Published:Updated:

கை கொடுக்கும் இயந்திரக் கை!

எஸ்.ஐ. வெர்ஷன் ரோபோட்டிக் அறிமுகம்

கை கொடுக்கும் இயந்திரக் கை!

எஸ்.ஐ. வெர்ஷன் ரோபோட்டிக் அறிமுகம்

Published:Updated:
##~##

ந்தியாவில் முதன் முறையாக ரோபோட் உதவியுடன் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு அறுவை சிகிச்சை செய்யும் முறை, சென்னை அப்போலோ மருத்துவமனையில் தொடங்கப்பட்டு உள்ளது. 'உடல்பருமன், மகப்பேறு, காது - மூக்கு - தொண்டை உள்ளிட்ட பாகங்களுக்கும் விரைவில் இயந்திரக் கை உதவியுடன் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறோம்’ என்றும் இந்த மருத்துவமனை அறிவித்து உள்ளது. 

இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டில் முதன்முறையாக ப்ராஸ்டேட் (விந்து நீர் சுரப்பி) கேன்சருக்கான அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் குழுவைச் சேர்ந்த கன்சல்டன்ட் யூராலஜிஸ்ட் டாக்டர் பி.அருண்குமாரிடம் பேசினோம்.

''முதன்முறையாக வந்த ரோபோட்டிக் இயந்திரத்தை 'ஸ்டாண்டர்டு வெர்ஷன்’ என்று கூறினார்கள். அதன் பிறகு 'எஸ் வெர்ஷன்’ அறிமுகமானது. இந்த இரண்டிலும் உள்ள குறைபாடுகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டு, இப்போது வந்துள்ள டாவின்ஸி ரோபோட்டிக் இயந்திரம்தான் 'எஸ்.ஐ. வெர்ஷன்’. முன்பு ஒரு சர்ஜன் மட்டுமே அறுவை சிகிச்சை செய்ய முடியும். இப்போது இருவர் சேர்ந்து அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு வந்துள்ளது.

ப்ராஸ்டேட் கேன்சர், கிட்னி கேன்சர், சிறுநீர்ப் பை பிரச்னை போன்ற சிகிச்சை முறைகளுக்கு ஓப்பன் அல்லது லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை செய்யப்படுகின்றது. ஓப்பன் சர்ஜரியில் உள்ள குறைபாடுகளைவிட லேப்ராஸ்கோபி சிறந்த முறை என்றாலும், சிக்கலான பாகங்களில் அதன் பயன்பாடு குறைவுதான். மேலும், ஒரே கோணத்தில் மட்டுமே அறுவை சிகிச்சை செய்ய முடியும். கைகளைப் போன்று திருப்ப முடியாது.

கை கொடுக்கும் இயந்திரக் கை!

இதற்குத் தீர்வாகவே, ரோபோட்டிக் சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். ரோபோட்டிக்

கை கொடுக்கும் இயந்திரக் கை!

சர்ஜரி வருகையால் ப்ராஸ்டேட் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை எளிமையாகிவிட்டது. ப்ராஸ்டேட் என்பது ஆண்களின் சிறுநீர்ப் பைக்குக் கீழ் மிகவும் சிக்கலான இடத்தில் கிட்டத்தட்ட ஆப்பிள் வடிவத்தில் இருக்கும். சிறுநீர்ப் பையில் இருந்து வரும் சிறுநீர்க் குழாய், இதன் மையப் பகுதி வழியாகத்தான் செல்கிறது. வயது முதிரும்போது இது பெரிதாகி, சிறுநீர் கழிப்பதில் பிரச்னை ஏற்படும்.

ப்ராஸ்டேட் பெரிதாகி சாதாரணமாகப் பிரச்னை கொடுக்கும்போது, சிறுநீர்க் குழாய் பாதை வழியாக லேசர் கருவியை செலுத்தி, பாதையைக் குடைந்து சரிசெய்துவிட முடியும். ஆனால், அதுவே புற்று நோயாக மாறும்போது, அதை முற்றிலுமாக அகற்றவேண்டும். லேப்ராஸ்கோபி மூலமும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நேரத்தில் ஆண்மை, விரைப்புத்தன்மை, சிறுநீர் வெளியேற்றம் போன்றவைக்குக் காரணமான நரம்புகளும் பாதிக்கப்படும் வாய்ப்பு உண்டு. இதனால் சிறுநீர்க் கசிவு, விரைப்புத்தன்மை இன்மை போன்ற பிரச்னைகள் வரும். அதனால் ப்ராஸ்டேட் புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த அறுவை சிகிச்சையை விரும்புவது இல்லை.

ப்ராஸ்டேட் புற்று நோயை முழுவதுமாக அகற்றவில்லை என்றால், நோயாளி உயிர் இழப்பதைத் தவிர்க்க முடியாது. அதுவும், மிகவும் கொடூர வலியுடன் கூடிய மரணமாக இருக்கும். இப்போது எஸ்.ஐ. வெர்ஷன் ரோபோட்டிக் இயந்திரத்தின் கை, அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய இடத்துக்கு அருகிலேயே நேரடியாக சென்று விடுகிறது. நம் கை வளைய முடியாத கோணத்திலும்கூட வளைந்து அறுவை சிகிச்சை செய்வதால், உறுப்பு முழுமையாக அகற்றப் படுகிறது. நோயாளிகள் விரைவில் குணம்பெறுகின்றனர்'' என்றார்.

அப்போலோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி கூறுகையில், ''மருத்துவத் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்துவருகிறது. நம் மக்களுக்கு அந்தத் தொழில்நுட்பங்கள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ரோபோட்டை அறிமுகப்படுத்தி உள்ளோம். ரோபோட் கை மூலம் காது, வயிறு, சிறுநீரகம், இதயம், மகப்பேறு உள்ளிட்ட பல துறைகளிலும் அறுவை சிகிச்சை செய்ய முடியும். இனி உடல் பருமன் குறைப்பு அறுவை சிகிச்சையும், மகப்பேறு சிகிச்சை முறைகளும் ரோபோட் கைகள் மூலம் செய்யப்படும்.

ரோபோட்டிக் அறுவை சிகிச்சையில் 1 செ.மீ. முதல் 2 செ.மீ. அளவுக்கு சிறிய துளைகள் போடப்பட்டு அதன் வழியாக கருவிகள், கேமரா உள்ளே செலுத்தப்படும். அறுவை சிகிச்சை செய்யப்படும் பகுதியை 10 மடங்கு பெரிதாக்கிப் பார்க்க முடியும். அதுவும் முப்பரிமாணக் காட்சியை இந்த இயந்திரம் கொடுப்பதால், மிகவும் கவனத்துடன் அறுவை சிகிச்சை செய்ய முடிகிறது. உடன் இருக்கும் மற்றவர்களும் பார்க்க வசதியாக இரு பரிமாணக் காட்சியும் அளிக்கிறது. அதனால் சிக்கலான பகுதியிலும்கூட இதனைக்கொண்டு எளிதில் அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்பதால், ரத்த இழப்பு, வலி குறைவாக இருக்கும், தழும்புகளும் பெரிதாகத் தெரியாது'' என்றார்.

மருத்துவத்தில் இயந்திர யுகம் வந்தாச்சு!

- பா.பிரவீன்குமார்

படங்கள்: கே.கார்த்திகேயன்