Published:Updated:

உயிருக்குப் போராடும் விவசாயியின் மகன் #NeedHelp  

உயிருக்குப் போராடும் விவசாயியின் மகன் #NeedHelp  
உயிருக்குப் போராடும் விவசாயியின் மகன் #NeedHelp  

பெரியவர்களை விடவும் குழந்தைகள்தான் அதிகளவில் ரத்தசோகையால் பாதிக்கப்படுகின்றனர் என்று உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 51% குழந்தைகள் அனீமியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக, கடந்த (2017) ஆண்டு ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ரத்தசோகை நோய்கள் பலவகைகள் உள்ளன. அதில் தீவிரமடைந்து பெரியளவு பாதிப்பைக் கொடுக்கும் ரத்தசோகை நோயால், 10 வயது ஹர்ஷன் பாதிக்கப்பட்டிருக்கிறான். 

உயிருக்குப் போராடும் விவசாயியின் மகன் #NeedHelp  

ஹர்ஷனுக்கு வந்திருப்பது `Fanconi Anemia' (ஃபேன்கானி அனீமியா). இது குறிப்பாக எலும்பு மஞ்சையை தாக்கக்கூடியது. அனைத்து ரத்த அணுக்களின் உற்பத்தி குறைந்துவிடுவதே, இத்தாக்குதலின் முடிவாக இருக்கும். அதற்கு சிகிச்சை அளிக்காவிட்டால் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்பு அதிகம். ஆகையால் ஹர்ஷன் உயிர்வாழ்வதற்கு உடனடியாக எலும்பு மஞ்சை மாற்று சிகிச்சை தேவைப்படுகிறது. 10 மாதங்களுக்கு முன்னர் இருந்துதான் ஹர்ஷனின் நிலைமையை கூர்ந்து கவனிக்கத் துவங்கியுள்ளனர் அவனது பெற்றோர். ஏனெனில் அவனுக்கு ஏற்படும் ஒரு சிறிய காயத்திலிருந்துகூட நிற்காமல் ரத்தம் வெளியேறிக் கொண்டிருக்கும்.அவ்வாறு ஒரு நாள் ஹர்ஷன் ஈறுகளில் இருந்து காரணமே இல்லாமல் நீண்ட நேரம் ரத்தம் வந்துகொண்டிருந்தது. இதனால் பதறியடித்து ஹர்ஷனின் பெற்றோர் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே ஹர்ஷன் சிறிது நினைவை இழந்துவிட்டான். 

``மருத்துவ டெஸ்ட் எடுத்தபிறகு ஹர்ஷனுக்கு ரத்த அணுக்கள் மிகவும் குறைவாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். என்னுடைய கணவரும் நானும், உடனடியாக அவனுக்கு ரத்த மாற்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அட்மிட் செய்தோம்  தொடர்ந்து அவனுக்கு பல்வேறு டெஸ்ட்கள் எடுக்கப்பட்டன. அப்போது அவன் ஒரு அரிய ரத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினர். அது ரத்த அணுக்களை உற்பத்தி செய்யவிடாமல் தடுக்கக்கூடிய கொடிய நோய் என்றும் தெரிவித்தனர். ஒவ்வொரு நிமிடமும் டெஸ்ட் ரிப்போர்ட்டுக்காக காத்திருக்கும்போது, நரகத்தில் இருப்பதுபோன்ற உணர்வைக் கொடுக்கும். ஒவ்வொரு முறையும் ஊசிப்போடுகையில் என் மகன் கதறி அழுவதை பார்த்து சகித்துக்கொள்ளும் சக்தியில்லை. இருப்பினும் தந்தையைப் பார்த்தவுடன், வலியை மறந்து கட்டியணைத்துக்கொண்டு சிரிப்பான்" என்று ஹர்ஷனின் தாயார் ராதிகா அழுகுரலுடன் தனது வேதனையை கூறியுள்ளார். 

உயிருக்குப் போராடும் விவசாயியின் மகன் #NeedHelp  

கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாராவாரம் ஹர்ஷனுக்கு ரத்தம் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. ரத்த அணுக்கள் குறைந்தாலும், ரூ.5000 செலவு செய்து ஒவ்வொரு முறையும் ரத்த மாற்றம் செய்யப்பட்டது. விவசாய தொழிலில் ஹர்ஷனின் தந்தை செந்தில் குமாருக்கு கிடைக்கும் அனைத்து வருமானமும் விவசாயக் கடனுக்கே சரியாக இருக்கிறது. தவிர காட்டன் மில்லில் பணிபுரியும் ராதிகாவுக்கு தினமும் ரூ.200 மட்டுமே கிடைக்கிறது. ஏற்கெனவே விவசாயக் கடன், அதனுடன் தற்போது மருத்துவச் செலவுக்காக பேங்கில் வாங்கிய கடன் என ஹர்ஷனின் குடும்பம் கடனில் தவித்துக் கொண்டிருக்கிறது. இதில் எப்படி ஹர்ஷனின் சிகிச்சைக்கு தேவையான ரூ. 10,00,000-ஐ அவர்களால் ஏற்பாடு செய்ய முடியும் என்று நினைக்கும்போதே மனம் வேதனையில் துடிக்கிறது. 

நாம் உயிர்வாழ உணவு கொடுப்பவர்கள் விவசாயிகள். தற்போது அந்த விவசாயி உயிராக நினைக்கும் மகனின் உயிரைக் காப்பாற்ற வேண்டும். ஹர்ஷனுக்கு உதவி செய்ய 'EDUDHARMA' இணையதள நிறுவனம் முன்வந்துள்ளது. EDUDHARMA-வால் மட்டும் இதை செய்துவிட முடியாது என்பதால், ஒரு விவசாயக் குடும்பத்தை மீட்கும் முயற்சியில் அனைவரும் இறங்க வேண்டும் என்பதே EDUDHARMA-வின் விருப்பம். எனவே, ஒரு விவசாயியின் எதிர்காலமான ஹர்ஷனின் உயிரைக் காப்பாற்ற அனைவரும் முன்வாருங்கள். முடிந்தவரை இச்செய்தியை பகிர்ந்து உதவிக்கரம் நீட்டுங்கள்.  

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை Edudharma- வின் விளம்பரதாரர் பகுதி. இதில் கூறப்பட்டுள்ள உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பல்ல. மேலும், வாசகர்கள் இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம். நன்கொடை செய்வதற்கு முன்னர் வாசகர்கள் உண்மைத்தன்மையை சுயாதீனமாக சரிபார்த்துக் கொள்ளவும்.