Published:Updated:

மலச்சிக்கல், மஞ்சள்காமாலை, காய்ச்சல்... மருந்தாகும் துரியன் பழம்! #DurianFruitBenefits

இதன் சதைப்பகுதி மஞ்சள்காமாலை நோயால் அவதிப்படுபவர்களுக்குச் சிறந்த தீர்வைத் தரும். துரியன் பழத்தின் வேர்கள் நகம் தொடர்பான பிரச்னைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கின்றன. இதிலுள்ள மாங்கனீஸ் சத்து சீரான ரத்த ஓட்டத்தைப் பராமரிக்க உதவும்.

மலச்சிக்கல், மஞ்சள்காமாலை, காய்ச்சல்... மருந்தாகும் துரியன் பழம்! #DurianFruitBenefits
மலச்சிக்கல், மஞ்சள்காமாலை, காய்ச்சல்... மருந்தாகும் துரியன் பழம்! #DurianFruitBenefits

``துரியன் பழத்தை குழந்தை பாக்கியம் தரும் புனிதப்பழம் என்று சொல்வார்கள். இது கொஞ்சம் அதிகப்படியான புகழ்ச்சி வார்த்தை என்றாலும், உண்மையில் துரியன் பழம் அதிக மருத்துவத்தன்மைகொண்டது. இந்தப் பழத்தில் ஒருவித வெறுக்கத்தக்க நாற்றம் அடித்தாலும், ஒரு சுளையைச் சாப்பிடத் தொடங்கியதும் முழுப் பழத்தையும் சாப்பிட வேண்டும் என்ற ஆசையைத் தூண்டிவிடும். அந்த அளவுக்குச் சுவையானது துரியன் பழம்’’ என்கிறார் இயற்கை மருத்துவர் எட்வர்டு பெரியநாயகம். அதோடு, இது குறித்த அற்புதமான தகவல்களையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

```முள்நாறி’, `டுரியான்’, `டுரேன்’... எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் இந்தப் பழம் ஒரு பருவகாலப் பழம். (`டுரி’ என்றால் முள் என்று

பொருள்). மழைக்காலங்களில் மட்டுமே கிடைக்கும் இந்தப் பழம் தென்கிழக்கு ஆசியாவைப் பிறப்பிடமாகக்கொண்டது. இதன் மேற்பரப்பு பச்சை, பழுப்பு நிறம் கலந்த ஒரு கலவையாக இருக்கும். பழத்தின் சுளைகள் பெரும்பாலும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இளஞ்சிவப்பு மற்றும் நீல நிறத்திலும் சுளைகள் அரிதாகக் கிடைப்பதுண்டு. சராசரியாக 30 செ.மீ நீளமும் 15 செ.மீ சுற்றளவும்கொண்ட துரியன் பழம், ஒன்று முதல் மூன்று கிலோ எடையுள்ளது. 

மலேசிய மக்கள் இந்தப் பழத்தை விரும்பிச் சாப்பிடுகிறார்கள். இதனால் அந்த நாட்டு மக்கள் இந்தப் பழத்தை `பழங்களின் அரசன்' என்று அழைக்கிறார்கள். மலேஷியா தவிர சிங்கப்பூர், தாய்லாந்து, சீனா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் இதை விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.

துரியன் பழத்தில் கால்சியம், மாங்கனீஸ், கரோட்டின், கொழுப்பு, இரும்பு, கார்போஹைட்ரேட், தாமிரம், ஃபோலிக் ஆசிட், வைட்டமின் சி, நார்ச்சத்து, துத்தநாகம், நியாசின், புரதம், பாஸ்பரஸ், மக்னீசியம்... என நிறைய சத்துகள் இருக்கின்றன. சிலருக்கு இந்தப் பழம் அலர்ஜியை ஏற்படுத்தும் என்பதால், அதன் வாடையை `நாற்றம்’ என்பார்கள். சிலர் அதை `வாசனை’ என்பார்கள். ஆனால், இந்தப் பழத்தை ஒருவர் சாப்பிட்டால் நீண்ட தூரத்திலிருப்பவராலும் உணர்ந்துகொள்ள முடியும்; அந்த அளவுக்கு வாசனை வீசும். 

ஒரு முழு துரியன் பழத்தையும் ஒருவரால் சாப்பிட முடியாது. அதிகமாகச் சாப்பிட்டால் உடல் சூட்டை அதிகரித்து, அதிக வியர்வையை ஏற்படுத்திவிடும். ஒருவேளை அதிகமாகச் சாப்பிட்டுவிட்டால், நிறைய தண்ணீர் குடித்து பிரச்னை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம். இதைச் சாப்பிட்டுவிட்டு மதுபானம் அருந்தக் கூடாது.  உயிருக்கே ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உண்டு. ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதைச் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. மற்றவர்கள் குறைந்த அளவில் சாப்பிடலாம். இதன் சதைப்பகுதி மஞ்சள்காமாலை நோயால் அவதிப்படுபவர்களுக்குச் சிறந்த தீர்வைத் தரும். துரியன் பழத்தின் வேர்கள் நகம் தொடர்பான பிரச்னைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கின்றன. இதிலுள்ள மாங்கனீஸ் சத்து சீரான ரத்த ஓட்டத்தைப் பராமரிக்க உதவும்.

துரியன் பழத்தில் அதிக அளவில் இருக்கும் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை ரத்தச்சோகையைப் போக்க உதவும். கர்ப்பப்பை பலவீனமாக இருப்பவர்கள் துரியன் பழம் சாப்பிட்டால், விரைவில் கர்ப்பப்பை பலமாகும். விந்தணுக் குறைபாடு உள்ள ஆண்கள் சாப்பிட்டால்,  பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். தொடர்ந்து துரியன் பழம் சாப்பிடுவதால், தாது பலம் பெற்று விந்தணுக்கள் பலம் பெறும். 

துரியன் பழம் மட்டுமே உடலுக்கு ஆரோக்கியம் தரும் என்று சொல்ல முடியாது. அதன் இலைகளுக்கும் மருத்துவக் குணங்கள் உண்டு. துரியன் மரத்தின் வேர், இலை போன்றவற்றைத் தண்ணீருடன் சேர்த்துக் குடித்தால் காய்ச்சலிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம். இதிலிருக்கும் பொட்டாசியம், கால்சியம் மற்றும் வைட்டமின் பி சத்துகள் மூட்டு மற்றும் எலும்புகளை வலுவாக்கும். இதன் இலை மலச்சிக்கலுக்கு நல்ல தீர்வு தரும். துரியன் பழத் தோல் படை, சொறி, சிரங்கு போன்றவற்றுக்கு நல்ல மருந்தாகும்'' என்கிறார் எட்வர்டு பெரியநாயகம்.