Published:Updated:

ரத்த சோகையை சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம்! #NeedHelp

ரத்த சோகையை சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம்! #NeedHelp
ரத்த சோகையை சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம்! #NeedHelp

சாதாரண காய்ச்சல் வந்தாலே பெரியளவில் கவலைப்படும் நாம், உடலில் ஏற்படும் ஒருவித குறைட்பாடை மட்டும் அலட்சியமாக நினைத்து வருகிறோம். அதுதான் 'அனீமியா' என்றழைக்கப்படும் ரத்தசோகை... நமது உடலுக்கு உயிரோட்டம் அளிக்கும் ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் குறைந்திருப்பதையே ரத்தசோகை என்கிறோம். ரத்தசோகையை ஆரம்பத்திலேயே நம்மால் கண்டறிய முடியாது. உடலில் உள்ள சிவப்பு அணுக்கள் கணிசமான அளவு குறைந்து, அதனால் ஏற்படும் விளைவுகள் மூலமே அதைக் கண்டறிய முடியும். ஆகையால் ரத்தசோகை அடிக்கடி உடற்சோர்வு ஏற்படுகிறது என்றால், அதை அலட்சியமாக நினைக்காமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியம்.

பொதுவாகவே, ரத்தசோகை மனித உடலை வலுவிழக்கச் செய்துவிடும், அதிலும் 7 வயது ஜேம்ஸ்-க்கு வந்திருப்பதோ ஏபிளாஸ்டிக் அனீமியா (Aplastic Anemia). இது ரத்தத்தை உற்பத்தி செய்யும் எழும்பு மஜ்ஜை செயல் இழப்பதினால் ஏற்படும் ரத்தசோகையின் இக்கட்டான வகையாகும். 

ரத்த சோகையை சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம்! #NeedHelp

இரண்டு மாதங்களுக்கு முன்பு...

பள்ளிக்குச் சென்றிருந்த ஜேம்ஸிற்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜேம்ஸை பரிசோதித்த மருத்துவர், அவனது கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்; உடலில் உள்ள சிவப்பு அணுக்கள் அதிகளவில் குறைந்துவிட்டதாகவும் தெரிவித்தார். ஜேம்ஸ் ஏபிளாஸ்டிக் அனீமியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மருத்துவர், அவனது உடலில் புதிய ரத்த அணுக்கள் உருவாவது நின்றுவிட்டதாகவும் கூறினார்.  

2-ம் வகுப்பு பயிலும் ஜேம்ஸ், மற்ற குழந்தைகளைப் போல ஓடியாடி விளையாட முடியாது. பல நாள்கள் ரத்த வாந்தியும் எடுத்துள்ளான். சில நேரங்களில் மயக்கம் போட்டு கீழே விழும் அவனைத் தூக்கி அணைக்கும் அவன் பெற்றோரின் வலியை சொல்லி மாளாது. நாளாக ஆக இந்தப் பிரச்னை பெரிதான நிலையில் ஜேம்ஸிற்கு உடனடியாக, எழும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்தாக வேண்டும் என பெற்றோர் லியோ மற்றும் டெய்சிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

``ஹாஸ்பிட்டலில் இருக்கும் எனது மகன் எப்போதும் என்னிடம் சொல்வது, அம்மா... எனக்கு இங்க இருக்க புடிக்கல. எனக்கு வீட்டுக்கு போகணும். ஃபிரண்ட்ஸ் கூட விளையாடணும். ரத்த வாந்தி எடுத்துக்கொண்டு, வலியால் துடிக்கும் என் மகனைப் பார்க்க முடியவில்லை" என்று மகனை நினைத்து கதறுகிறார் தாய் டெய்சி. 

ரத்த சோகையை சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம்! #NeedHelp

கடந்த இரண்டு மாதங்களில் ஜேம்ஸிற்கு 5 முறை புதிய ரத்தம் மாற்றப்பட்டுள்ளது. ரத்த மாற்றத்துக்கான செலவு எக்கச்சக்கம். செலவு ஒருபக்கம் இருந்தாலும், வாழ்நாள் முழுவதும் ரத்த மாற்றம் செய்வது இயலாத காரியமாகும். ஜேம்ஸின் தங்கை, சகோதரனுக்காக தனது எலும்பு மஜ்ஜையை கொடுக்கத் தயாராக இருக்கிறாள். ``என் மகனின் சிகிச்சைக்கு 12 லட்சம் தேவைப்படுகிறது. என்னிடம் உள்ள அனைத்து தொகையையும் சிகிச்சைக்காக செலவு செய்துவிட்டேன். மாதம் 10,000 சம்பாதிக்கும் பஸ் டிரைவரான நான் உதவியற்றிருக்கிறேன்" என்று தந்தை லியோ கண்ணீருடன் மகனை நினைத்து வருத்தப்படுகிறார்.

ஜேம்ஸ் உயிர்ப்பிழைக்க உடனடி எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை தேவைப்படுகிறது. ஜேம்ஸின் பெற்றோர் தங்களிடம் இருந்த ஒட்டுமொத்த சேமிப்பையும் அவனுக்காக செலவழித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவியாய் நாமும் முடிந்த அளவு பண உதவி செய்வதனால், அந்தக் குடும்பத்தின் செல்ல மகனை அவர்களுக்கு நம்மால் மீட்டுத்தர முடியும் என்று 'Edudharma' நம்புகிறது. ஜேம்ஸிற்கு உதவி செய்ய முன்வந்திருக்கும் Edudharma-வின் https://www.edudharma.com/campaigns/savejames எனும் இணையதள லிங்கிற்குச் சென்று ஒரு உயிரைக் காப்பாற்ற நாமும் கைகொடுப்போம்.

ரத்த சோகையை சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம்! #NeedHelp

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை Edudharma- வின் விளம்பரதாரர் பகுதி. இதில் கூறப்பட்டுள்ள உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பல்ல. மேலும், வாசகர்கள் இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம். நன்கொடை செய்வதற்கு முன்னர் வாசகர்கள் உண்மைத்தன்மையை சுயாதீனமாக சரிபார்த்துக் கொள்ளவும்.