Published:Updated:

உரிமம் பெற்ற நிறுவனங்கள் ஆன்லைன் மருந்து விற்பனை செய்யத் தடையில்லை! - உயர் நீதிமன்றம்

உரிமம் பெற்ற நிறுவனங்கள் ஆன்லைன் மருந்து விற்பனை செய்யத் தடையில்லை! - உயர் நீதிமன்றம்
News
உரிமம் பெற்ற நிறுவனங்கள் ஆன்லைன் மருந்து விற்பனை செய்யத் தடையில்லை! - உயர் நீதிமன்றம்

உரிமம் பெற்ற நிறுவனங்கள் ஆன்லைன் மருந்து விற்பனை செய்யத் தடையில்லை! - உயர் நீதிமன்றம்

ன்லைனில் மருந்துகளை விற்கும் உரிமம் இல்லாத நிறுவனங்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளதாகச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இணையம் மூலம் மருந்துகளை விற்பனை செய்வதற்குத் தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், ஆன்லைன் மருந்து விற்பனைக்குத் தடை விதித்து, உத்தரவிட்டார். 

இதையடுத்து, `டிஎன்மெட்ஸ்.காம்' (tnmeds.com) மூலம் மருந்துகளை விற்பனை செய்யும் நிறுவனம், இந்தத் தடையின் மூலம், ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்ய உரிமம் பெற்ற நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன என்றும், தாங்கள் மருந்துப் பொருள்களை வாங்கி, விற்பனை மட்டுமே செய்வதாகவும், எனவே, இந்த வழக்கில் தங்களையும் ஒரு தரப்பு வாதியாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என நீதிபதியிடம் முறையிட்டனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதைக் கேட்ட நீதிபதி மகாதேவன், ``ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்ய உரிமம் பெறாத நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உரிமம் பெற்றுள்ள நிறுவனங்கள் அச்சப்பட வேண்டாம்’’ எனவும் கூறினார். இந்த நிலையில், உரிமம் பெறாத நிறுவனங்களின் மீதான தடையை நீக்கக் கோரி, ஆன்லைன் மருந்து நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனு, இன்று (2.11.2018) விசாரணைக்கு வருகிறது!