தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

சரும அழகு தரும் வைட்டமின் சி

சரும அழகு தரும் வைட்டமின் சி
பிரீமியம் ஸ்டோரி
News
சரும அழகு தரும் வைட்டமின் சி

சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்

ழகான, இளமையான சருமம் கொண்டவர்களைப் பார்த்து, ‘அடிக்கடி ஃபேஷியல் பண்ணு வாங்களோ... காஸ்ட்லியான க்ரீம் யூஸ் பண்ணுவாங்களோ...’ என்றெல்லாம் நினைக்கத் தோன்றும். “சரும அழகுக்கு அவ்வளவு மெனக்கெட வேண்டியதில்லை. ‘வைட்டமின் சி’ என்கிற சிறிய விஷயத்தைக் கவனித் தால் போதும். என்றும் பதினாறாக வலம் வரலாம்” என்கிறார் சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்.

ஆரோக்கியத்தின் அடிப்படை

தண்ணீரில் கரையக்கூடிய வைட்டமின் சி  ‘எல் அஸ்கார்பிக் ஆசிட்’  (L-Ascorbic Acid) என்றும் அழைக்கப்படுகிறது. வைட்டமின் சி, அளவுக்கதிமாக உடலில் தங்காது. அதிகப்படியானது உடலால் வெளியேற்றப்படும். அதனால்தான் அதன் இழப்பை அவ்வப்போது ஈடுகட்ட வலியுறுத்தப்படுகிறது. வைட்டமின் சி போதுமான அளவு உள்ளவர்கள் அடிக்கடி நோய்வாய்ப்பட மாட்டார்கள். காரணம், அது தரும் எதிர்ப்பு சக்தி. அழகுக்கும் இதுவே அடிப்படை.

சரும அழகு தரும் வைட்டமின் சி

குறைந்தால் என்ன ஆகும்?

வைட்டமின் சி சத்தை உடல் உற்பத்தி செய்வதில்லை. உணவின் மூலமே அதைப் பெற முடியும். வைட்டமின் சி பற்றாக்குறையின் விளைவாக ‘ஸ்கர்வி’ எனப்படுகிற பிரச்னை வரும். தசைகளில் பலவீனம், சருமத்தில் தடிப்புகள், பற்கள் விழுவது, ஈறுகளில் ரத்தக் கசிவு போன்றவை இதன் அறிகுறிகள். பிற அறிகுறிகள்...

•  ஈறுகளில் வீக்கம், அழற்சி

• காயங்கள் ஆறுவதில் தாமதம்

• கூந்தல் நுனிகள் வறண்டும் வெடித்தும் போவது

• சருமம் தடித்து வறண்டு போவது

• மூக்கில் ரத்தக்கசிவு

• எதிர்ப்பு சக்தியின்மை

• மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம்

• எடை அதிகரிப்பு

வைட்டமின் சி என்ன செய்யும்?

• இதய ஆரோக்கியம் காக்கும்.

• ரத்த அழுத்தத்தை முறைப்படுத்தும்.

• எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

• புற்றுநோய் அபாயங்களைக் குறைக்கும்.

• ஆஸ்டியோஆர்த்ரைடிஸ் பிரச்னை அபாயங்களைத் தவிர்க்கும்.

• பார்வைத் திறனை மேம்படுத்தும்.

• கர்ப்பகால ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

• ஈறுகளின் ஆரோக்கியம் காக்கும்.

• வாய் வறட்சியைப் போக்கும்.

• வைரஸ் தொற்று ஆபத்துகளைக் குறைக்கும்.

• எடைக் குறைப்புக்கு உதவும்.

• நல்ல மனநிலைக்கு உதவும்.

• சரும நோய்களை விரட்டும். சருமத்தின் அழகையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

• கூந்தல் வளர்ச்சியைத் தூண்டும்.

• இளநரையைத் தடுத்து, பொடுகை விரட்டும்.

சரும அழகு தரும் வைட்டமின் சி

எப்படிப் பெறலாம்?

குடமிளகாய், புரோகோலி, பப்பாளி, மாம்பழம், அன்னாசி, எலுமிச்சை, ஆரஞ்சு, கிவி, நெல்லிக்காய்.

எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்?

• வைட்டமின் சி அதிகமுள்ள காய்கறி மற்றும் பழங்களில் சாலட் செய்து தினமும் சாப்பிடலாம்.  காலை உணவுடன் வைட்டமின் சி நிறைந்த பழ ஜூஸ் எடுத்துக்கொள்ளலாம்.

வெளிப்புறப் பூச்சில் வைட்டமின் சி

• வைட்டமின் சி க்ரீமைவிடவும் வைட்டமின் சி சீரம் (Serum) அதிக பலன்களைத் தரக்கூடியது. வைட்டமின் சி-யை வெளிப்புறமாக உபயோகிக்கும்போது சருமத்தின் நுண்ணிய சுருக்கங்கள் மறைகின்றன.

• மங்கு எனப்படும் `பிக்மென்ட்டேஷன்' பிரச்னை சரியாகும். வெளிப்புற மாசு ஏற்படுத்தும் ‘ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்’ஸில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும். யுவிஏ மற்றும் யுவிபி கதிர்களால் ஏற்படும் பாதிப்புகளும் தவிர்க்கப்படும்.

சருமம் கருமை நிறமடையக் காரணமான மெலனின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும்.

எப்படி உபயோகிப்பது?

மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே வைட்டமின் சி சீரம்  உபயோகிக்கப்பட வேண் டும். அது பிரவுன் நிறத்துக்கு மாறாமலிருக்கிறதா என்று கவனித்து உபயோகிக்க வேண்டும்.

பகல் வேளையில் சருமத்தில் வைட்டமின் சி சீரம் தடவி, ஐந்து நிமிடங்கள் காத்திருந்து, அதன்மீது சன் ஸ்கிரீன் உபயோகிக்கலாம்.

முதலில் சருமத்தின் இறந்த செல்களை நீங்கும்படி ஸ்க்ரப் செய்ய வேண்டும். வைட்டமின் சி சீரமானது சருமத்தை ஒரே நிறத்துக்கு மாற்றும். வெளிப்புற மாசினால் உண்டான பாதிப்பிலிருந்து பாதுகாக்கும். சருமத்தை வறண்டு போகாமல் காக்கும்.

கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து இளமையோடு வைக்கும். சருமத்தின் தழும்புகளை நீக்கும். வெயிலின் பாதிப்புகளிலிருந்து காக்கும். பருக்கள் ஏற்படுத்திய வடுக்களைப் போக்கும்.

சரும அழகு தரும் வைட்டமின் சி