ஹெல்த்
Published:Updated:

கசக்கிற வாழ்வே இனிக்கும் - ஏழே நாள்களில் எல்லாம் மாறும்

கசக்கிற வாழ்வே இனிக்கும் - ஏழே நாள்களில் எல்லாம் மாறும்
பிரீமியம் ஸ்டோரி
News
கசக்கிற வாழ்வே இனிக்கும் - ஏழே நாள்களில் எல்லாம் மாறும்

புவனேஸ்வரி, ஊட்டச்சத்து நிபுணர்

முன்பெல்லாம் சர்க்கரை நோயாளிகள்தான் ‘சர்க்கரையில்லா’ வாழ்க்கையை மேற்கொள்வார்கள். இன்றைக்கு `டயட்’ என்ற பெயரில் சாதாரணர்களும் சர்க்கரையை ஒதுக்கத் தொடங்கிவிட்டார்கள். இதற்குக் காரணம், `வெள்ளை உணவுகளைப்  பயன்படுத்தாதீர்கள்...’ என்ற பிரசாரம்தான். அப்படியானால், சர்க்கரையால் உடலுக்கு பயனே இல்லையா? இதுபற்றி விரிவாகப் பேசுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் புவனேஸ்வரி.

கசக்கிற வாழ்வே இனிக்கும் - ஏழே நாள்களில் எல்லாம் மாறும்

“ஒருநாளைக்கு ஒருவர் ஆறு டீஸ்பூன் வரை சர்க்கரை எடுத்துக்கொள்வது உகந்தது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ‘நான் ஒருநாளைக்கு மூணு காபி குடிக்கிறேன், ஒரு காபிக்கு ரெண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்க்கலாம்தானே என்று நீங்கள் கேட்கலாம். நீங்கள் இன்னோர்  உண்மையையும் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் 80 சதவிகித உணவுகளில் சர்க்கரைச் சத்து இருக்கிறது. அதுவே நமக்கான சர்க்கரைத் தேவையைப் பூர்த்தி செய்துவிடும். 

சுகர் டீடாக்ஸ்

சர்க்கரை, இரண்டு வகைகளில் நமக்குக் கிடைக்கிறது. ஒன்று இயற்கையாகவே பழங்கள், காய்கறிகள், தானியங்கள், பருப்புகளில் இருந்து கிடைப்பது. இவற்றில் மற்ற ஊட்டச்சத்துகளும் இயற்கையாகவே இருப்பதால் உடலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படுவதில்லை. அடுத்தது தானியங்கள், சோயா மில்க், கடைகளில் விற்கப்படும் தயிர், பாக்கெட்டுகளில் விற்கப்படும் பழச்சாறுகள், குளிர்பானங்கள், சாஸ், கெட்ச்-அப், நார்ச்சத்து அதிகமுள்ள பிஸ்கட் வகைகள் போன்றவற்றில் செயற்கையாகச் சேர்க்கப்படுவது. இந்தப் பொருள்களில் கூடுதலாக எவ்வித ஊட்டச்சத்தும் இருக்காது; ஆனால் கலோரிகள் அதிகமாக இருக்கும்.

கலோரியின் அளவு உடலில் அதிகரிப்பது ஆரோக்கியமானதல்ல. ஆனால், அதிக சர்க்கரைச் சத்தை உடலுக்குத் தருகிறோம் என்பதை எப்படி அறிந்துகொள்வது? ஒருநாளில் என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை டைரியில் குறித்துவைத்துக் கொண்டு, அதில் எவையெல்லாம் செயற்கையாகச் சர்க்கரைச் சேர்க்கப்பட்ட உணவுகள், அந்த உணவுகளில் எவ்வளவு கலோரிகள் உள்ளன என்பதையும் அதில் பதிவிடுங்கள்.

கசக்கிற வாழ்வே இனிக்கும் - ஏழே நாள்களில் எல்லாம் மாறும்

உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்தபடி, ஆறு டீஸ்பூன் என்ற அளவுக்கும் அதிகமாகச் சர்க்கரை இருந்தால், `சுகர் டீடாக்ஸ்’ செய்யத் தொடங்குங்கள். அதாவது சர்க்கரை உணவுகளிலி ருந்து உங்களை நீங்களே விடுவித்துக்கொள்வதுதான் ‘சுகர் டீடாக்ஸ்’.

சர்க்கரைச் சத்து நிறைந்த உணவுகளையும் சர்க்கரையையும் ஒரே நேரத்தில் விடமுடியாத வர்கள்,  ஒரு சவாலாக டீடாக்ஸ் செய்ய முயற்சி செய்யலாம்.

சுகர் டீடாக்ஸால் கிடைக்கும் நன்மைகள்:

* உடல் எடை குறையும்.

* உடலின் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

* க்ரெலின் (Ghrelin) மற்றும் லெப்டின் (Leptin) எனப்படும் பசியை நிர்வகிக்கும் ஹார்மோன்கள், கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

* உடல் அதிகப் புத்துணர்ச்சியுடன் செயல்படும்.

* உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

* அதிகாலை - வாரத்தின் ஏழு நாள்களும் சூடான நீரில் இரண்டு டீஸ்பூன் வெந்தயத்தைப் போட்டுக் குடிக்கவும். கொழுப்புச்சத்து குறைவான பாலை, சர்க்கரை சேர்க்காமல் டீ, காபியாக அருந்தலாம்.

கசக்கிற வாழ்வே இனிக்கும் - ஏழே நாள்களில் எல்லாம் மாறும்
கசக்கிற வாழ்வே இனிக்கும் - ஏழே நாள்களில் எல்லாம் மாறும்

டிப்ஸ்

டீடாக்ஸ் சேலஞ்சின் போது சிலரால் சர்க்கரைச் சுவை இல்லாமல் இருக்கவே முடியாது. அப்படியான நிலையில் சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

* உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதற்கு அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.

* பழங்கள், நட்ஸ், பட்டாணி போன்றவற்றை ஸ்நாக்ஸாக எடுத்துக் கொள்ளுங்கள்.

* குறிப்பிட்ட நாள்களுக்கு இனிப்பைத் தவிர்த்தால், மனம் அதைப்பற்றியே நினைப்பது இயல்பானதுதான். ஆனால் அதையே நினைத்து தேவையில்லாத மனஅழுத்தத்துக்கு ஆளாகாதீர் கள். அந்த எண்ணத்திலிருந்து வெளியே வருவதற்கு, உங்களை நீங்கள் பிஸியாக வைத்துக்கொள்ளுங்கள்.

* தினமும் யோகா, தியானம் செய்யுங்கள். தேவையான அளவு தூங்குங்கள். மனம் அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பது அவசியம்.

* டீடாக்ஸ் சேலஞ்சின்போது, சிலருக்கு அதிகளவு பசி எடுக்கும். அவர்கள் பாதாம், அக்ரூட், நட்ஸ் வகைகளைச் சாப்பிட்டுப் பசியைக் கட்டுப்படுத்தலாம்.

* குளிர்பானம் குடிக்க வேண்டும் என்று தோன்றினால் இளநீர், லவங்கம் கலந்த எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம்.

* உணவில் முழு தானியங்கள், நட்ஸ், பழம், காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

* வெள்ளைச் சர்க்கரை, தேன், மாம்பழம், உருளைக்கிழங்கு, திராட்சை போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

சர்க்கரை நோயாளிகள் `சுகர் டீடாக்ஸ்’ முறையைப் பின்பற்றலாமா?

சர்க்கரை நோய் நிபுணர் ஜெயஸ்ரீ கோபாலிடம் கேட்டோம்.

கசக்கிற வாழ்வே இனிக்கும் - ஏழே நாள்களில் எல்லாம் மாறும்

“உடலில் அதிகச் சர்க்கரைச் சத்து சேர்ந்தால் இன்சுலின் அளவு அதிகரித்துவிடும். இது உடல் பருமன், சர்க்கரைநோய், இதயப்பிரச்னைகள் போன்ற பல்வேறு உடல் பிரச்னை களுக்கு வழிவகுக்கும். நோய் எதிர்ப்பு சக்தி, வைட்டமின் மற்றும் தாதுச்சத்து களைக் குறைத்துவிடும் அபாயமும் இதில் உள்ளது. சர்க்கரையை முழுமையாகத் தவிர்க்க விரும்புபவர்கள் யாராயினும், `சுகர் டீடாக்ஸ்’ முறையைப் பின்பற்றலாம். இதற்கு, சர்க்கரை நோயாளிகள் மட்டும் விதிவிலக்கல்ல.

‘சுகர் டீடாக்ஸ்’ முறையின் நோக்கமே, இனிப்பு கலந்த உணவுப் பொருள்களை நம் உணவிலிருந்து ஒதுக்கிவைப்பதுதான். சுருக்கமாகச் சொல்வ தென்றால், உடலிலிருந்து எல்லா வகையிலும் சர்க்கரைச் சத்துகளை விலக்கிவைப்பது. சர்க்கரைச் சத்து மட்டுமன்றி, கார்போஹைட்ரேட் மிகுந்த உணவுகளையும் ஒதுக்கவேண்டும். ஆனாலும், ஒரேநாளில் ஒரேடியாகச் சர்க்கரையை யாராலும் ஒதுக்கிவைத்துவிட முடியாது.

 சர்க்கரை என்பது ஹை-கிளைசெமிக் உணவு. சட்டென ஒரேநேரத்தில் சர்க்கரையை ஒதுக்கிவைத் தால் பதற்றம் உருவாகும். சர்க்கரை மீதான ஆர்வம் தூண்டப்பட்டுக்கொண்டே இருப்பதுடன் மூட் ஸ்விங்க்ஸ், மயக்க உணர்வு, தலைவலி,  மனஅழுத்தம் போன்ற பிரச்னைகளையும் ஏற்படுத்தும். எனவே, சில வழிமுறைகளை வகுத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்கொள்ளுங்கள். இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டுச் செயல்படலாம். சர்க்கரைச் சத்தை உடலிலிருந்து குறைப்பது, பல்வேறு உடல் பிரச்னைகளில் இருந்தும் நம்மைக் காக்கும்.”

- ஜெ.நிவேதா