Published:Updated:

கூடற்கலை to நாள் ஒழுக்கம்: டாக்டர் விகடன் 8-ம் ஆண்டு சிறப்பிதழின் 10 அம்சங்கள்!

கூடற்கலை to நாள் ஒழுக்கம்: டாக்டர் விகடன் 8-ம் ஆண்டு சிறப்பிதழின் 10 அம்சங்கள்!
கூடற்கலை to நாள் ஒழுக்கம்: டாக்டர் விகடன் 8-ம் ஆண்டு சிறப்பிதழின் 10 அம்சங்கள்!

கூடற்கலை to நாள் ஒழுக்கம்: டாக்டர் விகடன் 8-ம் ஆண்டு சிறப்பிதழின் 10 அம்சங்கள்!

இந்த இதழ் டாக்டர் விகடன்:  https://bit.ly/2F3gl3b

கூடற்கலை to நாள் ஒழுக்கம்: டாக்டர் விகடன் 8-ம் ஆண்டு சிறப்பிதழின் 10 அம்சங்கள்!

பதற்ற உணர்வு அதிகமாகி ஏற்படும் பாதிப்புதான் 'ஆங்ஸைட்டி அட்டாக்' (Anxiety Attack). ஏற்கெனவே, அதீத மனஅழுத்தத்தில் இருப்பவர்களுக்கு இ்ந்த வகை பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மனஅழுத்தம் மட்டுமின்றி, எதிர்பாராத சூழலில் நடக்கும் ஏதாவதொரு சம்பவம்கூட, இந்த பாதிப்பை ஏற்படுத்தலாம். உதாரணமாக,  திடீரென யாரேனும் தாக்க வரும் சூழல், எதிர்பார்த்திராத விபத்தை சந்திக்க நேர்வது போன்றவை. பதற்றம் அதிகமாகும்போது, 'ஆங்ஸைட்டி அட்டாக்' ஏற்படும் என்பதுதான் அடிப்படை. இதுபோலவே மற்றொரு வகை பாதிப்புதான், 'பேனிக் அட்டாக்' (Panic Attack). அதாவது, பயத்தால் ஏற்படும் பிரச்னை. இந்தப் பிரச்னைகளில், உடல் சார்ந்த பிரச்னைகளைவிட மனம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுவதற்கே வாய்ப்புகள் அதிகம். காரணம், பயம் அதிகரிக்கும்போது பதற்றம், அதிர்ச்சி போன்ற உணர்ச்சிகளும் அதிகரிக்கும். எனவே, சில நிமிடங்களில் பிரச்னை அதன் தீவிரத்தன்மையை அடைந்துவிடும்...

கூடற்கலை to நாள் ஒழுக்கம்: டாக்டர் விகடன் 8-ம் ஆண்டு சிறப்பிதழின் 10 அம்சங்கள்!

- மனம் சார்ந்து ஏற்படும் ஒரு பிரச்னை, மாரடைப்பு ஏற்படுவது போன்றதொரு மாயபிம்பத்தை நம் மனதில் ஏற்படுத்துமா என்பது மட்டுமின்றி, தவிர்க்கக் கூடாத அறிகுறிகள் மற்றும் முதலுதவி, சிகிச்சைகளையும் அடுக்குகிறது 'இது மாரடைப்பு அல்ல!' எனும் சிறப்புக் கட்டுரை.

கூடற்கலை to நாள் ஒழுக்கம்: டாக்டர் விகடன் 8-ம் ஆண்டு சிறப்பிதழின் 10 அம்சங்கள்!

சந்தோஷின் 'அந்த'த் திறமை நண்பர்கள் மத்தியில் வெகு பிரபலம். அதற்காகவே அவருக்கு ஒரு பெயர் வைத்திருந்தார்கள்... 'வித்தைக்காரன்.' ஆனால், அவரது வித்தை மனைவியிடம் பலிக்கவில்லை. வசதியான தனியறை, பிரமாண்டமான கட்டில், ஏ.சி., மணக்க மணக்கக் கூந்தலில் மல்லிகைப் பூ வைத்துக்கொண்டு தொட்டுவிடும் தூரத்தில் மனைவி. கண்ணுக்கு லட்சணமான பெண். பேரழகி.

 எல்லாம் சரியாக இருந்தும் மனைவியிடம், 'அது' மட்டும் சந்தோஷால் முடியவில்லை. மனைவியைத் தொட்டதுமே மரவட்டை மாதிரி சுருண்டுகொண்டது மனது. பிறகு, தூக்கம் வந்ததுபோல பாவனைசெய்து, கண்களை மூடிக்கொள்வார். 'ஒரு மாதத்தில் சரியாகிவிடும், இரண்டு மாதங்களில் சரியாகிவிடும்' என்று நினைத்து மாதங்கள்தாம் கடந்தன. வேறு ஒன்றும் நடக்கவில்லை...

-  தாம்பத்யக் குறைபாடு என்றவுடனேயே, 'உடல்ரீதியான பிரச்னையாகத்தான் இருக்கும்' என்று நம்பிவிடக் கூடாது என்று உதாரணத்துடன் 'கூடற்கலை' - புதிய பகுதியில் 'காமமும் கற்று மற!' என்று வழிகாட்டலுடன் விவரிக்கிறார், பாலியல் மருத்துவர் கார்த்திக் குணசேகரன். 

கூடற்கலை to நாள் ஒழுக்கம்: டாக்டர் விகடன் 8-ம் ஆண்டு சிறப்பிதழின் 10 அம்சங்கள்!

எண்ணற்ற தடுப்பு மருந்துகள், புதிய ஆராய்ச்சிகள், புதுப்புது மருத்துவ உபகரணங்கள் என மருத்துவத் துறை நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்துகொண்டிருக்கிறது. அதிலும் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு முன்னேற்றமாக இருப்பது தலை முதல் கால்வரையிலான ஒவ்வொரு பாகத்துக்கும் தனித் தனி துறை வல்லுநர்கள் அதிகரித்திருப்பதே. ஆனால், நம்மில் பலருக்கும் எந்தப் பிரச்னைக்கு எந்த மருத்துவரைச் சந்திப்பது என்று தெரிவதில்லை. அதனால் இரண்டு மூன்று மருத்துவர்களிடம் சிகிச்சையெடுத்து, சரியாகாத சூழலில், கடைசியாகத்தான் சரியான துறை மருத்துவரிடம் வந்து சேர்கிறார்கள். இதனால், தேவையற்ற பண விரயமும் அலைச்சலும் ஏற்படுகின்றன. இதுபோன்ற குழப்பங்களுக்குத் தீர்வு காணும்விதமாக, எந்தப் பிரச்னைக்கு எந்த மருத்துவரைச் சந்திக்க வேண்டும் என்பது பற்றி 'எந்தப் பிரச்னைக்கு எந்த மருத்துவர்? - ஒரு வழிகாட்டி' எனும் இணைப்பிதழில் மிகத் தெளிவாக விவரித்திருக்கிறார் 
சென்னை மருத்துவக் கல்லூரி பொது மருத்துவத் துறைப் பேராசிரியர் ரகுநந்தனன்.

கூடற்கலை to நாள் ஒழுக்கம்: டாக்டர் விகடன் 8-ம் ஆண்டு சிறப்பிதழின் 10 அம்சங்கள்!

"...46 குரோமோசோம்கள் எண்ணிக்கையில் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால், அதை அறிந்துகொள்ளும் பரிசோதனைதான் கேர்யோடைப் டெஸ்ட். இன்னும் புரிகிறபடி சொல்ல வேண்டுமென்றால், உலக வரைபடத்தை விளக்கு வெளிச்சத்தில் நுட்பமாக கவனிப்போம் இல்லையா? அப்படி, ஒருவருடைய செல்களில் இருக்கிற 46 குரோமோசோம்களை உற்று கவனித்து அவற்றிலிருக்கிற பிரச்னைகளைக் கண்டுபிடிப்பதுதான் கேர்யோடைப் டெஸ்ட்." - விரிவான விளக்கம் கொடுத்த ரஜனி, எந்தெந்தச் சூழ்நிலைகளில் இந்தப் பரிசோதனை செய்யவேண்டி வரும் என்பதையும் 'தொடர் கருச்சிதைவு... - காரணம் சொல்லும் கேர்யோடைப் டெஸ்ட்' ஹெல்த் ஆர்ட்டிகளில் அவசியமான தகவல்களைத் தந்திருக்கிறார். 

கூடற்கலை to நாள் ஒழுக்கம்: டாக்டர் விகடன் 8-ம் ஆண்டு சிறப்பிதழின் 10 அம்சங்கள்!

''நான் முதன்முறையா கலந்துகிட்ட நீச்சல் போட்டியில, என் பக்கத்துல இருந்த ஒரு பொண்ணு, 'நீ இந்தக் கையைவெச்சுக்கிட்டு ஏன் எங்களோட ஸ்விம் பண்ண ஆசைப்படுறே? உன்னால எங்களுக்கு இணையான  போட்டியாளரா ஆக முடியுமா?'னு கேட்டா. அந்தப் போட்டியில நான் ஜெயிச்சேன். அவ தூரத்துல நின்னு நான் சர்டிஃபிகேட் வாங்குறதைப் பார்த்தா. அப்போதான் 'திறமைங்கிறது உடல்ல இல்லை, மனசுலதான் இருக்கு'னு எனக்குப் பெரிய நம்பிக்கை வந்துச்சு..."

- சென்னை, தாம்பரத்துக்கு அருகேயுள்ள சிட்லபாக்கத்தைச் சேர்ந்த தேஜஸ்வினி, பிறவி மாற்றுத்திறனாளி. ப்ளஸ் டூ மாணவி. ஏழு வயதில் பிஸியோதெரபிக்காக நீச்சல் பழகியவர், இன்று ஆசிய அளவிலான பாரா ஸ்விம்மிங் போட்டிகளில் அசத்திக்கொண்டிருக்கிறார். அன்று, 'ஒரு கையைவெச்சுக்கிட்டு எப்படி நீச்சலடிப்பே?' என்று கேட்டவர்கள் மட்டுமல்ல, தேஜஸ்வினியின் எதிர்நீச்சலை இன்று பல நாடுகளும் ஆச்சர்யமாகப் பார்க்கின்றன. அவர் கடந்து வந்த பாதை 'விட்டுக்கொடுக்காம ஜெயிச்சுடு! - வெற்றிப் பின்னணி சொல்லும் தேஜஸ்வினி' எனும் தலைப்பில் நமக்கு தன்னம்பிக்கையூட்டுகிறது.

கூடற்கலை to நாள் ஒழுக்கம்: டாக்டர் விகடன் 8-ம் ஆண்டு சிறப்பிதழின் 10 அம்சங்கள்!

"எதுவும் செய்ய முடியாத அளவுக்குச் சோர்வாக இருந்தால், என்னிடமிருக்கும் இசைத் தட்டுகளில் ஒன்றைத் தேடி, தேர்ந்தெடுப்பேன். பெரும்பாலும் ஐந்து நிமிடங்கள் ஓடும் ஓர் இசைத்தட்டு. பிறகு, ஒன்று அதன் பின்னர் ஒன்று என்று மாறி மாறிக் கேட்டுக்கொண்டே இருப்பேன். அது இரண்டு நாள்கள், மூன்று நாள்கள் என்று தொடர்வதும் உண்டு. பிறகு மனச் சோர்விலிருந்து விடுபட்டுவிடுவேன். ஒவ்வோர் இசையுமே ஒரு சம்பவத்தின் மூலம்தான் எனக்கு நினைவில் இருக்கிறது. எப்போதெல்லாம் சோர்விலிருந்தேனோ, அப்போதெல்லாம் இசையே என்னை மீட்டுக்கொண்டு வந்திருக்கிறது; எல்லா நோய்மைகளிலிருந்தும் வெறுமைகளிலிருந்தும் விடுவித்திருக்கிறது. எனக்கு இருக்கும் ஒரே வடிகால் இசை..."

- 'எப்போதும் உற்சாகமாக, புத்துணர்ச்சியோடு வலம்வரும் எஸ்.ரா-வுக்கு மனச்சோர்வு ஏற்பட்டால் என்ன செய்வார்?' என்ற கேள்விக்கு 'மனசே மனசே...' புதிய பகுதியில் "சோர்விலிருந்து என்னை மீட்பது இசையே!" என்ற தலைப்பில் விரிவாகவே நம்மிடம் பகிர்ந்திருக்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். 

கூடற்கலை to நாள் ஒழுக்கம்: டாக்டர் விகடன் 8-ம் ஆண்டு சிறப்பிதழின் 10 அம்சங்கள்!

"...உணவுகளில் கட்டுப்பாடு தேவையில்லை. ஓடியாடி சம்பாதிப்பதே மூன்று வேளை சாப்பிடுவதற்குத்தான். அதிகப் புளிப்பான உணவுகளைச் சாப்பிடுவது, எப்போதும் குளிர்ந்த நீரையே குடிப்பது, சிட்ரிக் ஆசிட் நிறைந்த எலுமிச்சைச் சாறு, அதிக காரமான மசாலா, எண்ணெய் அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிடுவது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. வயிறு நிறைய சாப்பிட்டால், சிறிது ஓய்வெடுக்கத் தோன்றும். உடலிலிருக்கும் ஆற்றல் அனைத்தும் சாப்பிட்ட உணவைச் செரிப்பதற்குச் செலவழிந்துவிடும். குறைவாகச் சாப்பிட்டால், செரிமானம் கட்டுப்படுத்தப்பட்டு, கச்சேரியில் பாடுவதற்கு போதுமான ஆற்றல் கிடைக்கும். பாடுவதில் கவனம் செலுத்த முடியும். பாடும்போது மூச்சுவிடுவதும் நம் கட்டுப்பாட்டிலிருக்கும்." 

- "பாடகர்களுக்கு சாரீரம் மட்டுமல்ல... சரீரமும் முக்கியம்!" என்று 'உடலுக்கும் தொழிலுக்கும்' எனும் புதிய பகுதியில் அனுபவம் பகிர்கிறார் சுதா ரகுநாதன்

கூடற்கலை to நாள் ஒழுக்கம்: டாக்டர் விகடன் 8-ம் ஆண்டு சிறப்பிதழின் 10 அம்சங்கள்!

குறட்டைச் சத்தம் மூக்கிலிருந்து வந்தால், சுவாசப்பாதையை சற்று விரிவுபடுத்தலாம். அதன்மூலம் காற்று மெதுவாகச் செல்லும் என்பதால், குறட்டையைத் தடுக்க முடியும். சளி, மூக்கடைப்பு ஏற்பட்டிருந்தால், மூக்கினுள்ளே காற்று வேகமாகச் செல்லும்போது, அது தடைபட்டு, குறட்டைச் சத்தத்தை எழுப்பும். அது போன்ற நேரங்களில் இரவு தூங்குவதற்கு முன்னர் வெந்நீர்க் குளியலுடன், உப்பு கலந்த நீரில் மூக்குப் பகுதியைக் கழுவினால் மூக்கடைப்பு நீங்கும்.

- குறட்டை, சாதாரண பிரச்னை அல்ல. அது, தனிநபருக்கு மட்டுமின்றி, சுற்றியுள்ளவர்களுக்கும் பெரும் தொந்தரவு தருவது. இயற்கையாக குறட்டைக்குத் தீர்வுகாண எளிய வழிகளைச் சொல்கிறது, 'குறட்டையை விரட்ட நல்ல தூக்கம் போதும்!' எனும் டிப்ஸ் ஆர்ட்டிகிள்.

கூடற்கலை to நாள் ஒழுக்கம்: டாக்டர் விகடன் 8-ம் ஆண்டு சிறப்பிதழின் 10 அம்சங்கள்!

 'நாம எல்லாருமே உடம்புக்கு முடியாம காய்ச்சல், தலைவலினு வந்தா, அதுக்கு ஏத்த மாதிரி மாத்திரை, மருந்து எடுத்துக்கிட்டு நம்ம தினசரி வேலைகளைப் பார்க்க ஆரம்பிச்சுடுறோம். ஆனா, அசதினு வரும்போது, ரெஸ்ட் எடுக்காம, ஏதோ ஒண்ணைச் செஞ்சுட்டு, அதைக் கண்டுக்காம தாண்டிப்போயிடுறோம். உடலுக்கு நியாயமா கிடைக்கவேண்டிய ஓய்வைக் கொடுக்கலைன்னா, அது அதிகமா ஓடின கார் டயர் மாதிரி ஒரு நாள் பஞ்சர் ஆகி, நம்மை நடு ரோட்டுல நிறுத்தாம விடாது.'

- அசதிகள் ஒரு மனிதனுக்கு  தனித் தனியாகவோ அல்லது ஒன்றுடன் ஒன்று இணைந்தோ தொல்லை கொடுக்கலாம். பல்வேறு நோய்களுக்கு அச்சாரமே அசதிதான் என விவரிக்கும் 'ஓய்வெடுப்பதும் ஓர் உடற்பயிற்சியே!' எனும் ஹெல்த் ஆர்ட்டிகிள் ஆதாரபூர்வமாகவும் அனுபவபூர்வமாகவும் தீர்வுகளை முன்வைக்கிறது.
 

கூடற்கலை to நாள் ஒழுக்கம்: டாக்டர் விகடன் 8-ம் ஆண்டு சிறப்பிதழின் 10 அம்சங்கள்!

பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, 'நோயில்லா நெறி' அல்லது 'நோய் அணுகா விதி' என்ற கோட்பாட்டில் கால ஒழுக்கம், நாள் ஒழுக்கம் ஆகிய நெறிமுறைகளைச் சித்த மருத்துவம் வகுத்திருக்கிறது. அவற்றை சரியாகப் பின்பற்றினால், நோய் நெருங்கா வாழ்வு நம் வசமாகும். முதலில் நாள் ஒழுக்கத்தையும், அதன் பிறகு கால ஒழுக்கத்தையும் பார்ப்போம். நாள் ஒழுக்கத்தில் நாம் தினமும் படுக்கையிலிருந்து எழுந்து, மீண்டும் படுக்கைக்குச் செல்லும்வரை ஒரு நாளையில் பின்பற்றவேண்டிய வழிமுறைகள் என்னென்ன என்பது பற்றித் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது சித்த மருத்துவம். அதன்படி, அதிகாலையில் விழித்தெழுதல் என்பது அவசியமாகும்.

- சித்த மருத்துவம் வகுத்துள்ள நாள் ஒழுக்கம் நெறிமுறைகள் குறித்து இன்னும் விரிவாக 'நோய்நாடி நோய்முதல் நாடி' எனும் தலைப்பில் 'வாழ்வியல்' - புதிய தொடரில் விவரிக்கிறார், சித்த மருத்துவர் வேலாயுதம். 

இந்த வார டாக்டர் விகடன் இதழை வாங்க... இந்த லிங்க்கை க்ளிக் பண்ணுங்க:  https://bit.ly/2BTv914

அடுத்த கட்டுரைக்கு