Published:Updated:

"பொண்ணுக்கு ஆபரேஷன்; பணத்துக்கு அல்லாடும் ஆட்டோ டிரைவர்! " Sponsored Content

"பொண்ணுக்கு ஆபரேஷன்; பணத்துக்கு அல்லாடும் ஆட்டோ டிரைவர்! "  Sponsored Content
"பொண்ணுக்கு ஆபரேஷன்; பணத்துக்கு அல்லாடும் ஆட்டோ டிரைவர்! " Sponsored Content

11 வயது நிரம்பிய கஜலட்சுமிக்கு யோகப்பயிற்சியில் ஈடுபடுவதில் கொள்ளை பிரியம். 6ஆம் வகுப்பு பயிலும் அவள் ஸ்கூலில் எப்போது யோகா வகுப்பு எடுத்தாலும், உற்சாகமாக கலந்துகொள்வாள். தான் செய்த பயிற்சிகளைப் பற்றித் தன் தாய் தந்தையிடம் மகிழ்ச்சியாக எடுத்துக்கூறுவாள். தங்களுடைய பெண்ணை சந்தோஷமாக பார்ப்பதே அவளின் பெற்றோரான தரணி - சரஸ்வதிக்கு பெரும் ஆனந்தம். ஆனால் இந்த சந்தோசம் அற்பமானது, தங்களுடன் உற்சாகமாக பேசிக்கொண்டிருக்கும்போதே கஜலட்சுமி சோர்ந்து படுத்துக்கொள்வாள். இது இன்று நேற்றல்ல, பிறந்ததில் இருந்தே இதே கதிதான் அவளுக்கு. தினமும் ஸ்கூலுக்குப் போகும் பெண் வகுப்பில் என்ன செய்கிறாளோ என்னவோ என்ற பயத்துடனேயே வாழ்க்கையை நடத்தப் பழகிக்கொண்டுவிட்டனர் அம்மா சரஸ்வதி மற்றும் அப்பா தரணி.

"பொண்ணுக்கு ஆபரேஷன்; பணத்துக்கு அல்லாடும் ஆட்டோ டிரைவர்! "  Sponsored Content

என்ன பிரச்னை?

கருவில் இருக்கும்போதே சில குழந்தைகளுக்கு உடற்கோளாறுகள் ஏற்பட்டுவிடுகிறது. இவ்வாறான நோய்கள் இச்சிறார்களின் வாழ்க்கையைப்  பிற பிள்ளைகள் போல இருக்கவிடுவதில்லை. காற்றை சுவாசிக்கும் முன்னரே நோயுடன் பிறக்கும் இவ்வகை பிஞ்சுகள் வாழ்க்கையில் படும் துயரத்தை சொல்லிமாளாது. இப்படியிருக்க பிள்ளைகள் படும் துன்பத்தைப் பார்த்துப் பார்த்துப் புழுங்கிப்போகும் பெற்றோரின் நிலையை எங்ஙனம் எடுத்துக்கூறுவது? 

இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் இருநூற்றில் ஒரு குழந்தை ஏதோ ஒரு வகையில் இருதயக் கோளாறால் பாதிக்கப்படுகிறது என்கிறது ஒரு ஆய்வறிக்கை. பிறந்தவுடனேயே இவ்வாறான பிரச்னைகள் கண்டுபிடிக்கப்பட்டு அப்பொழுதே சரிசெய்ய வாய்ப்புகள் உள்ளது. இருந்தாலும் சில சமயங்களில் குழந்தை கொஞ்சம் வளர்ந்த பிறகே பிரச்னைகளின் அறிகுறி தென்படுகிறது. இதுதான் கஜலட்சுமியின் நிலையும்கூட... 

டிரைகஸ்பிட் அட்ரீஷியா

அவளுக்கு ஏற்பட்டிருப்பது Tricuspid Atresia எனும் அரியவகை இருதய நோய். இதயத்தில் உள்ள  டிரைகஸ்பிட் வால்வு சரியான இடத்தில் இல்லாததால் சுத்திகரிக்கப்பட்ட இரத்தமும் சுத்திகரிக்கப்படாத இரத்தமும் ஒன்றாக கலந்துவிடுகிறது. இதனால் எந்நேரமும் சுறுசுறுப்பில்லாமல் அசதியுடன் காணப்படுகிறாள் கஜலட்சுமி. எந்நேரமும் இதயம் செயலிழக்கும் பேராபயமும் நிறைந்த வாழ்வையே இச்சிறுமி வாழ்ந்துவருகிறாள் எனும் செய்தி நமக்குப் பதைபதைப்பை உண்டாக்குகிறது.

"பொண்ணுக்கு ஆபரேஷன்; பணத்துக்கு அல்லாடும் ஆட்டோ டிரைவர்! "  Sponsored Content

கஜலட்சுமி 5 மாதக் குழந்தையாக இருந்தபோதே இந்த விஷயம் மருத்துவர்களால் கண்டறியப்படுகிறது. மூன்று அறுவை சிகிச்சைகள் செய்தால் மட்டுமே அவளின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்கிற நிலையில், 5 மாதத்தின் போது ஒரு ஆபரேஷனையும், 6 வயதாகும்போது இரண்டாவது ஆபரேஷனையும் தங்களின் சக்தியை மீறி மகளுக்கு செய்து முடிக்கின்றனர் தரணி - சரஸ்வதி. மூன்றாவது ஆபரேஷன் செய்ய 11 வயதாக வேண்டும் என்பது டாக்டர்களின் அறிவுரை. அதன்படி இப்போது கடைசி ஆபரேஷன் செய்தால், தங்களின் மகள் இந்த உயிரைக்கொல்லும் அவஸ்தையில் இருந்து வெளிவந்துவிடுவாள் என்பதுதான் இந்தப் பெற்றோரின் ஒரே நம்பிக்கை வெளிச்சம்!

ஆட்டோ ஓட்டுநராக பணிபுரியும் தரணி தன் மகளின் ஆபரேஷனுக்கு ரூபாய் 5 லட்சம் வேண்டி இரவு பகலாக அலைந்துகொண்டிருக்கிறார். கடன் ஒருபக்கம் மலை போல சேர, மகளின் உடல்நலனும் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வர, தன் ஒரே மகளை எப்படியாவது பிழைக்கவைத்துவிடவேண்டும் என்பதுதான் அவரின் வாழ்க்கையாக இருந்துவருகிறது.

இந்நிலையில், Edudharma.com இதற்காக நிதி திரட்ட ஆரம்பித்துள்ளது, கஜலட்சுமிக்கு நம்மால் ஆன உதவியை இந்த லிங்கிற்குச் சென்று செய்யலாம். மேலும் இத்தகவலை முடிந்தவரை உங்களுக்குத் தெரிந்த அனைவருக்கும் வாட்சாப் மற்றும் பேஸ்புக் போன்றவைகளில் பகிர்வதால், கஜலட்சுமியின் உயிரை விரைவில் நம்மால் காப்பாற்ற முடியும்! செய்கையில் சிறந்த உதவியைச் செய்வோம், எல்லா உயிரும் இன்புறட்டும்!

"பொண்ணுக்கு ஆபரேஷன்; பணத்துக்கு அல்லாடும் ஆட்டோ டிரைவர்! "  Sponsored Content

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை  Edudharma- வின் விளம்பரதாரர் பகுதி. இதில் கூறப்பட்டுள்ள உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பல்ல. மேலும் வாசகர்கள் இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம். நன்கொடை செய்வதற்கு முன்னர் வாசகர்கள் உண்மைத்தன்மையை சுயாதீனமாக சரிபார்த்துக் கொள்ளவும்.