாங்க முடியாத தலைவலி, தலைச்சுற்றல், கண்களில் பாதிப்பு, அதிகப்படியான வியர்வை, கைகளில் வலி எனப் பலவிதமான அறிகுறிகள் காணப்படும். இது, பிறவியிலேயே ஏற்படும்.

கழுத்து, தலை, கைகளின் இயக்கம், பின்–விஷுத்தி சக்கரத்தைச் சார்ந்தது. மேலும், குண்டலினி சக்திப் பாதையில் தடை ஏற்படுவதால், கழுத்தின் இயக்கமே வலியைக் கொடுக்கும். எனவே, குண்டலினி சக்தியைச் சார்ந்த மூலாதாரச் சக்கரத்துக்கும், பின்–விஷுத்தி சக்கரத்துக்கும், பின், முன் ஆக்ஞா சக்கரத்துக்கும் பிரபஞ்ச சக்தி அளித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால், சக்திப் பாதையில் உள்ள தடை நீங்கி, கழுத்து பூரண குணமடையும்.

இதனுடன், கல்லீரல், தண்டுவடம், சிறுநீரக மெரிடியனிலும் புள்ளிகளில் அக்குபஞ்சர் செய்ய வேண்டும். கட்டை விரலின் பின் பக்கத்தில், பாதிக்கப்பட்ட புள்ளிகளிலும் அக்குபங்சர் செய்ய வேண்டும். தொடர்ந்து நான்கு நாட்கள் சிகிச்சை அளிக்கையில், கழுத்துப் பாதிப்பு நீங்கும்.

- தொடரும்

கை வலிக்கு தீர்வு

கைகளில் தோன்றும் முக்கிய நோய்கள், விரல் வீக்கம், உணர்ச்சியின்மை, மணிக்கட்டு இயக்கம் பாதிப்பு (Carpal tunnel syndrome), `டென்னிஸ் எல்போ’ எனப்படும் முழங்கை வலி, `ஃப்ரோஸன் சோல்டர்’ (Frozen shoulder) எனப்படும் தோள்முட்டு இறுக்கம் போன்ற பாதிப்புகளுக்கும் ரெய்கி சிகிச்சை உள்ளது. இந்த பகுதிகள் எல்லாம் பின் – விஷுத்தி சக்கரத்தைச் சார்ந்தது. இதற்கு, பிரபஞ்ச சக்தி அளிக்க வேண்டும். மேலும், சுஜோக் அக்குபஞ்சரில், கழுத்தைக் குறிக்கும் கட்டை விரலின் பின்பகுதிக்கும், ஆள்காட்டி விரலில், கைகளின் எந்தப் பக்கம் பாதிக்கப்பட்டு உள்ளது என்பதை அறிந்து, அந்தப் பகுதிக்கு அக்குபஞ்சர் செய்யவதன் மூலம் நிவாரணம் பெறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism