Published:Updated:

மருந்தில்லா மருத்துவம் - 22

மருந்தில்லா மருத்துவம் - 22
பிரீமியம் ஸ்டோரி
மருந்தில்லா மருத்துவம் - 22

மருந்தில்லா மருத்துவம் - 22

மருந்தில்லா மருத்துவம் - 22

மருந்தில்லா மருத்துவம் - 22

Published:Updated:
மருந்தில்லா மருத்துவம் - 22
பிரீமியம் ஸ்டோரி
மருந்தில்லா மருத்துவம் - 22
மருந்தில்லா மருத்துவம் - 22

லைவலி என்பது மருத்துவர்களுக்கே தலைவலி கொடுக்கும் ஓரு பிரச்னை. ஏனெனில், தலைவலி ஏன் வருகிறது என்று கண்டுபிடிப்பதே ஒரு தலைவலியான விஷயம்தான். தலைவலி என்பது வியாதி அல்ல, அது ஓர் அறிகுறியே! அதனால், காரணத்தைக் கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பதுதான் மருந்தில்லா மருத்துவத்தின் வழிமுறை.

சிறுவர்களுக்குப் பசி மற்றும் வெயிலால், வற்புறுத்தலால் தனக்குப் பிடிக்காதவற்றை செய்ய நேரிடும்போது, கோபம் வரும்போது, சைனஸ் பிரச்னை போன்ற வெவ்வேறு காரணங்களால் தலைவலி ஏற்படும்.

கழுத்து வலி ஏற்படுவதால் கூட தலையின் பின்புறத்தில் வலி ஏற்படலாம். உயர் ரத்த அழுத்தம், மூளையில் கட்டி, வயிற்றுப் புண், வயிற்றில் சுரக்கும் அமிலம் உணவுக்குழாய்க்கு வந்து நடுக் காதை அடைவது போன்றவற்றால் தலைவலி வரலாம். மாதவிடாய் காலத்தின்போதோ, அதற்கு முன்னரோ ஹார்மோன் சுரப்பிகளின் குறைபாடுகளால் தலைவலி ஏற்படும். கணினி, தொலைக்காட்சி போன்றவற்றில் அதிக நேரம் செலவிடுவதாலும், அதிக ஒலி செவிப்பறையைத் தாக்குவதாலும் தலைவலி ஏற்படலாம்.

25 வயது இளைஞர், இரண்டு வருடங்களாக, தலையின் இடது பக்கம் மட்டுமே தாங்க முடியாத வலியால் அவதிப்பட்டிருந்தார். எத்தனையோ பரிசோதனைகளைச் செய்தும், காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எந்த மருந்தும் வேலை செய்யவில்லை. இவர், இரவு முழுக்க வேலை செய்து, காலை 3 மணிக்குத் தூங்கி, 11 மணிக்கு எழுந்து சாப்பிடுவார். இவர் காலையில் நன்றாகத் தூங்கும்போது, காலை 7 மணி முதல் 9 வரை வேலை செய்து  இரைப்பையில் அமிலம் நன்கு சுரந்திருக்கிறது. இதனால் வயிற்றில் புண் தோன்றி, அமிலம் உணவுக்குழாய்க்குச் சென்று நடுக்காதை அடைந்திருக்கிறது. காலை உணவை தவிர்த்ததால், இது நேர்ந்திருந்தது. இது எதுவும் வெளியே தெரியவில்லை. ஆனால், தலைவலிக்கு சிகிச்சை எடுத்திருக்கிறார்.

மருந்தில்லா மருத்துவம் - 22

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நான் அவருக்கு சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன்பு, அவருடைய வாழ்க்கைமுறை, வேலை பற்றி எல்லாம் பேசும்போது இதைச் சொன்னார். உடனே, அமில சுரப்பால் வந்த பிரச்னையாக இருக்கும் என்று உறுதிசெய்து சிகிச்சையை திட்டமிட்டேன். அவருக்கு, ரெய்கி சிகிச்சை முறையில், வயிற்றுப் புண்ணுக்கு ஆக்ஞா, மணிப்பூரக சக்கரங்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், இரவு சரியான நேரத்துக்குத் தூங்க வேண்டும். காலை உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்கக் கூடாது. காலை 9 மணிக்குள் உணவு உட்கொள்ள வேண்டும் என்று சொல்லி அனுப்பினேன்.

மேலும், சுஜோக் சிகிச்சையில், நடுவிரலில் அமைந்திருக்கும் இரைப்பை மெரிடியனில் புள்ளியைத் தேர்ந்தெடுத்து, சிகிச்சை அளித்தேன். ஒரு சில நாட்களில் அவரது தலைவலி கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்தது. ‘அதன் பிறகு, தலைவலி பிரச்னையே வரவில்லை’ என்று என்னிடம் சொன்னார்.

அதேபோல், நடுத்தர வயதுடைய ஒருவர், தாங்க முடியாத தலைவலியால் அவதியுற்றிருந்தார். தொழிலில் திடீரெனப் பல கோடி ரூபாய் நஷ்டம் அடைந்ததால், மீள முடியாத மன அதிர்ச்சியைத் தலைவலியாக அனுபவித்தார். இவருக்கு மனத்தை அமைதிப்படுத்தவும் மன உளைச்சலால் வந்த தலைவலியை நீக்கவும் ஆக்ஞா சக்கரத்துக்கு ரெய்கி சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்படியான சிலர் தற்கொலைக்கும் முயற்சிப்பார்கள். ஆகவே, உயிர் வாழ்வதற்கும், மன தைரியத்துக்கும் மூலாதார சக்கரத்துக்கு ரெய்கி சிகிச்சை அளிக்க வேண்டும்.

சிலருக்குக் கழுத்துவலியுடன் கூடவே தலையின் பின்பக்கமும் வலி இருக்கும் (Occipital Headache). இதற்கு விஷுத்தி சக்கரத்துக்கும் பின் ஆக்ஞா சக்கரத்துக்கும் ரெய்கி சிகிச்சை அளிக்க வேண்டும். சில பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் தோன்றும் தலைவலி, ஹார்மோன் சுரப்பிகளின் இடையூறுகளால் வரும். எல்லா ஹார்மோன் சுரப்பிகளையும் சமநிலையில் கொண்டு வர, ஆக்ஞா சக்கரத்தின் சுழற்சியை சமநிலைக்குக் கொண்டுவர வேண்டும்.

சினைப்பையில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் அளவை சமநிலைக்குக் கொண்டு வர, ஸ்வாதிஷ்டான சக்கரத்துக்கும் மூலாதாரச் சக்கரத்துக்கும் தொடர்ந்து ரெய்கி சிகிச்சை அளித்து பூரண நிவாரணம் அளிக்கலாம். இதனால், ஹார்மோன் சமநிலை அடைவதால், நோயின் மூலகாரணம் நீக்கப்பட்டு, நோயின் அறிகுறியான தலைவலியும் நீங்கும்.

சுஜோக் சிகிச்சையில் பிட்யூட்டரி சுரப்பியைக் குறிக்கும் கட்டை விரலின் நுனிப்பகுதியிலும், கர்ப்பப்பையைக் குறிக்கும் உள்ளங்கையின் கீழ்ப்பகுதியிலும் அழுத்தம் கொடுத்து, அக்குபிரஷர் சிகிச்சை அளிக்கலாம்.

- தொடரும்

பிரேக் ஃபாஸ்ட் ரொம்ப முக்கியம்!

பள்ளிக்குச் செல்லும் ஒரு சிறுவன், தாங்க முடியாத தலைவலியால் அவதிப்பட்டான். இதற்கான காரணத்தை அறிய, அவன் பெற்றோரிடம் கேட்டபோது, அந்தச் சிறுவன் காலை 6 மணிக்கு எழுந்ததும், பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் பிரேக்ஃபாஸ்ட் தவிர்த்ததால், வயிற்றுப் புண் ஏற்பட்டு, தலைவலியை உண்டாக்கியிருக்கிறது. அந்தச் சிறுவனின் பெற்றோருக்கு, குழந்தைகளுக்கான காலை உணவின் அவசியத்தைக் கூறி, சிறுவனின் தலைவலிக்கு ஆக்ஞா சக்கரத்துக்கும், வயிற்றுக்கு மணிப்பூரக சக்கரத்துக்கும் ரெய்கி சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிறுவர்களின் மூளையும் உடலும் சக்தியுடன் வேலைசெய்ய உணவுதான் முக்கியம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கான உணவை உரிய நேரத்தில் கொடுத்துச் சாப்பிடச் சொல்லிப் பழக்கப்படுத்தினால், அவர்கள் ஆரோக்கியமாக வாழ்வார்கள்.