Published:Updated:

இப்படிப்பட்ட கொடிய நோய் யாருக்கும் வரக்கூடாது! #NeedHelp 

இப்படிப்பட்ட கொடிய நோய் யாருக்கும் வரக்கூடாது! #NeedHelp 
இப்படிப்பட்ட கொடிய நோய் யாருக்கும் வரக்கூடாது! #NeedHelp 

மனித உடல் பல மர்மங்களை உள்ளடக்கியது. மனித உடலை நாம் எவ்வளவு அறிந்து வைத்திருக்கிறோமோ, அந்தளவுக்கு அறியாமலும் இருக்கிறோம். மர்மமான உயிர்க்கொல்லி நோய்கள் பலவற்றுக்குக் காரணம் என்னவென்றும் அதற்கான மருத்துவம் என்னவென்றும் இன்றளவும் கோடிக்கணக்கில் செலவு செய்து ஆராய்ச்சிகள் அல்லும் பகலும் நடந்தவண்ணமே உள்ளன. அசாதாரண சந்தர்ப்பங்களின் காரணமாக சில சமயங்களில் இவ்வகையான நோய்களால் அப்பாவி மனிதர்கள் சிலர் பாதிப்படைகின்றனர். திருப்பூரைச் சேர்ந்த பூஜாவுக்கு நேர்ந்திருப்பதும் இதுவே...

மாறிப்போன தோற்றம்...

திருப்பூரைச் சேர்ந்த மாணவி பூஜா, பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். நவம்பர் ஒன்றாம் தேதி பூஜாவுக்கு காய்ச்சல் ஏற்பட, அவரது பெற்றோர் வீட்டுக்கு அருகிலுள்ள மருத்துவமனைக்கு பூஜாவை அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்து, 'ஒரு நாளைக்கு இரு வேளை மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்' என அறிவுறுத்தி காய்ச்சலுக்கான மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. மறுநாள் காய்ச்சல் அதிகரிக்க, சின்னம்மை வந்தது போல பூஜாவின் உடல் முழுக்க தடிப்புகள் ஏற்பட்டுள்ளன. மறுநாளே, ராமநாதபுரத்திலுள்ள மற்றொரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

இப்படிப்பட்ட கொடிய நோய் யாருக்கும் வரக்கூடாது! #NeedHelp 


 
நேரம் போகப் போக, பூஜாவின் உடலில் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு டாக்டர்களும் பூஜாவின் பெற்றோரும் மிரண்டுபோனார்கள். பூஜாவின் சருமம் கொஞ்சம் கொஞ்சமாக உரிந்து உதிர ஆரம்பித்தது. தீக்குளித்த உடம்பு போல சருமம் கருகி, சற்றும் அடையாளம் காணமுடியாத வகையில் பூஜாவின் தோற்றம் மாறியது. மகளின் இந்த நிலைமையைக் கண்டு ஒருபக்கம் அதிர்ச்சியும் மறுபக்கம் குழப்பமும் கொண்ட பூஜாவின் பெற்றோர் உடனடியாக கோவையில் உள்ள மற்றொரு பெரிய மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர். 
 
ஸ்டீவென்ஸ்-ஜான்சன்ஸ் சின்ட்ரோம் 
 
உடல் முழுக்க காயங்களுடன் வந்தடைந்த பூஜாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு 'ஸ்டீவென்ஸ்-ஜான்சன்ஸ் சின்ட்ரோம்' (Stevens–Johnson syndrome) எனும் அரியவகை நோய் வந்திருப்பதாக தெரிவித்தனர். புதிதாக ஒரு மருந்தை உட்கொள்ளுவதாலும், பிற நோய்த்தொற்றுகளாலும் வரக்கூடிய ஒருவகை கொடூரமான ஒவ்வாமை நோய்தான் இந்த ஸ்டீவென்ஸ்-ஜான்சன்ஸ் சின்ட்ரோம். 'கண்கள், சருமம், உறுப்புகளைப் பாதித்து, உடல் முழுக்க ரணத்தை ஏற்படுத்தும் இந்த அரியவகை நோயை உடனடியாக சரிசெய்வது முக்கியமாகும். இல்லையெனில் உயிருக்கே ஆபத்து ஏற்படும்' என்பது மருத்துவர்கள் கூறும் அறிவுரை. 
 
பூஜாவுக்கு உதவுங்கள்... 
 
பூஜாவின் உயிரைக் காப்பாற்ற தொடர்ந்த மருத்துவக் கண்காணிப்பில் அவரை வைத்திருப்பது அவசியமாகும். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பூஜாவின் பெற்றோர் தங்கள் சக்திக்கும் மீறி இதுவரை 2.5 லட்ச ரூபாயை மருத்துவத்துக்காக செலவழித்துள்ளனர். தற்போது பூஜாவை முழுமையாகக் குணப்படுத்த மேற்சிகிச்சைக்கு 5 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. நிதி திரட்டும் இணைய சேவையான Edudharma பூஜாவுக்காக மருத்துவ நிதி உதவி வேண்டுகிறது. https://www.edudharma.com/campaigns/pooja-medical-allergy எனும் தளம் வாயிலாக நம்மால் ஆன பண உதவியைச் செய்வதன்மூலம் பூஜாவின் உயிரைக் காப்பாற்ற முடியும். 'பூஜாவின் நிலைமையைப் பொறுத்தவரை, நேரம் பொன்னானது. நேரம் போகப் போக அவரின் நிலைமை மோசமடையக் கூடும் என்பதால், அவருக்கு உடனடியாக தகுந்த சிகிச்சையை வழங்குவது கட்டாயமாகும். இதை மனதில்கொண்டு நல்ல உள்ளம் படைத்த அனைவரும் முடிந்தவரை நன்கொடை செய்து பூஜாவின் உயிரைக் காப்பாற்ற வேண்டுகிறோம். பூஜா இக்கொடும் நோயிலிருந்து மீள பிரார்த்திப்போம்" - Edudharma.

நிதி அளிக்க இங்கே செல்லவும் https://www.edudharma.com/campaigns/pooja-medical-allergy.

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை Edudharma- வின் விளம்பரதாரர் பகுதி. இதில் கூறப்பட்டுள்ள உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பல்ல. மேலும், வாசகர்கள் இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம். நன்கொடை செய்வதற்கு முன்னர் வாசகர்கள் உண்மைத்தன்மையை சுயாதீனமாக சரிபார்த்துக் கொள்ளவும்.