Published:Updated:

2018-ல் கூகுளில் அதிகமாகத் தேடப்பட்ட 10 மருத்துவக் கேள்விகள்!

2018-ல் கூகுளில் அதிகமாகத் தேடப்பட்ட 10 மருத்துவக் கேள்விகள்!
2018-ல் கூகுளில் அதிகமாகத் தேடப்பட்ட 10 மருத்துவக் கேள்விகள்!

உலகம் முழுவதும் இருக்கும் பொதுவான பிரச்னை நெஞ்செரிச்சல். நெஞ்செரிச்சல், எரிச்சல் உணர்வு இதயம், கழுத்து தொண்டைப்பகுதிக்குப் பரவுவது ஏன் என்பது குறித்து அதிகம் தேடப்பட்டுள்ளது.

கூகுள் இல்லாமல் நம் அன்றாடத் தேடல்கள் நிறைவடைவதே இல்லை. வீட்டுச் சாவியைக் கூட தொலைத்துவிட்டு கூகுளில் தேடிப் பார்க்கும் நிலைக்கு வந்துவிட்டோம். கூகுளில் தேடப்படும் அனைத்துக்கும் பதில் கிடைக்கும் என்றாலும், சில நேரம் அவை முழுமையான தீர்வை அளிப்பதில்லை என்பதையும் மறுக்க முடியாது. 2018-ம் ஆண்டு கூகுளில் மருத்துவம் தொடர்பாக அதிகம் தேடப்பட்ட முதல் 10 விஷயங்களை கூகுள் நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. அவற்றில் பொதுவான விஷயங்களான காய்ச்சல், நெஞ்செரிச்சல், ரத்த அழுத்தம் ஆகியவையும் இடம்பிடித்துள்ளன.

1. கீட்டோ டயட்

கீட்டோ உணவுமுறை பற்றிய தேடல்தான் இவற்றில் முதலிடம் பிடித்துள்ளது. கொழுப்புச் சத்து மற்றும் புரதச்சத்து அதிகமாகவும், கார்போஹைட் குறைவாகவும் அடங்கியுள்ள உணவுதான் கீட்டோ உணவுமுறை. இந்த வகை உணவுகள் செரிமானத்துக்குப் பின் கொழுப்பாக மாறாமல் ஆற்றலாக மாறும். ஆனால், இந்த உணவு முறையை நீண்ட காலம் தொடர இயலவில்லை என்றும் பாஸ்தா, பிரட் போன்ற உணவுகளை பெரும்பாலானவர்களால் தவிர்க்க முடியவில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

2. ஸ்டீபன் ஹாக்கிங்ஸைப் பாதித்த நோய் 

இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் இந்த ஆண்டு மார்ச் 14-ம் தேதி உயிரிழந்தார். அமியோட்ரோபிக் லேட்ரல் ஸ்கிளீரோசிஸ் (Amyotrophic lateral sclerosis) என்ற நரம்பு சார்ந்த நோயால் இவர் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நரம்பு மண்டல நோயானது மூளை மற்றும் முதுகெலும்புத் தண்டுவடத்தில் இருக்கும் நரம்பு செல்களைப் பாதித்து அவர்களின் இயக்கத்தை ஒட்டுமொத்தமாகப் பாதித்துவிடும். 1963-ம் ஆண்டே இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டாலும், ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் உயிரிழந்த சமயத்தில்தான் இந்த நோயைக் குறித்து அதிகமானோர் கூகுளில் தேடியுள்ளனர். 

3. தொலைக்காட்சி நட்சத்திரத்தைப் பாதித்த கருப்பை நோய்   

ஹெச்பிஐ தொலைக்காட்சித் தொடரின் நடித்த பிரபலம் லீனா டன்ஹாம், என்டோமெட்ரியோஸிஸ் (Endometriosis) என்ற கருப்பை நோயினால் பாதிக்கப்பட்டார். கருப்பையினுள் சாதாரணமாக வளர வேண்டிய திசு, கருப்பையின் வெளிப்புறத்தில் வளருவதே என்டோமெட்ரியோஸிஸ். இதனால் கர்ப்பப்பையில் வலி மற்றும் மலட்டுத்தன்மை ஏற்படும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட லீனாவுக்குக் கர்ப்பப்பையை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தனக்கு நேர்ந்த பிரச்னையை வெளியுலகத்துக்குத் தெரிவித்து, விழிப்பு உணர்வு ஏற்படுத்தியும் வருகிறார் லீனா. கூகுளில் மூன்றாவதாகத் தேடப்பட்ட மருத்துவப் பிரச்னை இதுதான்.

 4. சிறுநீரில் கஞ்சா! 

மரிஜூவானா எனப்படும் கஞ்சா பயன்பாட்டால் உடலில் ஏற்படும் விளைவுகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டன. இந்த போதைப்பொருளானது மூளையையும் உடலின் பல்வேறு பகுதிகளையும் பாதிக்கும். ஆனால், இதன் பாதிப்பு நபருக்கு நபர் வேறுபடும். ஒருமுறை இந்தக் கஞ்சாவைப் பயன்படுத்தினால் சிறுநீரில் அதன் தன்மை 1 முதல் 30 நாள்கள் வரை காணப்படும் என்கிறது ஆய்வு முடிவுகள். ஒருவரின் சிறுநீரில் கஞ்சாவின் தன்மை எத்தனை நாள்களுக்கு நீடிக்கும் என்று பலர் கூகுளில் தேடியுள்ளனர்.

5. எவ்வளவு காலம் காய்ச்சல் நீடிக்கும்? 

கூகுள் தேடலில் இடம்பெற்ற முதல் பத்து மருத்துவத் தலைப்புகளில் காய்ச்சல் இரண்டு முறை இடம்பிடித்துள்ளது. காய்ச்சல்களால் ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர். தமிழகம் மட்டுமன்றி காய்ச்சல் குறித்த உலகம் முழுவதும் பல நாட்டினரிடம் இந்த பீதி காணப்பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக காய்ச்சல் எவ்வளவு காலம் உடலில் நீடிக்கும், காய்ச்சலைப் போக்குவது எப்படி என்று இணையத்தில் அதிகமானோர் தேடியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, காய்ச்சல் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு எவ்வாறு தொற்றுகிறது என்றும் தேடியுள்ளனர்.

6. கரு உருவாகும்போது ரத்தப்போக்கு

புதிதாகக் கர்ப்பம் தரித்தவர்களுக்கு ஏற்படும் ரத்தப்போக்கு குறித்து பலர் தேடியுள்ளனர். புதிதாகக் கர்ப்பம் தரித்தவர்கள் மற்றும் தாய்மை அடையை நினைப்பவர்கள் இது குறித்து அதிகமாகத் தேடியுள்ளனர் என்கிறது கூகுள். கர்ப்பம் உறுதி செய்த 10 - 14 நாள்களுக்குப் பின்னர் ஏற்படும் இந்த ரத்தப்போக்கினால் பயப்படுவதற்கு எதுவும் இல்லை. புதிதாகத் திருமணமானவர்கள் இந்த அறிகுறியைக் கண்டறிந்த பின் பதற்றமின்றி மருத்துவரை அணுகினால் ஒரு நல்ல செய்தியுடன் திரும்புவீர் என்கிறார்கள். 

7. எப்போதும் சோர்வு ஏன்? 

உலகளவில் இளைஞர்களால் அதிகம் தேடப்பட்ட விஷயம் `சோர்வாக இருப்பது ஏன்' என்பது. போதுமான அளவு தூக்கம், சரியான உணவுப்பழக்கம் இருந்தாலும் ஏன் எப்போதும் சோர்வாக இருக்கிறது என்று பலர் கூகுளில் தேடியுள்ளனர். எப்போதும் போல் இல்லாமல் திடீரென்று அதிகச் சோர்வாக இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். 

8. நெஞ்செரிச்சல், ரத்த அழுத்தம்

உலகம் முழுவதும் இருக்கும் பொதுவான பிரச்னை நெஞ்செரிச்சல். நெஞ்செரிச்சல், எரிச்சல் உணர்வு இதயம், கழுத்து தொண்டைப் பகுதிக்குப் பரவுவது ஏன் என்பது குறித்து அதிகம் தேடப்பட்டுள்ளது. இறுதியாக, உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன என்றும் அதிகம் தேடியுள்ளனர். மருத்துவம் தொடர்பாக இணையம் அளிக்கும் பதில்கள் எப்போதும் கேள்விக்குரியவையே. இணையத்தில் கிடைக்கும் பதில்களை அப்படியே எடுத்துக்கொள்ளாமல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதுதான் சிறந்தது.
 

அடுத்த கட்டுரைக்கு