Published:Updated:

2 வயதுக் குழந்தைக்கு 3 அறுவை சிகிச்சைகள்...

2 வயதுக் குழந்தைக்கு 3 அறுவை சிகிச்சைகள்...
2 வயதுக் குழந்தைக்கு 3 அறுவை சிகிச்சைகள்...

கேட்கும்போதே நெஞ்சம் பதைப்பதைக்கிறது...  சாவின் விளிம்பில்  இருக்கும் குழந்தையைப் பார்க்கும் அந்தப் பெற்றோரின் வேதனையை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. அப்படி ஒரு நிலைமையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர் விதேஷின் பெற்றோர். இந்த உலகிற்கு வருவதற்கு முன்பே, அந்த சிசுவின் சின்ன இதயத்தில் பிரச்னை என ஸ்கேன் ரிப்போர்ட்டில் தெரியவந்தது. இதனால் கருவில் இருக்கும் விதேஷ் பிறக்கும்போது இதயத்தில் துளையுடன் பிறப்பான் என மருத்துவர்கள் கூறினர். இது பிறக்காத தங்கள் குழந்தை மீதான அந்தப் பெற்றோரின் வேதனை பிரசவ வலியைவிட கொடுமையாக அமைந்தது. தற்போது விதேஷுக்கு 2 வயது. இந்த இரண்டு வயது வரை மட்டுமே விதேஷின் பிஞ்சு உடம்பு 3 அறுவை சிகிச்சைகளை தாங்கியுள்ளது.

2 வயதுக் குழந்தைக்கு 3 அறுவை சிகிச்சைகள்...

விதேஷின் தந்தை சரவணனுக்கு, அறுவை சிகிச்சைக்கான அத்தனை தொகையை எப்படி ஏற்பாடு செய்வதென்று, செய்வதறியாது திகைத்தார். மாதம் ரூ.10,000 சம்பாதிக்கும் சரவணனுக்கு அறுவை சிகிச்சைக்கான தொகை என்பது நினைத்தும் பார்க்கமுடியாத ஒன்றாக இருந்தது. அந்த நேரத்தில் சரவணனின் வேதனையை நண்பர்களும் உறவினர்களும் போக்கினர். "எனது துயரக் காலம் முழுவதும் அவர்கள் எனதருகே இருந்தனர். ஆனால், மூன்று அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகும் அவதிப்பட்டு வரும் எனது மகனை காப்பாற்ற அதனால் அழுகிறேன்" என்று கண்ணீருடன் சரவணன் தனது மகனுக்காக ஏங்கினார். 

கடந்த ஜூலை மாதம் (2018) விதேஷுக்கு, 2-வது மற்றும் 3-வது, அறுவை சிகிச்சை முடிந்திருந்தது. இந்த வேதனையை விதேஷ் சகித்துக்கொள்வது இதுவே கடைசி என்று அவனது பெற்றோர் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் அந்த நம்பிக்கை சுக்குநூறாக நொறுங்கியது. ஆகஸ்ட் மாதம் பாதியிலேயே விதேஷுக்கு சுவாசப் பிரச்னை தொடங்கியது. 

2 வயதுக் குழந்தைக்கு 3 அறுவை சிகிச்சைகள்...

மூன்றாவது அறுவை சிகிச்சைக்குப் பிறகு விதேஷின் உடல்நலம் தேறியது, தவிர தனக்குப் பிடித்த சிவப்பு நிற காரை வைத்து வீடு முழுக்க ஓடியாடி சுற்றித்திரிந்த விதேஷைப் பார்த்து, பெற்றோரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். இதற்கிடையே விதேஷுக்கு சாதாரணமாக ஜலதோஷம் பிடித்தது. அது அவனது மார்புக்கு பெரும் நெரிசலை உருவாக்கியது. இதனால் மூச்சுவிடக் கடினமாக இருந்ததால், உறங்க முடியாமல் இரவு முழுக்க கொடுமையை அனுபவித்துள்ளான். இதனையடுத்து விதேஷ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். சாதாரண ஜலதோஷமாகத்தான் இருக்கும் என்று பெற்றோர் நினைத்திருந்தனர். 

மருத்துவர் விதேஷுக்கு உடனடியாக ஸ்கேன் செய்ய ஏற்பாடு செய்தார். அந்த ஸ்கேன் ரிப்போர்ட்டை வாங்கிய விதேஷின் தாயார், வெறும் ஜலதோஷமாகத்தான் இருக்க வேண்டும் என்று பயத்துடன் வேண்டிக் கொண்டே மருத்துவரிடம் நீட்டினார். ஆனால் விதேஷை ஆட்டிப்படைக்க மீண்டும் பிரச்னை தொடங்கியிருப்பதாக மருத்துவர் அதிர்ச்சி அளித்தார். இதற்கு நான்காவது முறையாக ஒரு அறுவை சிகிச்சை தேவை என்று தெரிவித்த மருத்துவர், இந்த முறை விதேஷ் நிச்சயம் இப்பிரச்னையில் இருந்து விடுபட்டுவிடுவான் எனக் கூறினார்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத விதேஷின் பெற்றோர், அவனது வாழ்க்கையை மீட்டெடுக்கும் வாழ்வா? சாவா? போராட்டத்தில் சிக்கிக் கொண்டுள்ளனர். ஏற்கனவே 4 லட்சம் கடனில் இருக்கும் சரவணனுக்கு, 4-வது அறுவை சிகிச்சைக்காக 3 லட்சம் தேவையாக உள்ளது. தற்போது விதேஷின் வாழ்வை மீட்கும் போராட்டத்தில் 'Impactguru' இணையதளமும் தங்களது உதவிக்கரங்களை நீட்டியிருக்கிறது. இந்த இணையதளம் மூலம் விதேஷின் வாழ்வை மீட்டெடுக்க நம்மால் முடிந்த தர்மம் செய்வோம். 

2 வயதுக் குழந்தைக்கு 3 அறுவை சிகிச்சைகள்...

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை Impactguru- வின் விளம்பரதாரர் பகுதி. இதில் கூறப்பட்டுள்ள உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பல்ல. மேலும், வாசகர்கள் இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம். நன்கொடை செய்வதற்கு முன்னர் வாசகர்கள் உண்மைத்தன்மையை சுயாதீனமாக சரிபார்த்துக்கொள்ளவும்.

பின் செல்ல