Published:Updated:

மருந்தில்லா மருத்துவம் - 19

மருந்தில்லா மருத்துவம் - 19
பிரீமியம் ஸ்டோரி
மருந்தில்லா மருத்துவம் - 19

சுவாசப் பிரச்னைகள்

மருந்தில்லா மருத்துவம் - 19

சுவாசப் பிரச்னைகள்

Published:Updated:
மருந்தில்லா மருத்துவம் - 19
பிரீமியம் ஸ்டோரி
மருந்தில்லா மருத்துவம் - 19
மருந்தில்லா மருத்துவம் - 19

ந்தக் காலத்தில் நாம் சுவாசிக்கும் காற்று சுத்தமாக இல்லை என்பது யாவரும் அறிந்தது. நுண்கிருமிகள், ரசாயனம் மகரந்தத் தூள் (Pollen), புகை போன்றவை காற்றில் கலந்து, மூக்கின் வழியாக உள்ளே செல்கின்றன. மாசுப்படிந்த மற்றும் கிருமிகள் உள்ள காற்று, மூக்கை அடைந்து நேராக நுரையீரலை அடைவது இல்லை. ஏனெனில், இயற்கையில் மூக்கு இவற்றை எதிர்கொள்ளும் ஒரு அரணாக உள்ளது. மூக்கில் உள்ள ரோமங்கள் காற்றில் உள்ள மாசுக்களை வடிகட்டும். மூக்கின் உள்படலத்தில் உள்ள செல்கள், நோய்க் கிருமிகளை அறிந்து, அதை எதிர்கொள்ள, ஆன்டிபாடியை (Antibody) உற்பத்திசெய்யும்.  மேலும், பிளாஸ்மா செல்களையும் உருவாக்குகின்றன. இவை கிருமிகளை எதிர்த்து, சுவாச உறுப்புகளைக் பாதுகாக்கும். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தால், மூக்கில் உள்ள இந்த செல்கள் வலிமையை இழக்கும். இதனால், நாசியில் நோய் ஏற்படுகிறது.

நோயின் அறிகுறிகள்: மூக்கில் ஏற்படும் பாதிப்பைப் பொறுத்து அறிகுறிகள் மாறுபடும். அடிக்கடி ஜலதோஷம், மூக்கடைப்பு, மூக்கில் நீர் வழிதல், மூக்கில் எரிச்சல், தலைவலி, மூச்சுத் திணறல், சிலருக்குக் காய்ச்சல் வரும். நாட்பட்ட மூக்கடைப்பு, கண்களுக்குக் கீழேயும் நெற்றியிலும் சைனஸைட்டிஸ் (Sinusitis) ஏற்படும். கண்களுக்கு கீழே உள்ள பகுதி வீங்கும், தலைக்குக் குளித்தால் நோயின் தீவிரம் அதிகமாவது போன்ற அறிகுறிகள் தோன்றும். சைனஸ் பிரச்னை ஏற்பட்டால், அதன் விளைவாக நடுக்காதிலும் நோய் பரவி, காதுவலி அல்லது தலைவலி தோன்றும். இதை ஆட்டைட்டிஸ் மீடியா (Otitis media) என்பார்கள்.

மருந்தில்லா மருத்துவம் - 19

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிலருக்கு சில உணவுப்பொருட்கள், காற்றில் உள்ள தூசு, குளிர்பானங்கள், சில மருந்துகள் ஒத்துக்கொள்ளாது. உடலின் எதிர்ப்புச் சக்தி குறைவதால் தோன்றும் அலர்ஜி இது. பலவீனமாக இருப்பதால் சளி, இருமல், உடலில் நோய்க்கிருமி தொற்று ஏற்படும்போது, மண்ணீரலில் உள்ள லிம்போஸைட் எனும் செல்கள் உருவாகி, பாதிக்கப்பட்ட உறுப்புக்குச் சென்று நோய் கிருமிகளை எதிர்த்து, ஆன்டிபாடியை உற்பத்தி செய்து நோய்க் கிருமிகளை அழிக்கிறது. மண்ணீரல் பலவீனமாகும்போது இந்தச் செயல் பாதிக்கப்படுகிறது. இதனால், மூக்கு வழியே நோய்க்கிருமி நுழையும்போது அதை எதிர்க்கும் ஆற்றல் இல்லாமல் போய்விடுகிறது.

நடுத்தர வயதுள்ள ஒருவர் தனக்கு, சைனஸைடிஸ் பல வருடங்களாக இருப்பதாகவும், குளிர்ச்சியான தண்ணீர் குடித்தாலே நோயின் அறிகுறிகள் தீவரமடைந்ததாகவும் காது வலியும் வருகிறதென்றும் வந்தார்.

விசாரித்தபோது, இவருக்கு சிறுவயதிலேயே டான்சில்ஸ் அறுவைசிகிச்சை நடந்ததைத் தெரிவித்தார். இதுதான் இவரின் நோய்க்கு மூல காரணம். டான்சில்ஸ் எனும் நோய் எதிர்ப்புச் சக்தி அளிக்கும் உறுப்பு, நம்மை எந்தவித நோயில் இருந்தும் பாதுகாக்கும். சிறு வயதிலேயே டான்சில்ஸை நீக்கிவிட்டதால், சுவாச உறுப்புகள் பலவீனமாகி அடிக்கடி நோய்வாய்ப்பட்டார். இத்தகைய சுவாச உறுப்புகளைச் சார்ந்த நோய்களுக்கு ரெய்கி, சுஜோக் முறைகளில் பூரண குணமடைய வாய்ப்புள்ளது.

- தொடரும்

படம்: சொ.பாலசுப்ரமணியன்

ரெய்கி சிகிச்சை

மூக்கு, சைனஸ், காது – இவை ஆக்ஞா சக்கரத்தைச் சார்ந்தவை. இந்த உறுப்புகள் எந்தவித பாதிப்புக்குள்ளானாலும், ஆக்ஞா சக்கரத்துக்குப் பிரபஞ்ச சக்தி அளிக்க வேண்டும். இதனால், நோயின் அறிகுறி மட்டுமல்லாமல் நோயின் மூலகாரணமும் நீக்கப்படுகிறது. இவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க, மணிப்பூரகச் சக்கரத்தைப் பலப்படுத்த வேண்டும். இதனால், மண்ணீரல் பலப்படுத்தப்பட்டு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகும்.

சுஜோக் சிகிச்சை

கட்டை விரலில் மூக்கைக் குறிக்கும் பாகத்தில் அழுத்தம் கொடுத்தால், நோயின் அறிகுறிகள் நீங்கும். நோய் எதிர்ப்பு மெரிடியனில் அக்குபஞ்சர் செய்து, நோயின் எதிர்ப்புச் சக்தியைப் பலப்படுத்தி, நோயை அறவே போக்கலாம்.

சுவாச உறுப்புகளைப் பாதுகாக்க…

மூக்கின்  வழியாகப் பிராண வாயு தடையின்றிச் செல்ல, அதன் வேலைத்திறனை அதிகரிக்க வேண்டும். அக்குபஞ்சர் மருத்துவ தத்துவத்தின்படி, சுவாச உறுப்புகள் விடியற்காலை மூன்று மணி முதல் ஐந்து மணி வரை தீவிரமாக வேலைசெய்யும். இதைப் பிரம்ம முகூர்த்தம் என்பார்கள். இந்த நேரத்துக்குள் பிராணாயாமம் செய்ய வேண்டும். சுவாச உறுப்புகள் நன்கு இயங்கினால், இதயமும் பலப்படும். இதனால் நாம் ஆரோக்கியமாக வாழலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism