Published:Updated:

இடி மேல் இடி!

பாடம் தந்த ஏழாங்கல்லு!சார்லஸ், அ.லெனின்ஷா, படங்கள் : கே.கார்த்திகேயன்

இடி மேல் இடி!

பாடம் தந்த ஏழாங்கல்லு!சார்லஸ், அ.லெனின்ஷா, படங்கள் : கே.கார்த்திகேயன்

Published:Updated:
##~##

ம்மைச் சுற்றி தினம் தினம் விபத்துகள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. 'நான்கு பேர் பலி, காரில் பயணம் செய்த ஐந்து பேரும் பலி’ என்கிற செய்தியோடு, அதை நாம் கடந்து விடுகிறோம். நமக்கு விபத்து ஏற்பட்டால்தான் விபத்தின் கொடூரத்தையும், அதன் வலியையும் உணர முடிகிறது'' என்கிறார் மிகவும் மோசமான விபத்தில் இருந்து உயிர் பிழைத்து வந்திருக்கும் கே.எம்.வந்தன்.

''காரில் குடும்பத்தோடு டூர் அடிப்பதுதான் என்னுடைய ஒரே பொழுதுபோக்கு. இரண்டு நாள் லீவு கிடைத்தால் போதும், காரில் ஏறி குடும்பத்துடன் டூர் கிளம்பி விடுவேன். இதுவரை 48 ஆயிரம் கி.மீ தூரம் காரிலேயே பயணம் செய்திருக்கிறேன். என்னுடைய 25-வது பெரிய டூர், வாழ்க்கையில் மறக்க முடியாத பாடத்தைக் கற்றுக் கொடுத்து விட்டது. சென்னையில் இருந்து கேரள மாநிலம் திருச்சூருக்குப் போய்விட்டு, அங்கிருந்து தேக்கடிக்குப் போய்க் கொண்டு இருந்தோம். அன்று ஈஸ்டர் ஞாயிறு. மாருதி ஸ்விஃப்ட்டை நான் ஓட்ட, என் மனைவி லக்ஷ்மி முன் இருக்கையில் மகள் தேஜஸ்வினியுடன் அமர்ந்திருந்தாள். பின் இருக்கையில் என் அம்மாவும், என்னுடைய அக்காவுடன் அவரது இரண்டு மகன்களும் அமர்ந்திருந்தனர். காலை ஏழு மணி இருக்கும். பேராமங்கலம் எனும் பகுதியில் ஏழாங்கல்லு என்ற இடத்தில், எங்களுக்கு எதிரே பயங்கர வேகத்தில் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. பொதுவாகவே, கேரளாவில் மிக வேகமாக பஸ் ஓட்டுவார்கள். அதனால், நான் எப்போதுமே கூடுதல் கவனத்துடன் கார் ஓட்டுவேன். ஆனால், பஸ் இடது பக்கமாக வராமல் வலது பக்கமாக எனக்கு நேர் எதிரே வர... நான் சாலையை விட்டு காரைக் கீழே இறக்கி விட்டேன். இந்த நேரத்தில் பஸ்ஸுக்குப் பின்னால் இருந்து பஸ்ஸை ஓவர்டேக் செய்து கொண்டு ஸ்விஃப்ட் ஒன்று பறந்து வர... நான் காரை இன்னும் இடது பக்கமாகத் திருப்ப... ஸ்விஃப்ட் என் காரில் முட்டிய வேகத்தில், என்னுடைய கார் சாலையை நோக்கித் திரும்பியது. சில விநாடிகளில், ஸ்விஃப்ட்டுக்குப் பின்னால் இருந்து பயங்கர வேகத்தில் இனோவா ஒன்று வந்தது. இனோவாவும் என்னுடைய காரும் நேருக்கு நேர் மோதவும் பயங்கர விபத்து ஏற்பட்டுவிட்டதை உணர்ந்தேன்.

இடி மேல் இடி!

விபத்து நடப்பதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்புதான் நான் அட்ரஸ் கேட்பதற்காக சீட் பெல்ட்டை அகற்றிவிட்டு, முன் பக்க கண்ணாடிகளை இறக்கி விட்டிருந்தேன். விபத்து நடந்ததும் என்னுடைய மகள் திறந்திருந்த முன்பக்கக் கண்ணாடி வழியே வெளியே போய் விழுந்தாள். சிறிது நேரத்தில் என்னுடைய மனைவி கதவைத் திறந்துகொண்டு வெளியே போய்விட... டிரைவர் இருக்கையில் இருந்த நான் எப்படி பக்கவாட்டு பயணியின் கதவு அருகே வந்தேன் என்பதே தெரியவில்லை. பின் பக்கக் கதவுகள் ஜாம் ஆகி விட்டது. பின்னால் உட்கார்ந்திருந்த அம்மாவுக்கும், அக்காவுக்கும் பெரிய அடி. அவர்களின் நிலைமை என்ன என்று தெரிவதற்குள் எனக்கு மயக்கம் வந்துவிட்டது'' என்று விபத்து நடந்த விதத்தை விளக்கினார் வந்தன்.

''எனக்கு இடுப்புக்குக் கீழே நல்ல அடி. என்னால் எழும்பவே முடியவில்லை. ஆனால், என் மகள்

இடி மேல் இடி!

தூரத்தில் இருப்பதைப் பார்த்து தவழ்ந்துகொண்டே போய் என் மகளை அருகில் தூக்கிக் கொண்டேன். பின் பக்க இருக்கையில் இருந்த என் மாமியார் மற்றும் நாத்தனாரையும், பையன்களையும் அங்கிருந்தவர்கள் வெளியே தூக்கி விட்டனர். பையன்களுக்கு எந்த அடியும் இல்லை. அவர்கள் உடனே போன் செய்து எங்களுடைய உறவினர்களுக்குத் தகவல் சொன்னார்கள். இந்த நேரத்தில் அங்கிருந்தவர்கள், தலையில் அடிபட்டு ரத்தம் சொட்டிக் கொண்டிருந்த என் கணவரை அந்த வழியாக வந்த வாகனம் ஒன்றில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அடுத்த வாகனத்தில் என்னையும், அதற்கடுத்த வாகனத்தில் மற்றவர்களையும் கொண்டு சென்றனர். மூன்று வாகனங்களுமே அருகில் இருந்த வெவ்வேறு மருத்துவமனைகளுக்குப் போய்விட்டன'' என்றார் லக்ஷ்மி.

''என்னுடைய சுய நினைவு மங்கி, மயக்க நிலைக்குப் போவதை உணர்ந்தேன். ஆனால், சுயநினைவு போய் விட்டால் அது பெரிய ஆபத்தில் முடியலாம் என்பதால், சுயநினைவை இழக்காமல் இருக்க எதையாவது பேசிக் கொண்டே இருந்தேன். என்னுடைய கழுத்தில் பயங்கர அடி. கழுத்து தொங்கிவிட்டது. பின்னால் முதுகெலும்பிலும் பயங்கர அடி. மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதும் எனக்கு முதலுதவி அளிக்கப்பட்டு உட்கார வைக்கப்பட்டு விட்டேன். தலையில் ஏற்பட்ட அடிக்குத் தையல் போட மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை. அன்றைய தினம் ஈஸ்டர் தினம் என்பதால், மருத்துவர்கள் யாரும் மருத்துவமனையில் இல்லை. இரவு பத்து மணிக்குத்தான் டாக்டர் வந்தார். சிகிச்சை அளிக்கப்பட்டது. கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் எல்லோருமே மருத்துவமனையில் இருந்தோம். என் மனைவி மற்றும் அக்கா குணமடைய ஆறு மாதங்களானது.

இந்த விபத்தில் இருந்து பல பாடங்கள் கற்றுக் கொண்டோம். உயிர் பிழைத்தே இருக்க முடியாத இந்த விபத்தில் சிக்கினாலும், காருக்குள் இருந்த ஏழு பேரும் நல்ல நிலையில் இருப்பது எங்கள் வாழ்க்கையில் கடவுள் நடத்திக் காட்டிய மிகப் பெரிய அற்புதம்!'' என்றார் வந்தன்.

இடி மேல் இடி!

விபத்து ஏற்பட்டால் உடனடியாக என்ன முதலுதவி செய்ய வேண்டும் என்பதை விவரிக்கிறார் எலும்பு முறிவு நிபுணர் டாக்டர் இளங்கோவன். ''சுய நினைவில் இருக்கும்போது செய்யும் சிகிச்சை, மயக்கமடைந்த நிலையில் செய்யும் சிகிச்சை என விபத்துக்குள்ளானவர்களுக்கு அளிக்கப்படும் முதலுதவிகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முதலுதவியைச் செய்வதற்கு முன்பு, மூச்சுக் குழாய் அடைப்பு, சுவாச நிலை, நாடித் துடிப்பு மற்றும் ரத்த ஓட்டத்தை முழுமையாகப் பரிசோதிக்க வேண்டும். அதன் பிறகுதான் அவரை சகஜ நிலைக்குக் கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.

தலையில் காயமடைந்து, மூச்சு பேச்சில்லாமல் மயக்க நிலையில் இருப்பவரிடம் எங்கு வலிக்கிறது. என்ன நிலையில் இருக்கிறார் போன்ற தகவல்களை நம்மால் பெற இயலாது. நாம்தான் அவரது அப்போதைய நிலையை அறிந்து கொள்ள வேண்டும். மயக்க நிலையில் இருக்கும்போது நாக்கு உள்பக்கமாக இழுத்துக் கொண்டு, நுரையீரலுக்குப் போகக் கூடிய 'டிரக்யா’ (Trachea) என்ற மூச்சுக் குழாயை அடைத்து விடுவதற்கு வாய்ப்பு உண்டு.

இந்த மாதிரியான நிலையில் இருப்பவர்களை குப்புறப் படுக்க வைத்து, தலையை மட்டும் வலது பக்கமாகத் திருப்பி வைக்க வேண்டும். ஒரு வேளை அவர்களுக்கு இதயத் துடிப்பு இருந்தால், அவர்களை மீட்பு நிலையில் கிடத்தி, இதயத்தில் கை வைத்து அழுத்தம் கொடுக்கலாம். பாதிக்கப்பட்டவரது வாயோடு வாய் வைத்து காற்றை ஊதி, சுவாசிக்கச் செய்யலாம்.

மயக்க நிலையில் இல்லாமல், கை அல்லது காலில் முறிவு ஏற்பட்டிருந்த நிலையில் கிடந்தால், ஒரு பேப்பரை ஸ்கேல் போன்று மடித்து முறிவு ஏற்பட்ட இடத்தில் வைத்துக் கட்டவேண்டும். இதனால் அந்தப் பகுதி, மேலும் தொய்ந்துவிடாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

ரத்தம் வெளியேறிக் கொண்டிருக்கும்போது, அதை நிறுத்த கையால் அந்தப் பகுதியை அழுத்திப் பிடிக்க வேண்டும். எந்தக் காரணத்துக்காகவும் துணி வைத்து கட்டுப் போடக் கூடாது. சில சமயங்களில் அந்த துணி இறுகி ரத்தக் குழாயில் பாதிப்பை ஏற்படுத்தி விடும். இதனால் அந்தப் பகுதி முழுவதையுமே வெட்டி எடுத்துவிட வேண்டிய அளவுக்கு நிலைமை மோசமாகிவிடும்.

'முதலுதவி சிறப்பானதாக இருந்தால்தான் பெரும்பான்மையான உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும்’ என்பதை நமது அரசும் உணர்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்!'' என்று கோரிக்கை வைத்தார் டாக்டர் இளங்கோவன்!

இடி மேல் இடி!
இடி மேல் இடி!

எப்போதுமே செல்போனில் அப்பா, அம்மா, அண்ணன், மனைவி என்று அவர்களது எண்களை உறவுகளைக் குறிப்பிட்டே பதிவு செய்து வைத்திருங்கள். அப்போதுதான் விபத்து நடந்த இடத்தில் இருப்பவர்களுக்கு முதலில் யாருக்குத் தகவல் சொல்ல வேண்டும் என்பது தெரியும்.

இடி மேல் இடி!

விபத்து நடந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் சூழல் ஏற்பட்டால், நீங்கள் சுயநினைவை இழப்பதற்கு முன்பாகவே உங்களுக்கு அறுவை சிகிச்சைகள் ஏதும் செய்யப்பட்டு இருந்தாலோ அல்லது உங்கள் உடலில் பெரிய பாதிப்புகள் இருந்து, அதற்கு சிகிச்சை பெற்று வந்தாலோ அதைச் சொல்லி விடுங்கள்.

இடி மேல் இடி!

விபத்து ஏற்பட்டவுடன் உங்கள் உறவினர்களுக்குத் தகவல் சொல்லி உடனடியாக போலீஸில் புகார் செய்து விடுங்கள். இந்த விஷயத்தில் காலதாமதம் ஏற்பட்டால், எதிர் தரப்பினர் தவறாக வழக்கைப் பதிவு செய்துவிடும் வாய்ப்புகள் அதிகம்.

இடி மேல் இடி!

பயணங்களின்போது காருக்குள் நிறைய பொருட்களைக் கொண்டு செல்ல வேண்டாம். அதேபோல் பணம், நகைகள் எதையும் காருக்குள் வைத்துக்கொண்டு நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டாம்.