வயிற்று உப்புசம் விதவிதமான பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். சாப்பிடும் உணவை வயிறு ஏற்றுக்கொள்ளாது. செரிமானமின்மையால் மனஅழுத்தம், அதிகமாக உணர்ச்சிவசப்படுதல் இவையெல்லாம் உண்டாகலாம். வயிற்று உப்புசத்தைப் போக்கும் எளிய வழிமுறைகள் சில...

சீரகத்தை மெல்லலாம்!

சீரகத்துக்குச் செரிமான சக்தியை அதிகரிக்கும், வாயுத் தொல்லையை நீக்கும் ஆற்றலுண்டு. சாப்பிட்ட பிறகு அரை டீஸ்பூன் சீரகத்தை வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கலாம். சீரகத் தேநீரும் குடிக்கலாம்.

புத்துணர்ச்சிக்குப் புதினா!

சாப்பிட்ட பிறகு ஒரு கப் புதினா டீ குடிப்பது செரிமானம் சீராக உதவும். இது பித்தநீர் சுரப்பதை மேம்படுத்தி, உணவு வேகமாக செரிமானப் பாதையில் பயணிக்க உதவும். ஆனால், அசிடிட்டி, நெஞ்செரிச்சல் பிரச்னை இருப்பவர்கள், இதைப் பயன்படுத்தினால் பிரச்னை இன்னும் அதிகமாகும்.

வாயுவை வெளியேற்றும் பயிற்சி

வயிற்று உப்புசத்துக்கும், வாயுவை வெளியேற்றவும் இது உதவும். தரையில் மல்லாந்து படுத்து, கால்களை மடக்கி இரு கைகளாலும், கால்களைப் பிடித்து மார்புடன் ஒட்டினாற்போல் வைத்துக்கொள்ளவும். இரண்டு கால் மூட்டுகளையும் கைகளால் பிடித்து இடது, வலது புறமாகக் காலை அசைத்து வயிற்றுக்கு மசாஜ் கொடுப்பதுபோலச் செய்யவும். இதனால், வயிற்றிலிருக்கும் உணவு தேங்கி நிற்காமல் நகர ஆரம்பிக்கும். இந்தப் பயிற்சியை ஒரு காலை மட்டும் தரையில் நன்றாக நீட்டி வைத்துக்கொண்டு, மற்றொரு காலை பயன்படுத்தியும் செய்யலாம். கால்களை மாற்றி மாற்றிச் செய்யலாம்.

அக்குபிரஷர் ட்ரை பண்ணலாம்!

வயிறு புரட்டி, குமட்டல் வரும் பிரச்னையைத் தடுக்க அக்குபிரஷர் நுட்பத்தைக் கையிலெடுக்கலாம். வலது கையில் பெருவிரல், ஆள்காட்டி விரல்களால் இடது கையின் பெருவிரல், ஆள்காட்டி விரலுக்கு நடுவில் இருக்கும் மென்மையான பகுதியை அழுத்த வேண்டும். இதைச் செய்தால் குமட்டல் குறைய வாய்ப்பு உண்டு.

புரோபயோடிக்குக்கு வெல்கம்!

செரிமான மண்டலத்தில் 500-க்கும் அதிகமான நல்ல பாக்டீரியாக்கள் இருக்கின்றன. குடல் ஆரோக்கியத்துக்கும் செரிமானத்துக்கும் இவை உதவுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் உதவும். எனவே, நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்திருக்கும் யோகர்ட், திரட்டுப்பால் போன்ற புரோபயோடிக் உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

உடற்பயிற்சியும் உதவும்!

முன்புறமாகக் குனிந்து செய்யும் உடற்பயிற்சியைச் செய்தால் (Forward Bend) வயிற்றுப் பகுதி நன்றாக அழுத்தப்பட்டு, சாப்பிட்ட உணவு சீராக நகர்வதற்கு உதவும். இது மனஅழுத்தம் குறைக்கவும் உதவும். இரண்டு கால்களையும் அகலமாக விரித்து நிற்கவும். பாதத்தின் முன் பகுதியைவிட குதிகால்களைக் கொஞ்சம் அகட்டிக்கொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் பின்புறமாகப் பிடித்து, நன்றாக அழுத்திக்கொண்டே, மேலுடலை முன்புறமாக வளைத்து கைகளைப் பின்புறமாக மேலே நீட்டித் தூக்க வேண்டும். எவ்வளவு முடியுமோ, அவ்வளவு உடலை வளைக்க வேண்டும். இந்த நிலையிலேயே ஐந்து முறை மூச்சை நன்கு இழுத்துவிட வேண்டும். நிமிரும்போது பாதங்களைத் தரையில் நன்றாக அழுத்தி, தொடையின் தசைகளை இறுக்கிக்கொள்ள வேண்டும். மூச்சை நன்கு இழுத்துவிட வேண்டும்.

- மு.இளவரசன்