Published:Updated:

மருந்தில்லா மருத்துவம் - 21

மருந்தில்லா மருத்துவம் - 21
பிரீமியம் ஸ்டோரி
மருந்தில்லா மருத்துவம் - 21

கர்ப்பக்காலம்

மருந்தில்லா மருத்துவம் - 21

கர்ப்பக்காலம்

Published:Updated:
மருந்தில்லா மருத்துவம் - 21
பிரீமியம் ஸ்டோரி
மருந்தில்லா மருத்துவம் - 21
மருந்தில்லா மருத்துவம் - 21

ருவில் சுமக்கும் குழந்தை மிகவும் ஆரோக்கியமாக, சுகப்பிரசவமாக பிறக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு தாயும் விரும்பவாள்.  ஆனால், சில குழந்தைகள் பிறவிக் குறைபாட்டுடன் பிறக்கின்றன. இது ஏன் ஏற்படுகிறது? இதற்குத் தீர்வு உண்டா? இதற்கான விடையைக் கண்டுபிடிக்க தாயின் கர்ப்பக் காலத்தைப் பார்க்க வேண்டும்.

கருவுற்ற தாய், சிசுவை கர்ப்பப்பையில் சுமக்கிறாள். இந்தக் காலகட்டத்தில் தாய் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மனநிலையில் இருக்க வேண்டும். ஆரோக்கியம் குறைந்து, மருந்து மாத்திரைகள் சாப்பிடும்போது, கர்ப்பப்பை சில நேரங்களில் வலுவிழக்கிறது. இது, கர்ப்பப்பையில் இருக்கும் சிசுவின் ரத்தத்தில் சேர்ந்து, குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.

இ்ந்தக் காலத்தில் பிறக்கப்போகும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா என்று பரிசோதனை செய்துகொள்கிறார்கள். பயத்துடனே கருவைச் சுமக்கிறார்கள். இந்த பயமே கர்ப்பப்பை பலவீனமாகக் காரணமாகிறது. வீட்டுச் சண்டை களில், தாயின் மனது பாதிக்கப்படுகிறது. தாயின் மனநிலை கருவையும் பாதிக்கும். குழந்தையின் உயிருக்கு எப்படி தாயின் ரத்தத்தில் இருக்கும் ஊட்டச்சத்து உதவுகிறதோ, அதேபோல் தாயின் மனநிலை சிசுவின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால்தான், கர்ப்பிணிகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லியுள்ளனர்.

தாய்க்கும் சிசுவுக்குமான இந்தத் தொடர்பை புரிந்துகொள்ள, நாம் உடலை நன்கு அறிய வேண்டும். குழந்தையானாலும் பெரியவராயினும் உடலின் ஆராவில் ஏழு சக்கரங்கள் உள்ளன. தாயின் வயிற்றில் இருக்கும்போதே, இந்த ஏழு சக்கரங்கள் மலரின் மொட்டு போன்று தோன்றுகின்றன. ஆனால், இவை யாவும் கர்ப்பப்பைக்கு உள்ளிருக்கும்போதே மலர்வது இல்லை. உயிருக்கு ஆதாரமான மூலாதாரச் சக்கரம் மட்டுமே, கருவின் ஏழாவது மாதத்தில் மலரத் தொடங்குகிறது. இதுதான் குழந்தை உயிருடன் பிறப்பதற்குக் காரணம். இந்தப் பருவத்தில் ஐம்புலன்களில் ஒன்றான செவி வேலைசெய்யத் தொடங்குகிறது. தாயின் கர்ப்பப் பையில் வளரும் சிசுவால், தாயின் வேதனையை அறிய முடியும்.

மருந்தில்லா மருத்துவம் - 21

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொதுவாக, மூன்று வயதுக்குள் குழந்தைக்கு ஏதேனும் உடல்நலக் குறைபாடு இருக்கிறது என்று என்னிடம் வரும் பெண்களிடம், அவர்கள் கர்ப்பக் காலம் எப்படி இருந்தது என்றுதான் முதலில் விசாரிப்பேன்.

ஒரு தாய், தன் ஒரு வயது குழந்தைக்குக் காது கேட்கவில்லை என்று என்னை அணுகினார். இவர் கருவுற்றிருக்கும்போது, கணவனை ஒரு விபத்தில் திடீரென இழந்ததால், அது தன்னை மனரீதியாகப் பாதித்தாகச் சொன்னார். இதனால், கர்ப்பப்பையில் உள்ள சிசுவின் மூலாதாரச் சக்கரத்தின் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டதால், குழந்தையின் செவித்திறன் பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், குழந்தை பிறந்தபோது, ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டிருந்தது.

இன்னொரு குழந்தை பேசும் திறனிருந்தும், பேசும்போதே ஒருவித பயத்துடன் பேசினான். இந்தத் தாய் பிரசவித்திருக்க வேண்டிய காலம், சித்திரை மாதம். ஆனால், இவர் மாமியார், ‘குழந்தை சித்திரையில் பிறந்தால், உன் கணவன் இறந்துவிடுவான்’ என்று பயமுறுத்தி இருக்கிறார். இந்நிலையில், இந்தத் தாய்க்கு குழந்தை ஒரு மாதம் முன்பே பிறந்துவிட்டது. தாயின் பயம், சேயையும் பாதிக்கவே, ஒருவிதத் தயக்கம், பயத்துடனேயே குழந்தை வளர்ந்திருக்கிறது.

இந்தக் குழந்தைகள் எல்லோருக்கும் பிறவிக் குறைபாடு உள்ளது. இந்தக் குறைபாட்டின் வெளிப் பாடுகள், அறிகுறிகள் வெவ்வேறு விதங்களில் இருக்கின்றன. ஆனால், மூலக்காரணம் ஒன்றுதான். கர்ப்பக் காலத்தில் தாயின் சூழ்நிலை, மனநிலை, ஆரோக்கியம் மாறுபடும்போது குழந்தையின் மூலாதாரச் சக்கரத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. மூலாதாரச் சக்கரம் மலர்வதற்கு மூலக்காரணம் குண்டலினி சக்தி. இது, சிசு வளர்வதற்கு  வேண்டிய சக்தியை அளிக்கவல்லது. கர்ப்பப்பையில் சிசுவுக்கு ஆரோக்கியமற்ற சூழ்நிலை ஏற்படுவதால், மூலாதாரச் சக்கரம் மலர்வது தடைப்படுகிறது. இந்தத் தடை, மூளையின் வளர்ச்சியைப் பாதிக்கிறது. குண்டலினி சக்திப் பாதைத் தடைப்படுவதால்  மூளை வளர்ச்சி பாதிக்கப்படும். இதனால், பிறவியிலேயே குறைபாட்டுடன் குழந்தைகள் பிறக்கின்றன.

இந்தக் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது, மூலாதாரச் சக்கரத்துக்கு சக்தி அளிக்க வேண்டும். பிறகு, மற்ற பின்புறச் சக்கரங்களுக்கும் சக்தி அளித்தால், குண்டலினி சக்திப் பாதையின் தடை நீங்கி, குழந்தையின் பாதிப்பு நீங்கும். சிகிச்சை தொடங்குவதற்கு முன்பு, தாயின் பயத்தைப் போக்க அவருக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும்.

- தொடரும்

குழந்தையின் ஆரோக்கியம் பெருக...

தற்போது, குறைப்பிரசவம் அல்லது மஞ்சள்காமாலை என்று பிறந்த குழந்தையை, இன்குபேட்டரில் வளர்க்கிறார்கள். குழந்தை பிறந்ததும் தாய்ப்பால் புகட்ட வேண்டும். தாயின் அரவணைப்புடன் குழந்தை தாய்ப்பால் அருந்த வேண்டும்.

தாய்ப்பால், தாயின் ரத்தத்தில் உள்ள இம்யூனோகுளோபுலின் (Immunoglobulin) எனும் நோய் எதிர்ப்புச் சக்தியை கொடுக்க வல்லது. இதைத் தவிர்த்தால், குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்திக் குறையும். குழந்தை முழு வளர்ச்சியுடனும் ஆரோக்கியமாகவும் பிறப்பது தாயின் பொறுப்பு.
மகப்பேறு, ஒரு மகிழ்ச்சிகரமான பருவம். தேவையற்ற பயத்துடனோ உடல் நலிவுடனோ இருந்தால், அது சிசுவின் வளர்ச்சியைப் பாதிக்கும். தாயும் சேயும் நலமாக இருந்தால், ஆரோக்கியமான சமுதாயம் உருவாகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism