Published:Updated:

மருந்தில்லா மருத்துவம் - 18

மருந்தில்லா மருத்துவம் - 18
பிரீமியம் ஸ்டோரி
மருந்தில்லா மருத்துவம் - 18

இரைப்பையும், இரைப்பை வியாதிகளும்!

மருந்தில்லா மருத்துவம் - 18

இரைப்பையும், இரைப்பை வியாதிகளும்!

Published:Updated:
மருந்தில்லா மருத்துவம் - 18
பிரீமியம் ஸ்டோரி
மருந்தில்லா மருத்துவம் - 18
மருந்தில்லா மருத்துவம் - 18

ஜீரண மண்டலத்தில், உணவைச் செரிமானம் செய்யும் முக்கிய உறுப்பு, இரைப்பை. இது, வயிற்றின் மேல் பாகத்தில் இடதுபுறமாக அமைந்துள்ளது. தற்போது, இரைப்பை சம்பந்தப்பட்ட வியாதிகள் பரவலாக ஏற்படுகின்றன.

இரைப்பை, உணவைச் செரிமானம் செய்யும். இந்த உறுப்பு ஒரு பை வடிவில் இருப்பதால், இதை ‘இரைப்பை’ என்கிறோம். நீர், உணவு இவற்றை உட்கொள்ளும்போது, நேராக அவை உணவுக்குழாய் மூலம் இரைப்பையை அடைகின்றன. இந்த இரண்டு உறுப்புகள் சேருமிடத்தில் ‘ஸ்பிங்ட்டர்’ (Sphincter) என்கிற வால்வு உள்ளது. இது உணவு, நீர் ஆகியவை இரைப்பையை அடையும்போது மட்டுமே திறக்கும். மற்ற நேரங்களில், மூடியே இருக்கும். இரைப்பை வலுவான தசைகளால் ஆனது. இதன் உள்பாகம் மென்மையான சுரப்பிகளைக் கொண்டது. செரிமானத்துக்குத் தேவையான என்சைம் மற்றும் ஹைட்ரோகுளோரிக்  அமிலத்தை இதன் செல்கள் சுரக்கின்றன. இவை எல்லாம் ஒருங்கிணைந்து தம் பணியைச் செய்தால், இரைப்பைக்கு எந்தவிதப் பாதிப்பும் இருக்காது.

இரைப்பையின் இயக்கம், அதன் பணி எல்லாம் மணிப்பூரகச் சக்கரத்தின் இயக்கத்தைச் சார்ந்தது. மணிப்பூரகச் சக்கரம் பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பைச் சார்ந்தது. சமைத்த உணவை உண்டாலும், மணிப்பூரகச்  சக்கரத்தைச் சார்ந்த நெருப்பின் உதவியால் உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கிறது.

அக்குபஞ்சர் தத்துவப்படி, ஜீரண மண்டலத்தில் முக்கிய உறுப்பான இரைப்பையில், காலை 7-9 மணி அளவில் செரிமானத்துக்குத் தேவையான ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் என்சைம்கள் சுரக்கின்றன. இரைப்பை சரிவர தன் பணியைச் செய்ய, மேற்கூறியவை ஒருங்கிணைந்து இயங்க வேண்டும்.

மருந்தில்லா மருத்துவம் - 18

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காலை 7- 9 மணியில் இரைப்பையை அடையும் உணவு, எளிதில் ஜீரணமாகும் சத்துள்ள திடப்பொருளாக இருக்க வேண்டும். இந்த உணவு இரண்டு மணி நேரம் இரைப்பையில் தங்கி, கூழாக்கப்பட்டு சிறுகுடலுக்குச் செல்லும். இந்த நேரத்தில் காலை உணவை தவிர்த்தால், இரைப்பை பாதிக்கும்.

சில மாதங்களுக்கு முன்பு, தலைவலியால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் அவதிப்படுவதாக, சிறுமி ஒருத்தியை அவளது பெற்றோர் என்னிடம் அழைத்து வந்தனர். விசாரித்தபோது, காலையில் பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் பால், செயற்கை ஊட்டச்சத்துப் பானம் போன்ற திரவ உணவுகளை மட்டுமே அந்தச் சிறுமி சாப்பிட்டு வந்திருக்கிறாள் என்பது தெரிய வந்தது. திரவப் பொருள் அரை மணி நேரத்துக்கு மேல் இரைப்பையில் தங்காது. இதைச் செரிமானம் செய்த பின், எஞ்சிய அமிலம் வயிற்றுப் புண்ணை உண்டாக்கியிருந்தது. இதன் அறிகுறியாகத்தான் அந்தப் பெண்ணுக்குத் தலைவலி உண்டாகியிருக்கிறது.

குடும்பத் தலைவிகள், அலுவலகம் செல்பவர்கள், இரவுப் பணியாளர்கள் ஆகியோர் காலை உணவைத் தவிர்த்துவிடுவார்கள். இவர்கள் அனைவருக்கும்  இரைப்பை, தன் வேலையைத் தீவிரமாகச் செய்யும் நேரத்தில், அது காலியாக இருப்பதால், அங்கு சுரக்கும்  உணவைச் செரிக்க வேண்டிய அமிலம் இரைப்பையின் உள்படலத்தை அரிக்கத் துவங்கும். இது முதலில் எரிச்சலை உண்டாக்கும். பிறகு, அசிடிட்டி, இரைப்பைப் புண் (Gastritis) போன்ற பிரச்னைகள் ஏற்படும். நாளடைவில் இது அல்சராக மாற வாய்ப்பு உள்ளது.

இரைப்பையின்  உள்படலத்தை அரிக்கும் அமிலம், ஸ்பிங்ட்டரை வலுவிழக்கச் செய்யும். இதனால், அமிலம், வலுவிழந்த ஸ்பிங்ட்டர் வால்வு மூலம் மேல் நோக்கிச் சென்று, உணவுக் குழலில் புண் உண்டாக்கும். இதை, ஆசிட் ரிஃப்ளக்ஸ் (Acid reflux) என்பர். நாளடைவில் இது தொண்டைப் பகுதியில் புண்ணை உண்டாக்கும். வறட்டு இருமல் மட்டுமே ஒரு சிலருக்கு இருக்கும். தொண்டையில் இருந்து யுஸ்தஷியன் குழாய் (Eustachian tube) வழியாக, நடுக்காதை அடைந்து, தலைவலியை உண்டாக்கும். இதுபோன்ற அறிகுறிகளை ‘கேஸ்ட்ரோ ஈஸோஃபாகல் ரிஃப்ளக்ஸ் டிஸ்ஆர்டர் (Gastroesophageal Reflux Disorder (GERD))’ என்று கூறுவர்.

இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் நம் வாழ்க்கைமுறையில் ஏற்பட்ட மாற்றங்களே காரணம். எதற்கெடுத்தாலும்  கோபம், எரிச்சல், மனஉளைச்சல் போன்ற மனதைச் சார்ந்த விஷயங்கள்கூட இரைப்பையில் அமிலத்தை அதிகமாகச் சுரக்கச் செய்யும். நம் நடைமுறைப் பழக்கங்களை மாற்றியதாலும், ஜங்க் ஃபுட் சாப்பிடுவதாலும் இரைப்பையைச் சார்ந்த நோய்கள்தான் அதிகம் உண்டாகின்றன. ஆகையால், உணவைச் சரியான நேரத்தில் சாப்பிட்டு, மனதைக் கட்டுப்படுத்தத் தியானம் செய்து, உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதால், பூரண ஆரோக்கியத்தை  அரவணைக்க முடியும்.

- தொடரும்

படம்: சொ.பாலசுப்ரமணியன்

ரெய்கி சிகிச்சை

இரைப்பை மணிப்பூரகச் சக்கரத்துக்கு உட்பட்டது. உணவுக்குழல் அனாஹதச் சக்கரத்தைச் சார்ந்தது. தொண்டை விஷுத்திச் சக்கரத்தைச் சார்ந்தது. காது ஆக்ஞா சக்கரத்தைச் சார்ந்தது. ரெய்கி சிகிச்சையில் பிரபஞ்ச சக்தியை, இந்த நான்கு சக்கரங்களுக்கும் அளித்தால், பூரண நிவாரணம் கிட்டும்.

சுஜோக் அக்குபஞ்சர் சிகிச்சை


 வயிற்றுப் புண், செரிமான மண்டலத்தில் ஏற்படக்கூடிய புற்றுநோய்க்கு நடு விரலில் உள்ள இரைப்பை மெரிடியன் புள்ளிகளில் அக்குபஞ்சர் செய்ய வேண்டும். உள்ளங்கையில், இரைப்பையைக் குறிக்கும் பகுதிக்கும், தொண்டையைக் குறிக்கும் பகுதிக்கும், நடுக்காதுப் பகுதிக்கும் அழுத்தம் கொடுத்து சிகிச்சை அளிக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism