Published:Updated:

மழலை முதல் பருவ வயது வரை: வழிகாட்டும் டாக்டர் விகடனின் 10 அம்சங்கள்!

மழலை முதல் பருவ வயது வரை: வழிகாட்டும் டாக்டர் விகடனின் 10 அம்சங்கள்!
மழலை முதல் பருவ வயது வரை: வழிகாட்டும் டாக்டர் விகடனின் 10 அம்சங்கள்!

இந்த இதழ் டாக்டர் விகடன்: https://bit.ly/2rQvI72

மழலை முதல் பருவ வயது வரை: வழிகாட்டும் டாக்டர் விகடனின் 10 அம்சங்கள்!

யாருடைய செல்போன் லாக் செய்யப்படாமல் இருக்கிறதோ, எந்தக் குடும்பத்தில் ஒருவருடைய செல்போனை மற்றொருவர் சுதந்திரமாக எடுத்துப் பயன்படுத்த முடிகிறதோ அந்தக் குடும்ப உறுப்பினர்களுக்கிடையே கம்யூனிகேஷன் சிறப்பாக இருக்கிறது என்று அர்த்தம். இந்தப் புரிந்துணர்வு சிறப்பாக இருந்தால், தனியாகத் தூங்கும் நேரத்திலும் குழந்தைகள் இயல்பாக இருப்பார்கள்; தவறு செய்ய மாட்டார்கள்...

மழலை முதல் பருவ வயது வரை: வழிகாட்டும் டாக்டர் விகடனின் 10 அம்சங்கள்!

`பள்ளியில் என்னைப் பார்த்து சக மாணவன் காதலிப்பதாகச் சொன்னான். எனக்கு மிகவும் பயமாகிவிட்டது. நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். அதைப் பற்றி யோசித்து யோசித்து எனக்குள் பதற்றம் வந்துவிட்டது. இரவு முழுக்கத் தூங்கவில்லை' என்று பதின்பருவ வயதிலுள்ள மகள் உங்களிடம் சொன்னால், முதலில் காதுகொடுத்துக் கேளுங்கள். அதன் பிறகு, உங்கள் மகளுக்குத் தைரியம் கொடுங்கள்...

- குழந்தைகள் தனியறையில் தூங்குகின்ற பெட்ரூம் கல்ச்சர் நம் ஊரிலிருக்கும் குழந்தைகளுக்கு சரிவருமா... குழந்தைகள் தனியறையில் படுப்பது அவர்களது உடல், மன வளர்ச்சிக்கு நல்லதா, கெட்டதா? என்பதை விரிவாகப் பதிவு செய்திருக்கிறது, 'குழந்தைகளுக்குத் தனியறை... பரவலாகும் கலாசாரம்' எனும் கவர் ஸ்டோரி.

மழலை முதல் பருவ வயது வரை: வழிகாட்டும் டாக்டர் விகடனின் 10 அம்சங்கள்!

மார்பகங்களில் மாற்றம் ஏற்பட்டு, பிறகு பிறப்புறுப்பு மற்றும் அக்குள் பகுதிகளில் ரோம வளர்ச்சி உண்டாகி, அதன் பிறகு முதல் உதிரப்போக்கு ஏற்படுவது `மெனார்கி' (Menarche) என்று அழைக்கப்படுகிறது. இதைத்தான் வழக்குமொழியில், `பெண் குழந்தை பெரியமனுஷி ஆகிவிட்டாள்' அல்லது `வயதுக்கு வந்துவிட்டாள்' என்று சொல்கிறோம். ஆக, ஒரு பெண் குழந்தை வயதுக்கு வருவது என்பது திடீரென்று ஒருநாளில் நடந்துவிடுவதில்லை. 8, 9 வயதிலிருந்தே இதற்கான முன் மாற்றங்கள் உடலில் நடைபெற ஆரம்பிக்கின்றன. அதனால், பெண் குழந்தைக்கு மார்பகங்களில் மாற்றம் ஏற்பட ஆரம்பிக்கும் காலத்திலிருந்து ஒன்று முதல் இரண்டு வருடங்களில் தன் குழந்தை பருவமடைந்துவிடுவாள் என்று அம்மா புரிந்துகொள்ள வேண்டும்...

- அதுவரை குழந்தைச் சிரிப்பும், குழிவிழுந்த கன்னமுமாக வளையவந்த பெண் குழந்தை, சட்டென்று ஒருநாள் பெரியமனுஷி ஆகிவிடுகிறாள். பருவமடையும் பெண் குழந்தையின் உடலில், மனதில் ஏற்படும் மாற்றங்கள், சந்திக்கும் ஆரோக்கியம் சார்ந்த பிரச்னைகள், அந்தரங்கச் சுத்தம் குறித்த ஆலோசனைகள், சாப்பிட வேண்டிய உணவுகள், போட்டுக்கொள்ள வேண்டிய தடுப்பூசிகள்... எனப் பருவமடைந்த அல்லது பருவமடையும் நிலையில் இருக்கிற பெண் பிள்ளைகளின் அம்மாக்களுக்கான ஏ டு இஸட் தகவல்களை வழங்குகிறது, 'வாடி ராசாத்தி! - மகள்களைப் பெற்ற மகராசிகளுக்கு...' சிறப்பு இணைப்புப் பகுதி.

மழலை முதல் பருவ வயது வரை: வழிகாட்டும் டாக்டர் விகடனின் 10 அம்சங்கள்!

பொதுவாக காய்கறிகள், பழங்கள் போன்றவற்றிலிருக்கும் சர்க்கரை, நம் உடலுக்குப் பெரிய அளவில் கேடு விளைவிக்காது. ஆனால், குளிர்பானங்கள், டீ,  காபி, பிஸ்கட்,  இனிப்புப் பண்டங்கள், ஜாம், சாக்லேட், ஐஸ்க்ரீம், கேக் போன்றவற்றில் சேர்க்கப்படும் சர்க்கரைதான் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. சர்க்கரை வெண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக, `ரீஃபைண்டு' என்ற பெயரில் பல்வேறு ரசாயனங்கள் சேர்க்கப்பட்டு, சுத்திகரிக்கப்படுகிறது. இதை அதிகமாகப் பயன்படுத்தினால், பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும். ``சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை நீண்டநாள்களுக்கு, அதிக அளவில் சாப்பிட்டால், உடல் பருமன், சர்க்கரைநோய், இதயநோய் எனப் பல்வேறு பிரச்னைகள் ஏற்படலாம்...’’

- சர்க்கரை நம் உடலில் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது பற்றி விரிவாகப் பேசுகிறது 'மறதிநோய்க்கு வெல்கம் சொல்லலாமா?' - சுகர் அலர்ட் சிறப்புக் கட்டுரை.

மழலை முதல் பருவ வயது வரை: வழிகாட்டும் டாக்டர் விகடனின் 10 அம்சங்கள்!

* ரத்தத்தில் இயல்பான அளவைவிட அதிக ரத்தச் சிவப்பணுக்கள் அல்லது ஹீமோகுளோபின் இருந்தால் ரத்தம் கெட்டியாகிவிடும். இதனால் ரத்த உறைதல் பிரச்னை ஏற்பட்டு மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. 

இந்த இதழ் டாக்டர் விகடன்: https://bit.ly/2rQvI72

* ரத்தத்திலுள்ள கழிவுகளைச் சுத்திகரிப்பது, உடலில் தங்கும் உப்பு, தண்ணீர் ஆகியவற்றின் அளவைச் சீராகப் பராமரிப்பது, ரத்தத்திலுள்ள யூரியா, கிரியாட்டினின் போன்றவற்றை வெளியேற்றுவது ஆகிய பணிகளை சிறுநீரகங்கள் செய்கின்றன. சிறுநீரகம் கழிவுகளை அகற்றும் திறனை இழப்பதை `சிறுநீரகச் செயலிழப்பு' என்கிறோம். இதனால், தேவையற்ற நச்சுகள் அதிகரித்து, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.]

- ரத்தம் தொடர்பாக மட்டும் 70-க்கும் மேற்பட்ட நோய்கள் இருக்கின்றன. முக்கியமான சில நோய்களையும் சிகிச்சை முறைகளையும் தெளிவாகப் புரியவைக்கிறது 'ரத்தம்... ஒரு பயணியின் கதை!' எனும் 'டாக்டர் 360' பகுதி.

மழலை முதல் பருவ வயது வரை: வழிகாட்டும் டாக்டர் விகடனின் 10 அம்சங்கள்!

நாய்களின் உடலில் பலவிதமான புழுக்கள் வளர்கின்றன. இவற்றின் மூலம் பரவும் அபாயகரமான பிரச்னை அழற்சி நோய் (Lyme Disease). இதற்கு `உண்ணிக் காய்ச்சல்' (Tick Fever) என்ற பெயரும் உண்டு. அதாவது, நாய்களின் உடலிலிருக்கும் நோய்த்தொற்று உண்ணிகள் நம்மைக் கடிக்கும்போது முதலில் அந்த இடத்தில் எரிச்சல் ஏற்பட்டு தலைவலி, காய்ச்சல், குளிர் காய்ச்சல் வரும். இதைக் கண்டுகொள்ளாவிட்டால் உண்ணி வழியாகப் பரவும் பாக்டீரியா, புழுக்கள் மூலம் வாதம், நரம்பியல் பிரச்னைகள் ஏற்படலாம்... 

வளர்ப்புப் பிராணிகள் கடித்தாலோ அல்லது நகங்களால் கீறினாலோ உடனே சோப்பு போட்டு நன்றாகக் கழுவிவிட வேண்டும். பிறகு மருத்துவனைக்குச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். நோய்வாய்ப்பட்டவர்கள் செல்லப்பிராணிகளைத் தொடாமல் இருப்பது நல்லது... 

- நோய் எதிர்ப்பு சக்தியையும் மீறி ஒட்டுண்ணிகளால் ஏற்படும் பாதிப்புகள், வளர்ப்புப் பிராணிகளிடமிருந்து பரவும் நோய்கள், ஒட்டுண்ணிகள் தொற்றாதபடி கால்நடைகளை எப்படிப் பராமரிப்பது என முழுமையாக விளக்குகிறது `ஒட்டுண்ணிகள் நிகழ்த்தும் மாய விளையாட்டு!' எனும் சிறப்புப் பார்வை.

மழலை முதல் பருவ வயது வரை: வழிகாட்டும் டாக்டர் விகடனின் 10 அம்சங்கள்!

கருச்சிதைவு அல்லது கருக்கலைப்பு, பெண்களுக்கு எளிதில் அழிக்க முடியாத வடுக்களை விட்டுச்செல்கிறது. அதற்கான ஒரே மருந்து, மீண்டும் கருத்தரித்து, ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதுதான். ஆனால், இன்றைய காலகட்டத்தில், கருச்சிதைவு / கருக்கலைப்புக்குப் பின்னர் கருத்தரிப்பது பெரும் சவாலாக இருக்கிறது. இதற்கான காரணங்கள், தீர்வுகள் பற்றி விளக்கமளிக்கிறது 'கருவே கலையாதே! - வலி தீர்க்கும் வழிகள்' எனும் முக்கிய ஆர்ட்டிகிள். 

மழலை முதல் பருவ வயது வரை: வழிகாட்டும் டாக்டர் விகடனின் 10 அம்சங்கள்!

...இந்த ஈஸ்ட்ரோஜென், டெஸ்டோஸ்டீரான் போன்றவைதான் ஆண், பெண் இனப்பெருக்கத்துக்குக் காரணமாக இருக்கின்றன. ஈஸ்ட்ரோஜென் குறையும்போது முறையற்ற மாதவிலக்கு அல்லது பெண்கள் வயதுக்கு வராமல் இருப்பது போன்ற பிரச்னைகள் உண்டாகும். அதே நேரத்தில் ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அளவுக்கு அதிகமாகச் சுரக்கும்போது சினைப்பையில் கட்டிப் போன்ற பிரச்னைகள் ஏற்படும். ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் அளவு அதிகரிக்கும்போது முகப்பரு, சருமத்தில் எண்ணெய் வழிதல், புராஸ்டேட் சுரப்பியில் வீக்கம், விந்தணு உற்பத்தி குறைவது, விரை வீக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படும்...

- முக்கியத்துவம் வாய்ந்த ஹார்மோன்கள் குறித்தும், ஹார்மோனல் இம்பேலன்ஸ் குறித்தும் விரிவாக விளக்குகிறது, 'சர்வம் ஹார்மோன் மயம்!' எனும் கட்டுரை.

மழலை முதல் பருவ வயது வரை: வழிகாட்டும் டாக்டர் விகடனின் 10 அம்சங்கள்!

சில குழந்தைகள், பிறந்து பல ஆண்டுகள் ஆன பிறகும் ஓரிரு வார்த்தைகளைப் பேசக்கூட மிகவும் சிரமப்படுவார்கள். அதை, `மொழிக் குறைபாடு' என்போம். பெற்றோர் என்னதான் பேசக் கற்றுக்கொடுத்தாலும், அவர்களால் சரியாகப் பேச முடியாது. 'ஸ்பீச் தெரபி' என்னும் பேசுவதற்குரிய சிறப்புப் பயிற்சிகளை வழங்கினால் மட்டுமே அவர்களின் பேசும் திறனை மேம்படுத்த முடியும்'' என்கிறார் பேச்சு சிகிச்சை மற்றும் நோய்க் குறியியல் மருத்துவர் பொன்மதி. யாருக்கெல்லாம் பேசுவதில் சிரமம் ஏற்படும், அதைச் சரிசெய்வது எப்படி என்று விரிவாக விளக்குகிறது 'ம்மா... ப்பா... ங்கா... - மழலைச்சொல் கேட்போம்!' எனும் பகுதி. 

மழலை முதல் பருவ வயது வரை: வழிகாட்டும் டாக்டர் விகடனின் 10 அம்சங்கள்!

``எந்தக் குறைபாடும் இல்லாத ஒரு பெண் தனியா வாழறதே சாதனைதான். வேலைக்காக வெளியில வந்து எட்டு வருஷங்களுக்கு மேல ஆகிட்டாலும்கூட, தனியா இருக்குற ஒரு பெண்ணை நோக்கி வரும் கேள்விகளை நான் இன்னும் எதிர்கொள்ளத்தான் செய்யறேன். அம்மா, அப்பாவோட செல்லமா நான் இருந்தாக்கூட, அவங்களைச் சார்ந்திருக்கறதை நான் விரும்பலை. இது என் வீடு. சமையல், வீட்டு வேலைக்கு உதவியாளர் வந்துட்டுப் போனாலும், பெரும்பாலான நேரம் எனக்கானதுதான். 'சுயசார்பு'தான் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரே மருந்து. அரசாங்கமும் சமூகமும் கொடுக்க வேண்டியது சுயசார்புத் தன்மை. பரிதாபம் தேவையில்லாதது. பரிதாப உணர்வுதான் அவர்களுக்குத் தரப்படுற பெரிய சங்கடம்..."

தன்னுடைய 10 வயதுக்குள்ளாகவே ஐந்து அறுவைசிகிச்சைகளைக் கடந்திருக்கிறார் வித்யா. கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப்பில் முதுநிலைப் படிப்பை முடித்துவிட்டு, மனிதவள மேம்பாட்டுத்துறையில் வெற்றிகரமாக வலம்வரும் அவர் கடந்து வந்த தன்னம்பிக்கைப் பாதையை நமக்குக் காட்டுகிறது. ``தோல்வி என்பது வாழாத நிமிடங்களும் போராடாத தருணங்களும்’’ எனும் சிறப்புச் சந்திப்பு.

மழலை முதல் பருவ வயது வரை: வழிகாட்டும் டாக்டர் விகடனின் 10 அம்சங்கள்!

ரவிந்திரா 'தன்னோடு தோள்கொடுத்துப் பணியாற்ற, தன்னைப் புரிந்துகொண்ட ஓர் இணை இருந்தால் வசதியாக இருக்கும்' என்று நினைத்தார். நீண்ட தேடலுக்குப் பிறகு, நாக்பூரிலேயே மருத்துவராக இருந்த ஸ்மிதா என்ற பெண்ணை ரவிந்திரா சந்தித்துப் பேசினார். ஸ்மிதாவிடம் கறாரான சில நிபந்தனைகளை முன்வைத்தார்.

``தினமும் 40 கி.மீ சலிக்காமல் நடக்க வேண்டும். வெறும் 5 ரூபாய் செலவில் நீதிமன்றத்தில் பதிவுத் திருமணம்தான் செய்துகொள்வேன். ஒரு நோயாளியிடம் கட்டணமாக ஒரு ரூபாய் மட்டுமே வாங்குவேன். மாதம் சுமார் 400 ரூபாய் வருமானத்தில் குடும்பச் செலவுகளைச் சமாளிக்க வேண்டும். கிராம மக்களுக்குச் சேவை செய்ய பிச்சை எடுக்கவும் தயாராக இருக்க வேண்டும்..."

- ரவிந்திரா, ஸ்மிதாவின் அசாத்திய சேவைப் பயணத்தை நெகிழ்ச்சியுடன் சொல்கிறது 'மாண்புமிகு மருத்துவர்கள்!' தொடர் பகுதி. 

இந்த வார டாக்டர் விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க:  https://bit.ly/2EHLREE